"கலைந்தது மவுனம்".. இங்க நிறைய மதுகுடிப்பது வன்னியர்தான்.. சொல்றது யார்னு பாருங்க.. திகைத்த அறிவாலயம்
சென்னை: திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்ட நிலையில், திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், மொத்த கணக்கும் தகர்ந்து நொறுங்கி விழுந்துள்ளது..!!
வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரத்தில், திமுக தரப்பை பாமக மேலிடம் அதிகம் நம்பி வந்தது.. அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார், அதனால் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமிருக்காது என்று பாமக அவசர செயற்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸும் ஒருமுறை கூறியிருந்தார்.

அதற்கேற்றவாறு கடந்த 2 வருடங்களாகவே, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் சரி, அன்புமணியும் சரி, திமுகமீது எந்தவிதமான ஆதங்கத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தாமலேயே இருந்ததை மற்ற அரசியல் கட்சிகளும் உற்றுகவனித்தன.
ஆனால், இந்த நம்பிக்கைகள் தற்போது மெல்ல மெல்ல தகர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.. கடந்த சில தினங்கள்வரை, திமுகவுடன் பாமக கூட்டணிக்கு முயல்வதாக தகவல்கள் வட்டமடித்த நிலையில், நெய்வேலி விவகாரத்தினால், திமுக அரசு மீது பாமகவுக்கு அதிருப்தி வெளிப்பட்டது.. வெளிப்படையாகவே திமுக தரப்பை விமர்சிக்கவும் செய்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.. இந்த விவகாரத்தையடுத்து, வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் உரசல் போக்கு துவங்கி உள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு: அந்தவகையில், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறது பாமக.. அதாவது, சாதிவாரி கணெக்கெடுப்பு நடத்தாமல் எந்த டேட்டாவை வைத்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டது? என நீதிமன்றம் எழுப்பிய கேள்வியால், இந்த இடஒதுக்கீடு சட்டம் அமல்படுத்தப்படவில்லை. இதனால் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர் சமூகம் பாதிக்கப்பட்டது.. இதற்கிடையே, தரவுகளை சேகரிப்பதற்காக திமுக அரசால் அமைக்கப்பட்ட கமிட்டியும் தனது பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காததால், கமிட்டியின் காலத்தை சமீபத்தில் நீடித்தது திமுக அரசு.
இந்தநிலையில் தான், வன்னியர் சமூகத்திற்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை மே 31-க்குள் நடைமுறைப்படுத்தி சமூகநீதியை நிலை நாட்டவேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி. இந்த கடிதத்தை தபால் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். இப்படி, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்புவதை ஒரு வேள்வியாக, ஒரு இயக்கமாக நடத்திட வேண்டும் என பாமகவினரையும் வன்னிய சமூகத்தினரையும் அன்புமணி வலியுறுத்தி வருகிறார்.
கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து வன்னியர்களும் முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் வீ.பாரதிதாசனுக்கும் கடிதம் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.. மே மாதத்திற்குள் 1 கோடி கடிதங்கள் முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தில் குவிய வேண்டும் என பாமகவில் திட்டமிடப்பட்டு வருகிறது..
இந்த கடிதம் அனுப்பும் இயக்கத்தை மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் தொடங்கி வைத்துள்ளார் அன்புமணி.. திருவிடந்ததையில் அனைத்து கட்சி வன்னியர்களையும் வீடுவீடாக சென்று சந்தித்து பேசி கடிதங்களை வழங்கினார்.. பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி, "வரும் மே31ம் தேதிக்குள் இடஒதுக்கீடு தரவில்லை என்றால் 1987ல் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடந்த சமூகநீதி போராட்டம் போன்று மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து ஒரு வருடம் ஆகிறது.
ஆனால், இந்த நம்பிக்கைகள் தற்போது மெல்ல மெல்ல தகர்ந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.. கடந்த சில தினங்கள்வரை, திமுகவுடன் பாமக கூட்டணிக்கு முயல்வதாக தகவல்கள் வட்டமடித்த நிலையில், நெய்வேலி விவகாரத்தினால், திமுக அரசு மீது பாமகவுக்கு அதிருப்தி வெளிப்பட்டது.. வெளிப்படையாகவே திமுக தரப்பை விமர்சிக்கவும் செய்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.. இந்த விவகாரத்தையடுத்து, வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் உரசல் போக்கு துவங்கி உள்ளது.
வன்னியர்கள்: தற்போதுள்ள சூழ்நிலையில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுப்பது தான் சமூக நீதி. இதுதான் நியாயம் இந்த நியாயத்தை எப்போதே செய்திருக்க வேண்டும்.உச்ச நீதிமன்றம் சொல்லி ஒரு வருடமாகியும் அரசு இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தம். தமிழ்நாட்டில் போராட்டம் என்றால் அது பாமகதான். அந்த அளவுக்கு எங்களை அரசு தள்ள வேண்டாம்." என்றார்..
"தமிழகத்தில் அதிகமாக மதுக்குடிப்பவர்கள் வன்னியர்கள் தான்" என்று அன்புமணி சொல்லியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, திமுகவுக்கு எதிரான போராட்டங்களை பாஜக செய்துவரும்நிலையில், பாமகவும் அதே ரூட்டை கையில் எடுத்துள்ளது.. இதற்கு திமுக என்ன பதிலடி தரப்போகிறது? பாமகவை எப்படி சமாளிக்க போகிறது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. அத்துடன், திமுகவுடன் பாமக கூட்டணி வைக்கும் என்ற சலசலப்புகளும் மெல்ல மெல்ல அடங்கி வருகிறது...!!












Click it and Unblock the Notifications