"மிஸ்டர் கிளீன்".. பட்டென திரும்பிய அமித்ஷா.. 10 பேர் ரெடியாமே.. திமுகவுக்கு "வழிவிடும்" எடப்பாடி?
எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்துவிட்ட பரபரப்பு இன்னமும் குறையாத நிலையில், அடுத்தக்கட்டமாக என்ன நகர்வு இரு தரப்பிலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது, என்ன பேசினார்கள் என்பது குறித்து சில தகவல்கள் கசிந்தன..
அந்தவகையில், திமுக அமைச்சர்கள் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட தகவல்கள், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சூழல்கள் ஆகியவைகள் அடங்கிய ஃபைல்களை அமித்ஷாவிடம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி...

இன்கம்டாக்ஸ்
இதை வைத்து இன்கம் டாக்ஸ் ரெய்டுகளை மத்திய அரசு துவக்க வேண்டும் என்று கூடுதலாக ஒரு கோரிக்கை வைத்தாராம்.. அதைக் கேட்டுக்கொண்ட அமித்ஷா, சரி, செக் பண்ணுகிறோம் என்று மட்டும் சொல்லியிருக்கிறார் போலும். ஆனால், இது தொடர்பாக மேலும் ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. திமுகவை பற்றின புகார்கள் நிறைய தந்தாலும், அந்த முக்கிய அதிகாரி குறித்து, பிரத்யேகமாக புகார் கூறப்பட்டதாம்.. பெயரில் பிறை கொண்ட அந்த அதிகாரிதான், எஸ்பி வேலுமணி உள்ளிட்ட மாஜிக்களிடம் ரெய்டு நடத்த பிரதான காரணம் என்பதால், அவரையே டார்கெட் செய்து புகாராக அமித்ஷாவிடம் வாசிக்கப்பட்டதாம்.

மிஸ்டர் கிளீன்
மிஸ்டர் கிளீன் என்று சொல்லப்படும் அளவுக்கு, மிக நேர்மையான அந்த அதிகாரி, திமுக தலைமைக்கு நம்பிக்கையானவர்.. முதல்வர் ஸ்டாலினே இந்த பொறுப்பை அவருக்கு ஒதுக்கி தந்திருந்தார்.. அதற்கேற்றபடி, அந்த அதிகாரி & டீம் சாட்டையை சுழட்டி கொண்டிருக்கிறது. அதனால்தான், அந்த அதிகாரியின் பெயரை வெளிப்படையாகவே அமித்ஷாவிடம் சொல்லி, அவரை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள், திமுக தரப்புக்கு நெருக்கடி தர வேண்டும் என்று இன்னொரு கோரிக்கையும் வைத்தார்களாம்..

10 மா.செ.க்கள்
அமித்ஷாவிடம் பல புகார்கள் இப்படி தந்துள்ள நிலையில், எடப்பாடி டீம் படுகுஷியில் உள்ளதாம்.. இப்போது கட்சிக்குள் அடுத்தடுத்த வேலையிலும் இறங்கிவிட்டதாம்.. அநேகமாக நாளை, அதிமுக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டத்தில் நிறைய புது அதிரடிகள் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.. மேலும், அடுத்த மாதம் முதல் வாரத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்தல் அட்டவணையை வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.. அன்றைய தினம் 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தால் மட்டும் போதுமாம்.. எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படக்கூட வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.

டவுட்
எனினும், இதெல்லாம் சாத்தியமா? பாஜக அந்த அளவுக்கு விட்டுவிடுமா? அதிமுக தலைவர்கள் இணையவே மாட்டார்களா? திமுக இந்த விஷயத்தை எப்படி அணுகுகிறது என்றெல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.. அந்தவகையில் இந்த சந்தேகங்களை எல்லாம் நாம் சில அரசியல் நோக்கர்களிடம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இவைகள்தான்:

இலை & தலை
அதிமுக சின்னம் எடப்பாடி பழனிசாமியிடம் போகப்போகிறதா? அல்லது முடக்கம் செய்யப்படுமா? என்று தெரியவில்லை.. அதேசமயம், சின்னம் முடக்கப்பட்டுவிடாது என்பதையும் உறுதியாக சொல்ல முடியாது.. அந்தவகையில் அதிமுகவுக்கு சிக்கல் நீடிக்கும்.. ஒருவேளை வரும் தேர்தலில் எடப்பாடியும், ஓபிஎஸ்ஸும் தனித்தனியாக களமிறங்கினால், முக்குலத்தோர், கொங்குகள் வாக்குகள் பிரியும் சூழலில், இது திமுகவுக்கு சாதகமாக அமையும்.. அப்போது திமுகவின் கூட்டணி நிலைப்பாடு மாறலாம்.

பாஜக + திமுக
காங்கிரசுக்கு எதுக்காக, 10 சீட், 12 சீட் தரவேண்டும் என்று நினைத்து, கூட்டணியில் இருந்து அக்கட்சியை திமுக கழட்டிவிட்டாலும் ஆச்சரியமில்லை.. இதைதான் பாஜக மேலிடமும் எதிர்பார்க்கிறது.. எடப்பாடி + ஓபிஎஸ் இருவருக்கும் சப்போர்ட் செய்வதைவிட, கண்டுகொள்ளாமல் ஒதுங்கி இருக்கும்பட்சத்தில், காங்கிரஸை திமுக நிச்சயம் கூட்டணியில் கழட்டிவிடும் என்று பாஜக கணக்கு போடுகிறது.. அதனால்தான், அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கண்டுகொள்ளாமலும் இருக்கிறது.. எடப்பாடி பழனிசாமி பிடிவாதத்தினால், அதிமுகவுக்கு கிடைக்கும் நன்மையைவிட, பாஜக + திமுகவுக்கு கிடைக்கும் நன்மைதான் அதிகம்" என்றனர்.












Click it and Unblock the Notifications