Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 வார்த்தை.. டோட்டலா மாறிடுச்சே எடப்பாடியின் கணக்கு.. அதைவிடுங்க, விஷயத்தை இன்று போட்டுடைப்பாரா "தலை"

Subscribe to Oneindia Tamil

சென்னை: இத்தனை நாளும் மனக்கசப்புடனும், அதிருப்தியுடனும், அண்ணாமலை மீது கருத்துக்களை முன்வைத்த எடப்பாடி பழனிசாமி, இப்போது சமரச போக்கை கையாண்டுள்ளார்.. அப்படி என்ன நடந்தது அமித்ஷா வீட்டில்?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சமயத்திலேயே அண்ணாமலை + எடப்பாடி பழனிசாமி தரப்பில் அதிருப்திகள் வெடித்தன.. பாஜகவில் இருந்து சில முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.

Can BJP AIADMK workers work together and What is Annamalai going to say about Edapadi palanisamy

வெளிப்படை: கட்சி தாவல் என்பது சாதாரண விஷயம்தான் என்றாலும், அதிமுகவுக்கு தாவும்போது, தமிழக பாஜகவை மிக கடுமையாக விமர்சித்துவிட்டு போனார்கள்.. இதை எடப்பாடி பழனிசாமி தரப்பும் ஆமோதித்து வரவேற்றது.. அத்துடன், சில காட்டமான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இதனால், அதிமுக - பாஜக இரு தரப்பிலுள்ள 2ம்கட்ட தலைவர்கள் வெளிப்படையாகவே விமர்சித்து கொண்டார்கள்.. எடப்பாடி பழனிசாமி கொடும்பாவியும் எரிக்கப்பட்டன.

இதற்கு பிறகு, மூத்த தலைவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு, ஓரளவு சுமூகமாக்கினர்.. ஆனாலும், கூட்டணி விவகாரம் இழுபறியாகவே இருந்தது.. தனித்து போட்டி என்று, எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் மாறி மாறி சொல்லி கொண்டேயிருந்தனர்.. இறுதியில், அமித்ஷாவின் பேட்டியும், சந்திப்பும் இதற்கு முற்றுப்புள்ளியாக அமைந்தன.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அன்று பேசியபோது, தேசிய தலைவர் நட்டாவும் அங்குதான் இருந்திருக்கிறார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் அந்த சந்திப்பின்போது இருந்திருக்கிறார்.. தேர்தல் கூட்டணி, சீட் விவகாரங்கள், தொகுதி நிலவரங்கள் உட்பட பல்வேறு விஷயங்களை இவர்கள் அனைவரும் பேசியிருக்கிறார்கள்.. இரு தரப்பிலுமே நிபந்தனைகளும், கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டிருக்கின்றன..

பேட்டி : இதில், இரு தரப்புமே ஓரளவு ஓகே ஆகியிருப்பது போல தெரிகிறது.. பிறகு, அனைவரும் சேர்ந்து க்ரூப் போட்டோ எடுக்க அடுத்த ரூமுக்கு போயிருக்கிறார்கள்.. அந்த ரூமில் தேசிய தலைவர் நட்டாவும், அண்ணாமலையும் இருந்ததை பார்த்து எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சியடைந்துவிட்டாராம். காரணம், அவ்வளவு நேரம் அண்ணாமலை பற்றி புகார்களை அடுக்கி கொண்டிருந்தநிலையில், அமித்ஷா வீட்டுக்கே அண்ணாமலை வந்திருப்பதை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்..

ஷாக் ஆன எடப்பாடி: பிறகு வேறு வழியில்லாமல் அனைவரும் ஒன்றாக போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.. இதற்கு பிறகு, "தமிழகத்தில் அதிமுக - பாஜக இரு தரப்பிலுமே சுமூகமான மனப்போக்குடன் நடந்து கொள்வோம்" என்று எடப்பாடி + அண்ணாமலை சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாம். இந்த சந்திப்புக்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி தந்திருந்தார். அப்போது, "அண்ணாமலைக்கும், உங்களுக்கும் இடையேயான தகராறு குறித்து நேற்றைய சந்திப்பில் பஞ்சாயத்து எதுவும் நடைபெற்றதா?" என்று கேட்டார்கள்..

அதற்கு எடப்பாடி பழனிசாமி, "நீங்க தவறான கருத்தை சொல்றீங்க.. எங்களுக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் எந்தவிதமான தகராறும் இல்லையே.. தகராறு இருந்தால் எப்படி ஈரோட்டில் வந்து அவர் பிரச்சாரம் செய்திருப்பார்? இதுபோன்ற உள்நோக்கத்துடன் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பக் கூடாது... எங்கள் கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இனியும் தொடரும்" என்று பதிலை சொல்லி அசரடித்தார் எடப்பாடி பழனிசாமி.

பழைய சம்பவம்: இந்த பழைய சம்பவம் எல்லாம் இப்போது எதற்காகவென்றால், இந்த சந்திப்புக்கு பிறகு, எடப்பாடி தரப்பும், அண்ணாமலை தரப்பும் இதுவரை நேருக்கு நேர் வெளிப்படையாக சந்தித்து கொள்ளவில்லை.. ஒருவரையொருவர் பற்றி பேட்டிகளையும் தந்து கொள்ளவில்லை.. குறைந்தபட்சம் கூட்டணி பற்றியும் பேட்டிகளை தரவில்லை.. கர்நாடக தேர்தல் வந்துவிட்டதால், அண்ணாமலை படுபிஸியாக இருந்ததால், இதற்கான சாத்தியங்கள் அமையவில்லை.

இப்போதுதான் தமிழக அரசியலில் முழுகவனம் செலுத்த துவங்கி உள்ளார்.. அந்தவகையில், இன்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது.. கோவை அருகே உள்ள ஈச்சனாரியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்துக்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார்.. தேசிய பொதுச்செயலாளர்கள் வினோத் தவுடு, மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

மாவட்ட தலைவர்கள்: மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்... கடந்த முறை நடத்தப்பட்ட, மாநில செயற்குழு கூட்டத்திலேதான், "பாஜக தனித்து போட்டியிடும். இல்லாவிட்டால் பதவியையே ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை அதிரடியாக அறிவித்திருந்தார். இதனால்தான், அதிமுக - பாஜக கூட்டணியில் உரசலே ஏற்பட்டது.. இதற்கு பிறகு கூட்டணி உறுதிப்படுத்தினாலும், அகில இந்திய அளவில்தான் அது உறுதியாகி உள்ளது..

மாநில அளவில் இன்னும் இணக்கமான போக்கு ஏற்படவில்லை.. அப்படி இணக்கமான போக்கு ஏற்படவேண்டுமானால், அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவுடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.. அப்படி அறிவித்தால்தான், 2 கட்சி தொண்டர்களும் இணைந்து களத்தில் பணியாற்ற முடியும்.. இப்படிப்பட்ட சூழலில்தான் இன்று செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.. இந்த கூட்டத்தில் அண்ணாமலை என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுகிறது.

தொண்டர்கள்: தனித்து போட்டியில்லை, அதிமுகவுடன் என்பதை அண்ணாமலை வெளியிடுவாரா? அல்லது கூட்டணி பற்றி பேசாமல், மவுனமாக கடந்து சென்றுவிடுவாரா? என்று தெரியவில்லை.. மிகுந்த ஆர்வத்துடன் இரு கட்சி தொண்டர்களுமே இந்த கூட்டத்தை எதிர்நோக்கி உள்ளனர்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+