"மண்குதிரை".. கடைசிவரை "அவர்" நம்பினாரே.. டாப் லெவலில் எகிறும் எடப்பாடி மவுசு.. பாஜக ஆட்டம் கலைகிறதா
எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தந்து தங்களை தமிழக பாஜக ஒதுக்குவதாக ஓபிஎஸ் டீம் நினைக்கிறதாம்
சென்னை: இடைத்தேர்தல் விவகாரம் தலைதூக்கியதில் இருந்தே, மாநில தலைமை தன்னை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டதோ, ஓரங்கட்டிவிட்டதோ? என்று ஓபிஎஸ் தரப்பு குழம்பி வருகிறதாம். அதேசமயம் ஓபிஎஸ் டீமில் இருந்து சில அதிருப்திகளும் வெடித்துள்ளதாம்.
இடைத்தேர்தல் விவகாரத்தில் எடப்பாடி தரப்பு போட்டி என்றதுமே, ஓபிஎஸ்ஸும் போட்டியிட போவதாக அறிவித்திருந்தார்.. இதனால், 2 அணிகளில் யாருக்கு ஆதரவு தருவது என்ற குழப்பம் தமிழக பாஜகவுக்கு ஏற்பட்டது.
இதனால், யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமோ அவர்களை ஆதரிப்பது என்று பாஜக மூத்த தலைவர்கள் முடிவு செய்திருந்தார்கள்.

மண்குதிரை
ஆனால், பாஜகவும் களத்தில் இறங்க வேண்டும் என்று அண்ணாமலையிடம், தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தினார்களாம்.. காரணம், தேர்தலில் போட்டியிடாமல் போனாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமாக முடியும் என்று பாஜகவில் உள்ள சில சீனியர்கள் கருதினார்களாம்.. எனினும், எடப்பாடிக்கு சாதகமாகவே அண்ணாமலை நடந்து கொண்டுவருவதாக அதிருப்தி அடைந்த சில சீனியர்கள், டெல்லி வரை புகாரை கொண்டு சென்றுள்ளனர்.. அப்போதும் அண்ணாமலை, தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவிக்கவேயில்லை. தேர்தலில் போட்டியிட்டாலும்சரி, நடுநிலை ஆதரவை முன்னெடுத்தாலும்சரி, இரண்டுமே எடப்பாடிக்கு தரப்படும் மறைமுகமான சப்போர்ட் ஆகிவிடுமே என்று ஓபிஎஸ் தரப்பு கலங்கியது.

பாரிவேந்தர்
அதுமட்டுமல்ல, தமிழக பாஜக நினைத்திருந்தால், டிடிவி + ஓபிஎஸ் + வாசன் + பாரிவேந்தர் + கிருஷ்ணசாமி + ஏசி சண்முகம், + ஜான்பாண்டியன், பூவைமூர்த்தி, சசிகலா இப்படி பலரையும் இணைத்து என்றோ இடைத்தேர்தலில் போட்டியிட்டிருக்க முடியும்.. இத்தனை பேர் தங்களுக்கு ஆதரவாக இருந்தும்கூட, போட்டியிடாமல் ஒதுங்க காரணம், எடப்பாடி மீது, மாநில தலைமைக்கு இருக்கும் பாசம்தான் என்றும் சொல்லப்பட்டது.. அதுமட்டுமல்ல, "இடைக்கால பொதுச்செயலாளர்" என்று எடப்பாடியை தமிழக பாஜக தலைவர் குறிப்பிட்டு வரும்போது, ஓபிஎஸ்ஸை "ஒருங்கிணைப்பாளர்" என்று குறிப்பிட்டு பேசுவதில்லையே ஏன்? என்றும் சிலர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்ப துவங்கிவிட்டார்கள்..

வாசன்
இதையெல்லாம் பார்த்து பொறுமையிழந்த நிலையில்தான், மாநில தலைமை மீதான புகாரை, ஓபிஎஸ்ஸே டெல்லிக்கு கொண்டு சென்றாராம்.. அப்படி இருந்தும், நினைத்தது எதுவுமே கடைசிவரை நடக்காமல் போய்விட்ட வருத்தத்திலும், அதிர்ச்சியிலும் ஓபிஎஸ டீம் ஆழ்ந்துவிட்டதாக தெரிகிறது.. இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி, பாஜக தரப்பும்சரி எந்தவித அழைப்பும் விடுக்காதது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் தந்து வருவதாகவும் சொல்கிறார்கள். ஓபிஎஸ்ஸை நம்பி எதுவுமே செய்ய முடியாது என்று நினைத்து சில நிர்வாகிகள் விலகவும் தயாராகிவிட்டனர்.

கமலாலயம்
இது ஓபிஎஸ்ஸுக்கு அதிர்ச்சியை தந்துவிட்டது.. கடைசிவரை தங்களை கண்டுகொள்ளவேயில்லையே என்ற அதிருப்தியில்தான், அண்ணாமலையை கண்டித்து தீர்மானம் போடுமளவுக்கு ஓபிஎஸ் டீம் சென்றுவிட்டது.. அதற்கு பிறகும்கூட ஓபிஎஸ்ஸை, மாநில தலைமை அழைத்து சமாதானம் செய்யவில்லை என்கிறார்கள்.. 2 நாளைக்கு முன்புகூட, ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சிபி ராதாகிருஷ்ணனுக்கு கமலாலயத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், கூட்டணியில் இருக்கும் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு அனுப்பி இருந்த நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு மட்டும் எந்த அழைப்பும் போகவில்லை என்கிறார்கள்., அதனால் ஓபிஎஸ் தரப்பில் ஒருத்தரும் கமலாலயத்துக்கு வரவில்லையாம். இத்தனைக்கும், ஆளுநர் சிபிஆருக்கு ஓபிஎஸ் வாழ்த்து சொல்லி ட்வீட் போட்டிருந்தார்.. எப்படியும் பாராட்டு விழாவுக்கு தன்னையும் அழைப்பார்கள் என்று ஓபிஎஸ் நம்பினாராம்.. ஆனால், அழைப்பு விடுக்கப்படவில்லை என்கிறார்கள்.. டெல்லி பாஜக நம்மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கும்போது, மாநில தலைமை நம்மை இப்படி உதாசீனப்படுத்துகிறதே என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பொருமி வருகிறார்களாம்.. எப்படியும் வரும் 20-ம் தேதி நடக்க போகும் ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கவும் ரெடியாகி வருகிறார்களாம்..

மண்குதிரை
அத்துடன், இந்த ஒருதலைபட்சம் குறித்து அமித்ஷாவின் கவனத்துக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் ஓபிஎஸ்ஸிடம் வலியுறுத்தி வருகிறார்களாம்.. இங்கே நிலைமை இப்படி என்றால், ஓபிஎஸ் மீது கட்சிக்குள்ளேயே சிலர் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.. சட்டரீதியான செயல்பாடுகளில் ஓபிஎஸ்ஸின் அரசியல் எடுபடுகிறதே தவிர, களத்தில் கோட்டைவிடுகிறாரே, இனியும் ஓபிஎஸ்ஸை நம்பி களமிறங்கினால் அவ்வளவுதான்? என்று பொருமுகிறார்களாம்.. அதிலும், ஈரோடு மாவட்ட ஓபிஎஸ் தரப்பு நிர்வாகிகள் கொந்தளிப்பில் இருப்பதாக சொல்கிறார்கள்.. ஓபிஎஸ் பாஜகவை நம்பி ஏமாந்துகொண்டிருக்க, நாங்களோ ஓபிஎஸ்ஸை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறோமே என்றும் புலம்ப தொடங்கிவிட்டனவாம்..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications