அண்ணாமலைக்காக ஓடோடி வந்த பிரபலம்.. சொல்வதெல்லாம் உண்மை.. கடைசிவரை திமுகவே ஜென்மவிரோதி ஜெயலலிதாவுக்கு
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்தான் என தமிழக பாஜக மீண்டும் தெரிவித்துள்ளது... இதைக்கேட்டு அதிமுக மீண்டும் எரிச்சலடைந்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனைவரையும்விட உயர்ந்த இந்துத்துவா தலைவராக இருந்தார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
பேட்டி: ஒரு சேனலுக்கு பேட்டி தந்திருந்த அண்ணாமலை, "தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. ஜெயலலிதா தன்னுடைய இந்து அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டினார்.. அவர் மிகச்சிறந்த இந்துத்துவா வாதியாக இருந்தார்" என்று கூறியிருந்தார்.

அதுபோலவே, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் "இந்துத்துவா தலைவர் ஜெயலலிதா, இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.. கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர்.. ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார்" என்றார்.
கண்டனம்: அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு, கண்டனம் தெரிவித்த விகே சசிகலா, ஜெயலலிதாவை குறுகிய வட்டத்திற்குள் யாரும் அடைக்க முடியாது என்று காட்டமான பதிலடியை தந்திருந்தார்.. அதேபோல, அதிமுகவில் மூத்த தலைவர் ஜெயக்குமாரும் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.
எனினும் மீண்டும் ஜெயலலிதா குறித்த தன்னுடைய கருத்துக்களை அழுத்தி சொன்னார் அண்ணாமலை.. கர சேவை குறித்து பேசிய ஜெயலலிதா அது தவறு இல்லை என்றும், ஜெயலலிதா இந்துத்துவாவாதி இல்லை எனக் கூறும் அதிமுகவினர் என்னுடன் விவாதம் நடத்த தயாரா?" என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.
பாஜக பதிலடி: இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு, பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் பதிலளித்திருக்கிறார்.. இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில் உள்ளதாவது:
"முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் கருத்தை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. வி.கே.சசிகலாவோ, ஜெயலலிதாவுக்கு தெய்வ நம்பிக்கை இருந்தது. இந்து மத நம்பிக்கை இருந்ததில்லை என கூறியுள்ளார்.
எனக்கு இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை இருக்கிறது. ஆனால், கிறிஸ்தவ மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என யாரும் சொல்ல மாட்டார்கள். ஜெயலலிதா இந்து மதத்தை தீவிரமாக பின்பற்றியவர். சிறுபான்மையினர் வாக்கு வங்கிக்காக பெரும்பான்மை இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சுட்டிக்காட்ட தயங்காதவர்.
மதமாற்றம்: ராமர் கோயில், பொதுசிவில் சட்டம், மதமாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகளில் பாஜகவின் கருத்தையே ஜெயலலிதாவும் கொண்டிருந்தார். முதல்வர்கள் மாநாட்டிலும் அதை பதிவு செய்யஅவர் தயங்கியதில்லை. ஜெயலலிதாவால் தனது இந்துத்துவ கொள்கைகளை செயல்படுத்த முடியாமல் போனது. அதற்காக அவர் இந்துத்துவ தலைவர் இல்லை என்றாகி விடுமா?
2011-ல் ஆட்சிக்கு வந்த உடனேயே தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை 1-ம் தேதிக்குமாற்றினார். குஜராத் கலவரத்துக்குப் பிறகு எதிர்க்கட்சிகளின் பொய்பிரச்சாரத்தால் கடும் எதிர்ப்பு எழுந்தபோதும் நரேந்திர மோடி முதல்வராக பதவியேற்ற விழாவுக்கு மூன்று முறை நேரில் சென்று வாழ்த்தினார்.
ஜெயலலிதா: ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என்பதால்தான் இந்துக்களின் எதிரியான திமுகவை கடைசிவரை ஜென்ம விரோதியாகவே பார்த்தவர். எனவே, அண்ணாமலை உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்.
இந்துத்துவா என்பதுஉலகம் முழுவதும் வரவேற்கப்படும் அற்புதமான வாழ்வியல் நெறிமுறை. சில மதப் பிரிவினைவாத தீய சக்திகள், இந்து தலைவர்கள் என்றால் ஏதோ மதவெறி பிடித்தவர்கள் போல வாக்கு அரசியலுக்காக செய்யும் தவறான பிரச்சாரத்துக்கு முடிவு கட்டும் காலம் வந்துவிட்டது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக வாக்கு: மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவை, இழுத்து கொண்டுவந்து பாஜகவினர் கருத்து கூறிவருவது அதிமுகவை கடுப்பாக்கி உள்ளது.. அதிமுகவினரை பாஜகவுக்குள் இழுக்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறதாம்.












Click it and Unblock the Notifications