கிண்டி கிறுகிறுப்பு.. இன்றே சென்னையில் மோடி மீட்டிங்.. கடைசியில அண்ணாமலை சொன்னதுதான் நடக்கபோகுது போல
சென்னை: 3 நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தர உள்ள நிலையில், தமிழக பாஜகவில் பெரும் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது..!!
கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிட்டும்கூட, அதிமுகவுடன் யாருமே இன்னும் கூட்டணி அறிவிக்கவில்லை.. டாக்டர் ராமதாஸ், ஜிகே வாசன், கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், உள்ளிட்டவர்கள் அமைதி காத்து வருகிறார்கள். அதேசமயம் பாஜக பக்கமும் அவர்கள் சாயவில்லை. பாஜக - அதிமுக இணையலாம் என்பதால், பொறுமை காப்பதாக தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி: ஆனால், எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தை பார்த்தால், பாஜக தனித்தே களமிறங்க வாய்ப்புள்ளாக சொல்கிறார்கள். ஏ.சி. சண்முகமும், பாரிவேந்தரும் மட்டுமே பாஜகவுக்கு ஆதரவை தந்துள்ள நிலையில், மற்றவர்கள் அமைதி காத்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் பாஜகவுக்கு தரப்போகிறார்களா? அல்லது அதிமுகவுக்கு ஆதரவு தரப்போகிறார்களா? என்று தெரியவில்லை.
இவர்களை எல்லாம் பாஜக பக்கம் கொண்டு வந்து, பாஜக தலைமையிலான அணியை வலுப்படுத்த வேண்டும் என்ற அசைன்மென்ட்டை ஓபிஎஸஸுக்கு பாஜக மேலிடம் ஒதுக்கியதாக தகவல்கள் கசிந்தன.. அதனால்தான், கடந்த முறை பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதுகூட, ஓபிஎஸ்ஸுக்கு அப்பாயிண்ட்டும், அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. பாஜக - ஓபிஎஸ் தரப்பில், கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தைகளும் நடந்ததாக கூறப்பட்டது.
இப்போது 3 நாள் தமிழகத்துக்கு பிரதமர் வருகை தந்துள்ளதால், அவரை ஓபிஎஸ் சந்திப்பாரா? கூட்டணி தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆலோசனை கூட்டம்: மற்றொருபக்கம், பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.. பாஜகவுக்குள்ளேயே, நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும், பிரதமரிடம் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
நிர்வாகிகளை பிரதமர் சந்திக்க போகிறாராம். மத்திய இணை அமைச்சர் எல்முருகன் , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்கின்றனர். சென்னை கவர்னர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. பாஜக இந்த முறை தனித்தே களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
என்னாகும்: இதைத்தான், கடந்த 1 வருடத்துக்கும் மேலாக, மாநில தலைவர் அண்ணாமலை, மேலிட தலைவர்களை வலியுறுத்தி வருகிறார். ஆரம்பத்தில், அண்ணாமலையின் ஐடியாவுக்கு செவிசாய்க்காத மேலிடம், தற்போது அண்ணாமலையின் வியூகத்துக்கே வந்துள்ளதாகவும் தெரிகிறது.. அந்தவகையில், பாஜகவின் கூட்டணி முடிவு என்ன? யார் யார் கூட்டணியில் இடம்பெற போகிறார்கள்? என்ற ஆர்வம் பெருகிவரும் நிலையில்தான், இன்று கிண்டியில் அனலடிக்கப் போகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications