உங்களுக்கு ரூ.200 வரும்.. முதல்வரை துண்டு சீட்டு இன்றி பேச சொல்லுங்க! செய்தியாளரிடம் சீறிய அண்ணாமலை
சென்னை: முதல்வரை முடிந்தால் துண்டு சீட்டு இல்லாமல் செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுங்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கேள்வி எழுப்பினார். செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் செய்தியாளர் ஒருவரிடம் கடுமையாக வாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க தமிழ்நாடு வந்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகை குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.
முதல்வர் ஸ்டாலினின் உரை, ஜிஎஸ்டி, கச்சத்தீவு, தமிழ் தாய் வாழ்த்துக்கு அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காதது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து அண்ணாமலை இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

நிதின் கட்கரி
நிதின் கடிகரி தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காதது குறித்துசெய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தஅண்ணாமலை, தமிழ் மக்களின் மீது எண்ணற்ற அன்பு வைத்துள்ளார் நிதின் கட்கரி. அவர் தமிழ் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கவில்லை என்கிறார்கள். ஆனால் காணொலிக் காட்சி நிகழ்வுகளில் ஆடியோ கேட்பதில்லை. அதனால் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்துநிற்காமல் விட்டுவிட்டார் நிதின் கட்கரி. மற்றபடி அவருக்கு தமிழ் மீது மிகுந்த அன்பும், பாசமும் உள்ளது. அவரை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.

கட்சத்தீவு
தொடர்ந்து கட்சத்தீவு விவகாரம் பற்றி பேசிய அண்ணாமலை, கட்சத்தீவை எப்படி மீட்பது என்று எங்களுக்கு தெரியும். எங்களுக்கு பாடம் எடுக்க நீங்கள் யார்?. திமுகதான் இதில் தப்பு செய்தது, அதற்கு முதல்வர் ஸ்டாலின்தான் மன்னிப்பு கேட்க வேண்டும். எங்க அப்பா தப்பு செஞ்சிட்டாங்க என்று முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கட்டும். அவர்கள் மன்னிப்பு கேட்டால் நானே அறிவாலயத்திற்கு சென்று அவரிடம் பேசுகிறேன். கட்சத்தீவை எப்படி மீட்பது என்று எங்களுக்கு தெரியும், நாங்கள் மீட்போம் என்று கூறினார்.

பேனர்கள் கேள்வி
இதையடுத்து செய்தியாளர் ஒருவர் சென்னையில் பாஜக சார்பாக மோடியை வரவேற்க நிறைய பேனர்கள் வைத்து இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, போலீஸ் அனுமதியோடுதான் பேனர் ஒட்டினோம். ஒட்டிவிட்டு எடுப்பது போலத்தான் பேனர் ஒட்டினோம். எங்கும் சாலையை தோண்டவில்லை. எல்லா பேனருக்கு அருகிலும் ஆட்களை நிற்க வைத்து இருந்தோம்.

திமுக விதி மீறல்
திமுகதான் விதி மீறுகிறது. ஸ்டாலின் சார் வீட்டு வாசலில் நீங்கள் பேனரை பார்க்கலாம். அதனால் சொல்வதை கேளுங்கள் என்றார் அண்ணாமலை. அதற்கு செய்தியாளர்.. நீங்கள் சென்டர் மீடியனில் கொடி நட்டு இருந்தீர்கள். இதற்கான ஆதாரம் இருக்கிறது. ரோட்டில் ஓட்டை போட்டு கொடி நட்டு இருந்தீர்கள் என்று செய்தியாளர் குறிப்பிட்டார்.

கோபம்
இதை கேட்டு கோபம் அடைந்த அண்ணாமலை, அண்ணே உங்கள் 200 ரூபாய் வந்துடும் அண்ணே. 400 ரூபாயா, 1000 ரூபாயா கூட உயர்த்தி கொடுத்து விடலாம் என்று கூறினார். தொடர்ந்து செய்தியாளர் விடாமல் கேள்வி எழுப்பியதும் கோபம் அடைந்த அண்ணாமலை, உங்களுக்கு அறிவாலயம் காசு கொடுத்துவிடுவார்கள்.. கவலைப்பட வேண்டாம்.. மரியாதையா பேசுங்கள்.. 1500 ரூபாய் பணத்தை கூட இதற்காக அறிவாலயம் உங்களுக்கு கொடுக்கும். வீடியோ இருந்தால் போலீசிடம் புகார் அளியுங்கள். 3 நிமிடம் நீங்கள் கேள்வி கேட்டு இருக்கிறீர்கள். அப்படி என்றால் அறிவாலயத்திடம் 2000 ரூபாய் வாங்கிக்கொள்ளுங்கள்..

அண்ணாமலை சீற்றம்
என் கட்சியை பற்றி தவறாக பேசினால் திருப்பி அடிப்பேன். 1 மணி நேரம் பேசினேன். யாரையாவது தவறாக பேசினேனா. உங்கள் தொழிலுக்கு ஒரு தர்மம் இருக்கிறது. உங்கள் கேள்வியில் நேர்மை இல்லை. நீங்கள் கேட்ட 13 கேள்வியை நான் எதிர்கொள்கிறேன். முதல்வரை துண்டு சீட்டு இல்லாமல் பேச சொல்லுங்கள் பார்க்கலாம். அமைச்சர்கள் துண்டு சீட்டு இல்லாமல் பேச முடியுமா? உங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து உட்கார வைத்து இருக்கிறேன், என்று அண்ணாமலை அந்த செய்தியாளரிடம் கோபமாக பேசினார்.

திமுககாரன்
திமுககாரன் என்ன வேண்டுமானாலும் பேசுவான்..அவர்களிடம் பேட்டி எடுப்பீர்கள். நீங்கள் எனக்கு பத்திரிக்கை சுதந்திரம் பற்றி பாடம் எடுப்பீர்களா? என்று அண்ணாமலை தொடர்ந்து அவரிடம் கோபமாக பேசினார். இதையடுத்து அந்த செய்தியாளர்களை சுற்றி வளைத்த பாஜகவினர் அண்ணாமலையிடம் இப்படி மாறி மாறி கேள்வி கேட்காதீங்க. எதிர்த்து பேசாதீங்க என்று கூறி அவரை உட்கார சொன்னார்கள். இந்த மோதல் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications