அண்ணாமலைக்காக "முதல் அடி" வைத்த மோடி.. அச்சாரமிட்ட லீடர்ஸ்.. சென்னையில் மீண்டும் பிரதமர்.. பலே பாஜக
சென்னை: பிப்ரவரி 2வது வாரத்தில், மறுபடியும் பிரதமர் மோடி சென்னை வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு சில காரணங்களும் யூகங்களாக வலம்வர துவங்கியிருக்கின்றன.
வழக்கமாக வடமாநிலங்களில் வலுவாக உள்ள தேசிய கட்சிதான் பாஜக.. ஆனால், கடந்த 2 வருடங்களில் நடந்த சில தேர்தல்களில் பாஜக தோல்வியை தழுவியது.. சில இடங்களில் முட்டிமோதி "ஜஸ்ட் பாஸ்" ஆனது.. இதற்கெல்லாம் காரணம், காங்கிரசும், ஆம் ஆத்மியும் பாஜகவை முந்திக்கொண்டு மேலெழுந்து கொண்டிருக்கின்றன..

வடமாநிலங்கள்: இதனால், தங்களுடைய கோட்டை என்று கருதக்கூடிய வலுவான மாநிலங்களையே, பாஜக ஒவ்வொன்றாக இழந்து வருகிறது. அதனால்தான், வடமாநிலங்களில் விட்டதை, தென்மாநிலங்களில் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காய்நகர்த்தி வருகிறது. முக்கியமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்களில், காலூன்றுவதுடன், இந்த முறை வாக்கு வங்கியையும் கணிசமாக உயர்த்த வேண்டும் என்ற முயற்சியையும் மேற்கொண்டு வருகிறது.
3வது அணி: ஆனால் கூட்டணி பற்றி இதுவரை எதுவும் முடிவாகவில்லை.. பாஜக தலைமையிலேயே 3வது அணி அமையக்கூடும் என்கிறார்கள்.. இதற்கு காரணம், இந்த வருடம் துவங்கியதுமே, தமிழகத்துக்குதான் பிரதமர் மோடி வந்திருந்தார். திருச்சி சர்வதேச விமானநிலைய புதிய முனையம் திறப்பு விழாவில் பங்கேற்றிருந்தார். இது ஒரு அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும்கூட, திமுக, அதிமுகவின் கவனத்தை திருப்பியிருந்தது அந்த நிகழ்ச்சி.
இதற்கு காரணம், ஓபிஎஸ், ஜிகே வாசன், ஏசி சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன்உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர. ஏற்கனவே, டிடிவி தினகரன், ஓபிஎஸ் இணக்கத்தில் உள்ளபோது, இந்த தலைவர்களின் வருகையும், 3வது கூட்டணிக்கான அச்சாரம் என்றே பலராலும் கருதப்பட்டது.
தேமுதிக வாக்கு வங்கி: போதாக்குறைக்கு விஜயகாந்த் குறித்து பிரதமர் குறிப்பிட்டு பேசியிருந்தது, தேமுதிகவின் வாக்கு வங்கியையும் குறி வைத்தது போலவே இருந்தது என்றார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான், மீண்டும் ஒருமுறை பிரதமர் தமிழகம் வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது..
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை, மேலிட பாஜக தலைவர்களின் நேரடி நம்பிக்கையையும், செல்வாக்கையும் பெற்றவர்.. அதற்கேற்றவாறு, தமிழகத்தில் பாஜகவை பலப்படுத்தவும், மத்தியில் மோடியின் தலைமையிலான ஆட்சியின் 9 ஆண்டு கால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லவும், நடைபயணத்தை கையில் எடுத்தார் அண்ணாமலை.
யாத்திரை: "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் கடந்த ஜூலை 18ம் தேதி, ராமேஸ்வரத்தில் துவங்கினார். இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்
இந்த யாத்திரை, சென்னை புறநகர் பகுதியில் வரும் பிப்ரவரி 2-வது வாரத்தில் நிறைவு பெறுகிறது.. இந்த நிறைவு விழாவில்தான், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக சொல்கிறார்கள்.. அவரது யாத்திரை சென்னையில் நிறைவு பெறுகிறது. யாத்திரை நிறைவு விழா மற்றும் மாநாடு நடைபெறும் இடம், இறுதி செய்யப்பட்டு, அதற்கு பிறகு, பிரதமர் மோடியின் வருகை குறித்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று பாஜகவினர் தரப்பில் சொல்லப்படுகிறது.
எகிறும் எதிர்பார்ப்பு: சமீபத்தில்தான், 2 முறை தமிழகம் வந்திருந்த நிலையில், 3வது முறையாக பிரதமர் தமிழகம் நோக்கி வருவது, பாஜகவினரிடம் நம்பிக்கையையும், தெம்பையும் ஏற்படுத்தி வருகிறது. அதேசமயம், இந்நிகழ்வுகளை எல்லாம், திமுக, அதிமுக தரப்பினரும் உற்று கவனித்து வருகிறார்கள். என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications