272 .. மெஜாரிட்டியை அள்ளும் பாஜக? ஏற்கனவே குஷியில் இருக்கு.. இப்ப இதுவேற? வந்துட்டாங்க "புரோக்கர்ஸ்"
சென்னை: லோக்சபா தேர்தல் ரிசல்ட் நாளை வெளிவர உள்ள நிலையில், பாஜக படுகுஷியில் காணப்படுகிறதாம்.. ஏன் தெரியுமா?
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணியே, மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலும் கூறியிருக்கின்றன.. அந்தவகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி 125 முதல் 150 இடங்கள் வரை பெறலாம் என்றும் பல கணிப்புகள் கூறுகின்றன.
மெஜாரிட்டி: மொத்தம் 543 மக்களவை தொகுதிகள் உள்ள நிலையில், இதில், ஆட்சியைப் பிடிக்க 272 பெரும்பான்மையே போதுமானது. இந்தப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

தமிழகத்தை பொறுத்தவரை, மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று எக்ஸிட் போல்கள் தெரிவிக்கின்றன... அதாவது, குறைந்தபட்சம் 26-ல் இருந்து அதிகபட்சம் முழுவதுமாக 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லக்கூடும் என்பதே பிரதான கணிப்பாக உள்ளது.
கணிப்புகள் : திமுக கூட்டணி வெற்றி என்பது அனைவராலும் யூகிக்கப்பட்ட கணிப்புதான் என்றாலும், பாஜக கூட்டணி அதிகபட்சமாக 7 தொகுதிகள் வரை வெல்லக் கூடும் என்று கூறியிருப்பதுதான் ஆச்சரியத்தை தந்து வருகிறது.
இப்படி பல்வேறு செய்தி நிறுவனங்களின் கணிப்புகளுக்கு நடுவில், புக்கிகள் என்று சொல்லக்கூடிய டெல்லி சூதாட்ட தரகர்கள் புது கணிப்புகளை வெளியிட்டிருக்கிறார்கள்.. அதாவது, பாஜக 340 இடங்களுக்கு மேல் பெறும் என்றும், இந்தியா கூட்டணி 200 இடங்களை பெறலாம் என்றும் மதிப்பிட்டிருக்கிறார்களாம்.
சூதாட்ட தரகர்கள்: சூதாட்ட தரகர்கள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவோரின் மதிப்பீடுகளின்படி, "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது, 341 முதல் 343 இடங்களை பெறக்கூடும் என்றும், அதேபோல, இந்தியா கூட்டணி 198 முதல் 200 இடங்கள் பெறக்கூடும் என்றும் சூதாட்ட நெட்வொர்க்கில் பணியாற்றும் ஒருவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, பாஜக மட்டும் 310 முதல் 313 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும், காங்கிரஸ் கட்சியோ வெறும் 57 முதல் 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் சூதாட்ட தரகரகள் கணித்திருக்கிறார்களாம்.. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் இந்தியா கூட்டணிக்கு 1 இடம் மட்டுமே கிடைக்கலாம் என்றும் கணிப்புகளில் வெளியாகியிருக்கிறது.
தேர்தல் முடிவுகள்: இந்த தகவல்கள் எதுவுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.. காரணம், நம்முடைய நாட்டை பொறுத்தவரை, தேர்தல் முடிவுகளில் பந்தயம் கட்டுவது என்பது சட்டவிரோதமானது... அதனால்தான் ஒவ்வொரு தேர்தலின்போதும், சூதாட்ட தரகர்கள் மற்றும் பந்தயம் கட்டுபவர்களை போலீசார் உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள்..
ஆனாலும், போலீசாரின் அனைத்துவிதமான கண்காணிப்பையும் மீறி, சில நிழல் தளங்கள் மூலம் இப்படியான சூதாட்டங்கள் நடந்து வருவதாக சொல்கிறார்கள்.
குஷி பாஜக: ஏற்கனவே, மோடியே 3வது முறையாக ஆட்சியை பிடிப்பார் என்று பெரும்பாலும் கணிப்புகள் சொல்லிவிட்ட நிலையில், சூதாட்ட தரகர்களும் இதையே சொல்லியிருப்பது வியப்பை கூட்டி வருகிறது.
அதுவும் 343 இடங்களை பெறும் என்று உச்சபச்சமாக கணித்திருப்பது இந்திய அரசியல் கட்சிகளின் கவனத்தையே திருப்பி வருகிறது. ஏற்கனவே வெளியாயிருக்கும் கருத்து கணிப்புகளால் குஷியில் காணப்படும் பாஜக, இதைக்கேட்டதுமே, இன்னும் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்க துவங்கியிருக்கிறதாம்.. எதுவானாலும் என்ன? நாளை விடிந்ததுமே தெரிந்துவிடும்.
மெஜாரிட்டி கிடைக்குமா: இதனிடையே, பாஜகவுக்கு இந்த அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்குமா? என்றும் சோஷியல் மீடியாவில் அலசல்கள் நடக்கின்றன.. அதாவது, குஜராத், மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் போன்றவற்றை தவிர்த்துவிட்டு பார்த்தால், கடந்த முறை ராஜஸ்தானில் பெற்ற வெற்றியை இந்த முறையும் பெறுமா? என்பது சந்தேகம் என்கிறார்கள்.
அதேபோல, பீகாரில் கடந்த தேர்தலில், ஜேடி கட்சியுடன் கூட்டணி வைத்து 40 தொகுதிகளில் 39ஐ கைப்பற்றியிருந்த நிலையில், இந்த முறை கஷ்டம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.. அந்தவகையில், 210 சீட்டுகளை பாஜக வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதே அரசியல் விமர்சகர்கள் தோராயமாக கணக்கிடுகிறார்கள்.. நாளைவரை பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications