"பூனைகள்".. டாக்டர் கிருஷ்ணசாமி யாரை சொல்றாரு தெரியுதா.. டக்கென திரும்பி பார்க்கும் பாஜக, திமுகவினர்
சென்னை: கர்நாடகா நமக்கு வழங்க வேண்டிய ஜுன் மாதம் 2 டிஎம்சி தண்ணீரை வழங்கவில்லை.. உபரிநீராக 30 டிஎம்சி தண்ணீரையும் வழங்கவில்லை. இதுகுறித்து முதல்வரும் எதுவும் சொல்லவில்லை. ஆனால், மோடிக்கு எதிராக மட்டும் கூட்டம் போடுகிறார்கள் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நினைவுநாளில் டாக்டர் கிருஷ்ணசாமி அஞ்சலி செலுத்தினார்.. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் நினைவஞ்சலி செலுத்திவிட்டு, செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, "ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களுக்கு தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் நினைவகம் அமைக்க அரசு நிலம் ஒதுக்க வேண்டும். புதிய தமிழகம் சார்பில் நினைவகம் எழுப்பப்படும். தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டரை ஏக்கர் தேயிலை தோட்டங்களை பிரித்து கொடுக்க வேண்டும். அவர்களின் மேம்பாட்டுக்கு அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.
மாஞ்சோலை: முன்னதாக, மதுரை விமானத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் சொல்லும்போது, "மாஞ்சோலை எஸ்டேட்டில் வழங்கப்பட்ட 8,400 ஏக்கர் நிலத்திற்கான 99 ஆண்டு குத்தகை ஓரிரு வருடங்களில் முடியும் நிலையில் உள்ளது. அதை மீட்டு அங்குள்ள தொழிலாளர்களுக்கு விவசாயம் செய்ய தலா, 2.5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும்.
மணிப்பூரில் பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது... இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க வேண்டுமானால், இதற்காகவே ஒரு ஸ்பெஷல் கமிட்டியும், சிறப்பு நீதிமன்ற ஆணையமும் அமைக்க வேண்டும்.
கள்ளச்சாராயம்: தமிழகத்தில் உள்ள 19 மதுபான ஆலைகளில், 17 மதுபான ஆலைகள் திமுகவினருக்கு சொந்தமானவை. மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தால் 22 பேர் உயிரிழந்து போனார்கள்.. ஆனாலும், இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. காலை 7:00 மணிக்கு மது குடிப்பவர்கள் குடிகாரர்கள் இல்லை என்கிறார் அமைச்சர் முத்துசாமி.. ஒரு பொறுப்பு வாய்ந்தவர், இப்படியெல்லாம் ஜோக் அடிக்கக்கூடாது. மதுவை எப்போது சாப்பிட்டால் என்ன?
எப்போது சாப்பிட்டாலும் அது கேடுகளையே தரும். மது ஒரு விஷம்.. அது காலையில் சாப்பிட்டாலும், மதியம் சாப்பிட்டாலும், மாலையில் சாப்பிட்டாலும் கேடு கேடுதான்.
தமிழகத்தில் என்ஐஏ சோதனை நடக்க வேண்டிய ஒன்றுதான். அப்போதுதான் அன்னிய உதவியுடன் நாட்டை துண்டாட நினைக்கும் பிரிவினைவாத, பயங்கரவாத அமைப்புகளை கட்டுப்படுத்த முடியும்.. தமிழகத்திற்கு கர்நாடகா, ஜூன் மாதம் தரவேண்டிய, 2 டிஎம்சி ஜூலை மாதத்திற்கான, 30 டிஎம்சி தண்ணீரை இன்னமும் வழங்கவில்லை. இது குறித்து தமிழக முதல்வரும் எதுவும் சொல்லவில்லை.
பூனைகள்: ஆனால், பிரதமர் மோடிக்கு எதிராக மட்டும் திமுகவினர் பேசி வருகிறார்கள்.. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்கட்சிகள் கூட்டம் கூட்டுகின்றனர். புலிகளைக் கண்டு பூனைகள் பயப்படலாம்... ஆனால், பூனைகளைக் கண்டு புலிகள் பயப்படாது என்றார் கிருஷ்ணசாமி.
-
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
கோவையில் போட்டியிடும் செந்தில் பாலாஜி.. நிர்வாகிகளுக்குப் பறந்த மெசேஜ் -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்?












Click it and Unblock the Notifications