Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சல்லி சல்லியா போன "சாதி" வியூகம்.. திமுகவின் "சம்மட்டி அடி".. 2026 தேர்தலில் அதிமுகவுக்கு கஷ்டம் போல

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்கிரவாண்டி தேர்தல் முடிவுகளை வைத்து பார்த்தால், வரப்போகும் பொதுத் தேர்தலிலும், எதிர்க்கட்சிகளின் வியூகம் படுதோல்வியடைந்துவிடுமோ? என்று யூகிக்கக்கூடிய அளவுக்கு உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, இன்று வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்தே முன்னிலையில் வகித்து வந்தார்..

Vikravandi by election DMK PMK AIADMK

முன்னிலை திமுக: அதாவது, ஓட்டு எண்ணிக்கை ஆரம்பித்த சற்று நேரத்திலேயே, 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக முன்னிலையில் வகிக்கும் அளவுக்கு சென்றது.. இப்படியொரு வித்தியாசத்தை பார்த்ததுமே திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள்.

இப்போது விக்கிரவாண்டியில் திமுக அபார வெற்றியை பெற்றுள்ளது.. இந்த வெற்றியானது திமுகவுக்கு பெருத்த பலத்தையும், அடுத்தடுத்து வரப்போகும் தேர்தலுக்கு உத்வேகத்தையும் தந்து வருகிறது. வழக்கமாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சியே பிரதான வெற்றி பெறும் என்பது எழுதப்படாத நடைமுறையாக தமிழகத்தில் இருந்து வந்தாலும், இந்த விக்கிரவாண்டியை அப்படி கருதிவிட முடியாது.

விக்கிரவாண்டி: இதற்கு காரணம், வடமாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதி என்பதால், பாமகவுக்கான செல்வாக்கும் இங்கு அதிகமாகவே இருக்கிறது.. இந்த இரு திராவிட கட்சிகளுமே, ஒவ்வொருமுறையும் தேர்தலின்போது பாமகவை கூட்டணியில் சேர்க்க முயல்வதற்கு காரணமும் இந்த வடமாவட்டத்தில் பாமக பெற்றுள்ள செல்வாக்குகள்தான்.

எனவே, திராவிட கட்சிகளைவிட மவுசு பாமகவுக்குதான் இங்கு அதிகம் என்பதால், இந்த விக்கிரவாண்டி தேர்தல் திமுக Vs பாமகவுக்கான தேர்தலாகவே கருதப்பட்டது.

வலுவான பாமக: அதனால்தான், வலுவான வாக்கு வங்கி வைத்திருக்கும் பாமகவுக்கு, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகி பாஜக ஆதரவை தந்தது.. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால், இந்த முறையும், தங்களுக்கான ஆதரவை அதிமுகவிடம் பாமக உரிமையாகவே கேட்டு பெற்றது..

அதனால்தான் நேற்று நடந்த அதிமுக கூட்டத்திலும், பாமகவுடன் கூட்டணி வைத்திருந்தால் அரக்கோணம் போன்ற தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும் என்று நிர்வாகிகள் எடப்பாடியிடம் சொன்னார்களாம். ஆனாலும், இன்று நடந்துள்ள விக்கிரவாண்டி முடிவை பார்த்தால், அடுத்த பொதுத்தேர்தல் வியூகமும் தவிடுபொடியாகிவிடுமோ? என்றே தோன்றுகிறது.

பாமக, பாஜக, அதிமுக போன்ற அனைத்துமே ஒன்றிணைந்தாலும், திமுக கூட்டணிக்கு முன்பு பலவீனமாகவே தற்சமயம் உள்ளது.. இத்தனைக்கும் ஆளும் கட்சி மீது, தற்போது பொதுமக்களுக்கு அதிருப்திகள் உள்ளன, விமர்சனங்கள் உள்ளன, சில ஏமாற்றங்களும் இருக்கவே செய்கின்றன.. அதிலும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகார அதிர்ச்சியிலிருந்து பொதுமக்கள் இன்னும் மீளவேயில்லை.. அப்படியிருந்தும்கூட, திமுகவின் அசுர பலத்தின் வெற்றியானது, எதிர்க்கட்சிகளை இன்று அதிர வைத்து வருகிறது.

பலவீனமான கூட்டணி: இதற்கெல்லாம் என்ன காரணம்? கடந்த சட்டமன்ற தேர்தலாகட்டும், லோக்சபா தேர்தலாகட்டும், அதிமுக மண்ணை கவ்வ காரணமே, அதன் பலவீமான கூட்டணிதான் என்றார்கள் அரசியல் விமர்சகர்கள்..

அந்தவகையில், வடமாவட்டத்தில் தேர்தல் நடந்தபோதும் பாமக, இன்று விக்கிரவாண்டியில் மண்ணை கவ்வியிருக்கிறது.. அதிமுக மூத்த தலைவர் சிவி சண்முகம் போன்றவர்கள் விழுப்புரத்தில் இருந்தும்கூட இன்று மண்ணை கவ்வியிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போட்டோவை அனைத்து கட்சிக்காரர்கள் முன்னிறுத்தி ஓட்டு கேட்டும் இன்று மண்ணை கவ்வியிருக்கிறது.

நாம் தமிழர்: எனவே வலுவான கூட்டணியை கட்டமைக்க இனிமேல், அதிமுக மேலிடம் அதீத முயற்சி மேற்கொள்ளும் என்று நம்பப்படுகிறது. அதிலும் பாமகவுடனேயே அதிமுக கூட்டணி வைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கணிக்கப்படுகிறது. அதைவிட முக்கியமாக, சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைத்தால், திமுக ஓட்டுக்களை எளிதாக பிரிக்கலாம் என்ற பேச்சும் அதிமுகவில் திடீரென கிளம்பியிருக்கிறது.

மொத்தத்தில், அதிமுக, பாஜக, பாமக ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தால், 2026ல் வெல்ல வாய்ப்பு இருக்குமா என்பதற்கான பரீட்சார்த்த முயற்சியாகவே இந்த விக்கிரவாண்டி தேர்தலை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+