சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"லாக்" பண்ணிட்டாங்களா.. அதிமுக + பாமக + பாஜக + அமமுக.. வேற ரூட் எடுக்கும் எடப்பாடி.. என்னாது சீமானா?

ஸ்டாலினுக்கு போட்டியாக தன்னை நிலைநிறுத்தி கொள்ள முயல்கிறாராம் எடப்பாடி பழனிசாமி

Google Oneindia Tamil News

சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில், ஸ்டாலினுக்கு போட்டியாக தான் மட்டுமே அரசியல் களத்தில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக, ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

ஒரே நாடு - ஒரே தேர்தல் நடத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமியின் கருத்தை அறியும் வகையில், அவருக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது.. மத்திய அரசின் சட்ட ஆணையம் எழுதியிருந்த இந்த கடிதத்தில், எடப்பாடி பழனிச்சாமியை, பொதுச்செயலாளர் என்று பிரத்யேகமாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல, "அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்" ஆகிய இருவருமே இந்த செயல்முறை விளக்க கூட்டத்தில் பங்கேற்கவேண்டும் என்று தமிழக தேர்தல் அதிகாரியும் நேற்றைய தினம் கடிதம் எழுதியிருக்கிறார்.. இந்த கடிதங்கள் எதைக்காட்டுகின்றன? அதிமுக தலைவர்களை பாஜக எப்படி கருதுகிறது? கூட்டணி கணக்குகள் என்ன? என்பது குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன்துரைசாமியிடம் கேட்டோம்.

தூற்றுவோர் தூற்றட்டும்.. எடப்பாடி பற்றி கவலையில்லை.. பகவத் கீதையை மேற்கோள் காட்டிய ராஜகண்ணப்பன்! தூற்றுவோர் தூற்றட்டும்.. எடப்பாடி பற்றி கவலையில்லை.. பகவத் கீதையை மேற்கோள் காட்டிய ராஜகண்ணப்பன்!

ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

நம் ஒன் இந்தியா தமிழுக்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த ஸ்பெஷல் பேட்டியின் சுருக்கம்தான் இது: "இந்த முறையும், பிரதமர் வேட்பாளர் மோடிதான் என்பதில் பன்னீர் செல்வம் உறுதியாக இருக்கிறார்.. டிடிவி தினகரனும் அதே உறுதியில்தான் இருக்கிறார்.. இதில், தினகரனை பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணி மீது ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்தது.. ஏதாவது ஒரு தேசிய கட்சியுடன் கூட்டணி என்றே சொல்லி வருகிறார்.. ஆனால், தற்போதும் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதை பார்த்ததால்தான், தினகரன் பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகி உள்ளதாக தெரிகிறது.

 ஓபிஎஸ் + எடப்பாடி

ஓபிஎஸ் + எடப்பாடி

ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிசாமி கட்சியை விட்டு நீக்கினதே, பாஜகவை அடுத்து நீக்கிவிட வேண்டும் என்பதால்தான்.. திமுக அணியை எதிர்கொள்ள, 15 சதவீத பலமுள்ள எடப்பாடி பழனிசாமி தேவை என்பதை பாஜக உணர்ந்துள்ளது.. இதுதான் பாஜகவின் அப்போதும் இப்போதும் உள்ள நிலைப்பாடு.. ஓபிஎஸ் + எடப்பாடி இருவருமே தேவை என்பதுதான் பாஜகவின் ஒரே முடிவாக உள்ளது.. ஜி20- மாநாட்டுக்கு அழைப்பதும், இடைக்கால பொதுச்செயலாளர், பொதுச்செயலாளர் என பதவிகளை குறிப்பிடுவது எல்லாமே எடப்பாடியும் தேவை என்பதால்தான்.. ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி அளவுக்கு செல்வாக்கு இல்லை என்றாலும், ஓபிஎஸ இல்லாத அதிமுக சாத்தியம் இல்லை என்றும் பாஜக நனைக்கிறது.

 லாக் ஆகிட்டாரா

லாக் ஆகிட்டாரா

எடப்பாடியை எப்படியும் லாக் செய்ய பார்க்கிறார்கள் மேலிட தலைவர்கள்.. அதனாலேயே அரவணைத்து கொண்டு போக முனைகிறார்கள்.. அமைப்பு ரீதியாக எடப்பாடி பலமாக இருக்கிறாரே தவிர, மக்கள் செல்வாக்கு என்ன என்று தெரியவில்லை.. அது 2024 -ல்தான் முடிவாகும். சிவி சண்முகம்தவிர, தங்கமணி, வேலுமணி ஆதரவு தங்களுக்கு உள்ளது என்று பாஜக நினைக்கிறது.. மேலும் பாமகவும் தங்களுடன் வந்துவிடும் என்றம் நம்புகிறது.. பாமக + எடப்பாடி + தினகரன் + ஓபிஎஸ் இவர்களை வைத்தே கூட்டணியை கணக்கு போடுகிறது பாஜக.

 10 பைசா செலவு

10 பைசா செலவு

எடப்பாடி இதற்கு குறுக்கே நிற்கிறார்.. அவரது உள்நோக்கமே, ஸ்டாலினுக்கு போட்டியாக தமிழகத்தில் வரவேண்டும் என்பதுதான்.. பாஜக சொல்லும்படி, இவர்கள் எல்லாம் கூட்டணி சேர்ந்துவிட்டால், ஸ்டாலினுக்கு போட்டியாக தன்னால் வர முடியாமல் போய்விடுமே? ஸ்டாலின் Vs எடப்பாடி என்று மட்டுமே வரவேண்டுமானால், இபபோதே அனைவரையும் கழட்டிவிட வேண்டும் என்பதே எடப்பாடியின் எண்ணமாக இருக்கிறது. பாஜகவை கழட்டி விடவும் யோசிப்பதற்கு காரணம், சீமானுக்கு சேரும் கூட்டம், பாஜக எதிர்ப்பு கூட்டமாகும்.. இந்த கூட்டத்தை பார்த்துவிட்டு, தானும் பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தை எடப்பாடி பழனிசாமி கையில் எடுக்கவும் நினைக்கலாம்..

 கிறிஸ்தவர்கள்

கிறிஸ்தவர்கள்

ஆனால், சீமானை பொறுத்தவரை, மத்திய அரசையும் எதிர்ரக்கிறார், மாநில அரசையும் எதிர்க்கிறார்.. 10 பைசா செலவில்லாமல் கூட்டத்தை இழுக்கிறார்.. ஆனால், எடப்பாடி அப்படி இல்லை.. மாநில அரசை எதிர்ப்பற்காக டெல்லி சென்று, பாஜக தலைவர்களை சந்தித்து புகார் தருகிறார் எடப்பாடி.. அதனால், மாநில அரசை இங்கு எதிர்க்க, மத்திய அரசின் தயவும் தேவை என்று இரட்டை வேஷம் வேஷம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.. ஒருவேளை மோடி எதிர்ப்பை கையில் எடுக்காவிட்டால், அதாவது பாஜகவுடன் கூட்டணி வைத்தால், உள்ளிருந்தே கூட்டணியை தோற்கடிப்பார்கள், சிவி சண்முகம், ஜெயக்குமார், முனுசாமி போன்றோர்கள்.. பாஜகவால் மீண்டும் தோற்றுவிட்டோம், கிறிஸ்தவர் முஸ்லிம்கள் ஓட்டு இந்த முறையும் விழவில்லை என்பார்கள்" என்றார்.

English summary
Can AMMK TTV Dhinakaran form alliance with Congress and what is Edapadi Palanisamy plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X