Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கருணாநிதி".. மாறன் சொத்து பாருங்க.. எனக்கு ஒன்னு ஞாபகம் வருது.. குதித்து வந்த எச்.ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று முக்கிய கோரிக்கையை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விடுத்துள்ளார்... இதற்கான காரணத்தையும் எச்.ராஜா சொல்லி உள்ளார்.

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அதிமுகவைவிட, பாஜகதான் பிஸியாக காணப்படுகிறது.. நேற்றிரவு முதலே, இது தொடர்பான விவகாரங்களை வெளியிட்டும், கருத்து சொல்லி வருகிறார்கள்.

Can AIIMS doctors treat Senthil Balaji and What does bjp senior leader H Raja say

அறிவாலயம்: பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ட்வீட்களை பதிவிட்டு திமுகவை சாடியிருந்தார்... "செந்தில்பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டத்திற்குட்பட்டு நடந்து கொள்வது தான் நல்லது. இல்லையேல் அறிவாலயத்தில் மானம் சந்தி சிரிக்கும். அ.ராசா, கனிமொழி கைதுகளின் போது கூட இவ்வளவு அலப்பறை இருக்கவில்லை.

அய்யய்யோ: ஆனால், இப்போது திமுக நடத்தும் நாடகம் வெட்கக்கேடானது.. திராவிட மாடல்.. திரைக்கதை, வசனம், நடிப்பு சுமார் தான். "அய்யோ அய்யய்யோ.. கொலை பண்ணுறாங்க..." என்ற காட்சி இடம் பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்" என்று அடுத்தடுத்த ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.. இதைதவிர வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

அதில், "விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது செந்தில் பாலாஜியின் கடமை. வெட்கமாக இல்லை? போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, சாதாரண மக்களிடம் லஞ்சம் வாங்கி ஏமாற்றிய ஒரு நபருக்கு இப்படிப்பட்ட ஒரு ஆதரவா? தலைகுனிய வேண்டிய சூழ்நிலையிலே தமிழகம் இருக்கிறது. முதலமைச்சர் அவர்களே, சட்டத்திற்குட்பட்டு, உங்களுடைய கட்சியினரை நடக்க வையுங்கள். செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து தூக்கி எறியுங்கள். அதுதான் திமுகவிற்கும், தமிழகத்திற்கும் நல்லது" என்றார்.

கஸ்தூரி ட்வீட்: இதற்கு நடுவில் கஸ்தூரி வந்து, சில புதிய பழமொழிகளின் ட்வீட்களை போட்டு, கிண்டலடித்து சென்றிருந்தார். "நான் நான் நானேதான்.. பின்னே மண்டபத்துல யாரும் எழுதி குடுத்தாங்களா என்ன? முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே... இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக... பிரிக்க முடியாதது அரசியல்வாதியும் நெஞ்சுவலியும். பிரிய கூடாதது பாட்டிலும் பத்து ரூபாயும்" என்றெல்லாம் கஸ்தூரி பதிவிட்டிருந்தார்.

இந்த லிஸ்ட்டில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் இணைந்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எச்.ராஜா புதிய கோரிக்கையையும் விடுத்துள்ளார். காரைக்குடியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து எச்.ராஜா சொன்னதாவது:

தலைமை செயலகம்: "வருமான வரித்துறையினரின் சோதனையில் கிடைத்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில்தான் அமலாக்கத் துறையினர் 2 நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிலும், அலுவலகத்திலும், தலைமைச் செயலகத்திலும் சோதனை செய்து அவரை கைது செய்தனர்.. ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பற்ற தன்மையில் பேசுகிறார்.

மத்திய அரசுக்கு எதிராக பேசினால் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். கருப்பு பலூன் விடவில்லை? கோ பேக் மோடி சொல்லவில்லை? ஒன்றிய அரசு என்று மத்திய அரசை இழிவுபடுத்தி பேசவில்லை? ஆனால், நவீன் பட்நாயக் அந்த மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இருக்கிறார்.. இப்போது நடப்பதை பார்க்கும்போது 20 வருடங்களுக்கு முன்பு உள்ள கருணாநிதியின் கைது ஞாபகத்திற்கு வருகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று மாலை பத்திரிகையாளர்களை சந்தித்தாரே? இதனால்தான் சந்தேகம் உள்ளது.

சந்தேகம் வருகிறது: அதனால், செந்தில் பாலாஜிக்கு எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் உண்மை தெரிய வரும். செந்தில் பாலாஜி நான் லஞ்சம் வாங்கினேன், வாங்கிய பணத்தைத் திருப்பி கொடுத்து விட்டேன் என்று சொன்னதால், தமிழ்நாடு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று தள்ளுபடி செய்யப்பட்டது...

சுப்ரீம்கோர்ட் 25 நாட்களுக்குள் விசாரணை செய்து அறிக்கை செய்ய வேண்டும், இல்லை என்றால் சுப்ரீம்கோர்ட்டே இந்த விசாரணையை செய்யும் என்று சொன்னபிறகுதானே, இந்த சோதனை நடந்திருக்கிறது?

கருணாநிதிக்கு எவ்வளவு சொத்து இருந்தது? மாறன் குடும்பத்திற்கு எவ்வளவு சொத்து இருந்தது? முதல்வர் மருமகன் சபரீசனுக்கு முப்பது ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது. இதையெல்லாம் நான் சொல்லல.. அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொன்னார்... பாஜக சொல்லவில்லை.. திமுக மீது, திமுக அமைச்சர்களாலேயே குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார் மூத்த தலைவர் எச்.ராஜா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+