"கண்ணாடி சில்லுகள்".. தினகரன் கடைசி வரை நம்பனாரே.. அப்ப திமுக ஓட்டுகள் யாருக்கு.. இதென்ன புது முடிவு
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் அரசியல் ஸ்பீடு எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் குழம்பி போயுள்ளதாக தெரிகிறது.. இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் நிலைப்பாடு என்ன? அடுத்து அவர் என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளன.
பாஜகவுடன் இந்த முறை அமமுக, கூட்டணி வைக்க நிறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா, இவர்கள் அனைவரையும்விட டிடிவி தினகரனின் அரசியல் மீது மேலிட பாஜகவுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளதாம்..

கடந்த எம்பி தேர்தலிலேயே இந்த கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது அதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள்.
கொங்கு ஆதரவு: கொங்குவில் ஓரளவு ஆதரவை பெற்றுள்ள பாஜக, தென்மண்டலங்களிலும் காலூன்ற முயற்சிக்கிறது.. அதனாலேயே ஒருங்கிணைந்த அதிமுகவுக்கும் வலியுறுத்தி வருகிறது.. இதில், ஓபிஎஸ்ஸின் தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு? அவருக்கு முக்குலத்தோர் மத்தியில் உள்ள வாக்கு சதவீதம் என்ன என்பது இதுவரை வெளிப்படையாக தெரியவில்லை.. காரணம், தனிப்பட்ட முறையில் அவர் எந்த தேர்தலையும் இதுவரை சந்திக்கவில்லை. ஆனால், அவருக்கு அந்த சமுதாய ஓட்டுக்கள் கணிசமாக இருப்பதாக நம்பப்படுகிறது.
டிடிவி தினகரன் அப்படி கிடையாது.. அவரது செல்வாக்கை ஒவ்வொரு தேர்தலிலும் நிரூபித்து வருகிறார். தனக்கான செல்வாக்கை தொடர்ந்து தக்க வைத்தும் வருகிறார்.. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. இன்னும் ஓபனாக சொல்லப்போனால், திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான்.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை அவ்வளவு லேசில் இழந்துவிட பாஜக விரும்பவில்லை.. அதனாலேயே டிடிவி தினகரனை தங்களுடன் அணி சேர்க்க முயல்வதாக தெரிகிறது.
அசைன்மென்ட்: அதற்கேற்றபடி, டிடிவி தினகரனின் கடந்த ஒருவருட கால பேட்டிகளை எடுத்து பார்த்தால், பாஜகவை கடுமையாக விமர்சிக்காத போக்கும் உள்ளது.. பாஜக ஆதரவு நிலைப்பாட்டை தினகரன் மேற்கொண்டதும் தெரிய தொடங்கியது.. அதுமட்டுமல்ல, பாஜகவின் முக்கிய புள்ளிகள் அளித்த நம்பிக்கையில்தான் ராகுல் காந்தி தகுதி இழப்பு போன்ற விஷயங்களில் கருத்துச் சொல்லாமல் அமைதிகாத்தாராம் டிடிவி தினகரன். இன்னொன்றையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. முக்கிய அசைன்மென்ட் ஒன்று, மாநில தலைமையின் தரப்பிலிருந்து தினகரனுக்கு கடந்த மாதம் பறந்ததாம்..

ஷாக்கிங் தகவல்கள்: "எடப்பாடியின் கூடாரத்தை கலைக்க ஓபிஎஸ்ஸால் முடியவில்லை... அதனால், நீங்கள் முழுவீச்சில் இறங்குங்கள்; நாங்கள் துணையாக இருக்கிறோம்" என்று தினகரனிடம் மாநில பாஜக தரப்பு பேசியதாம்.. இதைக்கேட்டு தெம்பான டிடிவியுடம், தென் மாவட்டங்களுக்கு விசிட் அடிக்க போவதாகவும, அப்போது நடத்தப்படும் மிகப்பெரிய கூட்டத்தில், எடப்பாடி டீமை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் அதிமுகவினரை ஆயிரக்கணக்கில் அமமுகவில் இணைத்து ஷாக் தரப்போவதாகவும் செய்திகள் வட்டமடித்தன.
பாஜக தரப்பிலிருந்து தரப்பட்ட இந்த நம்பிக்கையால்தான், தேனி மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளை தனக்காக தயார்படுத்தியும் வந்தாராம் தினகரன்... ஆனால், எல்லாமே இப்போது தவிடுபொடியாகி கொண்டிருக்கிறதாம்.. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான, நீதிமன்றத்தின் ஒவ்வொரு சாதகமான உத்தரவுகளை கண்டு, டிடிவி தினகரன் அதிருப்தியில் உள்ள நிலையில், தங்கள் அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகளை இழுத்து வருவது மேலும் அதிர்ச்சி அடைய செய்து வருகிறது.
குழப்பமும், கலக்கமும்: இப்போது, பொதுச்செயலாளர் பதவியில் உட்கார்ந்ததையடுத்து, தினகரனின் மொத்த நம்பிக்கையையும் தகர்த்துவிட்டதாம். போதாக்குறைக்கு, "எந்த காலத்திலும் டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் இந்த 3 பேருக்கும் அதிமுகவிலும், கூட்டணியிலும் இடமில்லை" என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருவதும் டிடிவி தினகரனை கொதிப்படைய வைத்திருக்கிறதாம். எல்லாவற்றையும்விட, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்கும் விவகாரம் குறித்து அமித்ஷா தந்த பேட்டி அதற்கு மேல் குழப்பமடைய வைத்துள்ளதாம்..
முழு ஆதரவாளரான ஓபிஎஸ்ஸூக்கே இந்த நிலைமை என்றால், தன்னுடைய நிலைமை என்னாவது? என்ற கேள்வியும் தினகரனுக்குள் எழுந்திருப்பதாக தெரிகிறது. அதற்கேற்றவாறு, இதுவரை தன்னுடன் தொடர்பில் இருந்த பாஜக முக்கிய புள்ளிகள் சிலர், தினகரனின் செல்போன் அழைப்புகளை உதாசீனப்படுத்துகிறார்களாம்.. இதெல்லாம் சேர்ந்து ரொம்பவே காயப்பட்டுள்ளாராம் டிடிவி தினகரன்..
விலகலா: நடக்க போகும் எம்பி தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா? என்று தனக்கு நெருக்கமான வட்டத்தில் ஆலோசனையையும் நடத்தியிருக்கிறார்.. அப்போது, "நீங்க தொடர்ந்து அரசியல் செய்யணும்னு, தேர்தலில் போட்டியிட்டுத்தான் ஆகணும்.. போட்டியிடாமல் ஒதுங்கி கொண்டால், கட்சியை காப்பாத்த முடியாது" என்று நெருக்கமானவர்கள் யோசனை சொல்லி உள்ளார்களாம்.. இதையடுத்து, அடுத்தக்கட்டமாக என்ன செய்வது? எடப்பாடியின் வியூகங்களை எப்படி முறியடிப்பது? என்பதில் முனைப்பு காட்டி வருகிறாராம்...!!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications