களத்தை மாற்றுகிறதா பாஜக? அதிமுக இரண்டாக உடைகிறதா? திமுக இப்படி விரட்டி விரட்டி வருதே.. என்னாக போகுதோ
சென்னை: தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்குள் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்று திமுக அமைச்சர் பற்ற வைத்த நெருப்பு, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பிருந்தே, அதிமுகவில் ஒருவித சலசலப்புகள் அதிகரித்து வந்தது.. இந்த சூழலில், விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி, காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.. அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "விஜயதாரணி மட்டும் இல்லாமல், மேலும் பல முக்கிய புள்ளிகள் பாஜகவுக்கு வருகிறார்கள்" என்றார்.

பாஜக: இதனால், அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு செல்ல போவது யார் என்ற ஆர்வம் எகிறியது.. ஆனால் அண்ணாமலை சொன்னதுபோல, யாருமே பாஜகவில் இணையவில்லை.
அப்போதும் இந்த புகைச்சல் ஓயவில்லை.. அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன், பாஜகவில் இணைவதாக செய்தி பரவியது.. இதற்கு அப்போதே செங்கோட்டையன் மறுத்திருந்தார்.. அப்போதும் இந்த புகைச்சல் ஓயவில்லை..
நேற்று முன்தினம், திமுக அமைச்சர ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும்போது, "தேர்தல் முடிவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக செங்கோட்டையன் தலைமையில் செல்ல போகிறதா, வேலுமணி தலைமையில் செல்ல போகிறதா என்பது தெரியும். அதிமுகவில் பாஜக பிளவை ஏற்படுத்தும்..
பிளவு: எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும், செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும் என்ற செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால் அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம், ஆனால் பாஜக நிச்சயம் செய்யும்" என்று அமைச்சர் கூறியிருந்தார்.
அமைச்சரின் இந்த கருத்துக்கு மீண்டும் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.. காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் நான் நேர்வழியில் சென்று கொண்டிருக்கிறேன். இது மாற்றுக்கட்சியை சார்ந்தவர்களுக்கும் தெரியும். சட்ட அமைச்சர் என்னை குறித்து கூறிய கருத்து வருந்தத்தக்க ஒன்று.
-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications