அக்கு அக்கா முறியுதே "அச்சாணி".. அவருக்கே ஷாக் தரும் எடப்பாடி.. "கிளம்பி வாங்க".. திரும்புதா ஹிஸ்டரி
எடப்பாடி பழனிசாமி மேலும் 2 வியூகங்களை கையில் எடுத்துள்ளதால் அமமுக கதிகலங்கி உள்ளதாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமி தன் ஆட்டத்தை துவங்கி விட்டார் போலும்.. 2 முக்கிய முடிவுகளை தற்போது திடீரென எடுத்துள்ளாராம்.. அதை பற்றின தகவல்கள்தான் களத்தில் பரபரத்து கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, கிட்டத்தட்ட முழுக்கட்சியுமே தன்கையில் கொண்டுவந்துவிட்டதாகவே தெரிகிறது.. தற்போது வந்துள்ள இந்த நீதிமன்ற தீர்ப்பானது, எடப்பாடியின் முழு வெற்றி கிடையாது, அது தற்காலிக வெற்றியே என்று டிடிவி தினகரன் போன்றோர் விமர்சித்து வருகிறார்கள்.
எனினும், இந்த நீதிமன்ற தீர்ப்பு சில சாதகங்களை எடப்பாடி பழனிசாமிக்கு பெற்றுதரும் என்பதை மறுக்க முடியாது.. கட்சி யாரிடம் உள்ளது என்று குழம்பி உள்ள நிலையில், அதிமுக தொண்டர்களிடம் தற்சமயம் இந்த தீர்ப்பு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

கிளம்பிய டவுட்
அடுத்தடுத்த தேர்தல் பிரச்சாரங்களை உற்சாகத்துடன் முன்னெடுத்துச்செல்லவும் இந்த தீர்ப்பு உதவக்கூடும் என்றும், வரப்போகும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கூடுதல் வாக்குகளை பெற்றுத்தரக்கூடும்.. ஏற்கனவே கொங்குவில் எடப்பாடிக்கு பலம் அதிகமாக உள்ள நிலையில், இனிமேல் இன்னும் கூடக்கூடும் என்றும், மேலிடத்தில் கிடைக்கக்கூடிய அத்தனை அங்கீகாரங்களையும், இனி அதிமுகவுக்கே தர வேண்டிய நிர்ப்பந்தத்தையும் இந்த தீர்ப்பு ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இவைகள் அனைத்துமே அதிமுக என்ற கட்சிக்கு பலம் என்றாலும், தனிப்பட்ட முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அளவுக்கு சாதகமாக இருக்க போகிறது என்பதுதான் மிகப்பெரிய சந்தேகமாக கிளம்பி உள்ளது..

சவால்கள்
ஒரு தலைவரின் ஆளுமையை தீர்மானிப்பது, அவர் நேரடியாக எதிர்கொள்ளும் தேர்தல் முடிவுகள்தான் என்பதால், எடப்பாடியின் ஆளுமையும் இனி அடுத்தடுத்து நடக்க போகும் தேர்தல்களின் முடிவுகளில்தான் வெளிப்பட போகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பலம்பொருந்திய திமுகவை சமாளித்து, விஸ்வரூப பாஜகவையும் பகைத்து கொள்ளாமல், எடப்பாடி மேற்கொள்ள போகும் அரசியல் இனிதான் அவருக்கு சவாலாக இருக்க போவதாகவும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, கொங்குவில் பலத்தை கூட்டியுள்ள எடப்பாடியால், தென்மண்டலங்களில் இதுவரை தன் செல்வாக்கை நிரூபிக்க முடியவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

MBC பிரிவுகள்
கடந்த சட்டமன்ற தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவை எடப்பாடியால் முழுமையாக பெற முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. காரணம், வன்னியருக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டால் அதிகம் பாதிக்கப்பட்டது எம்பிசி பிரிவில் பெரும்பான்மையாக இருந்த முக்குலத்தோர் சமூகம் தான்.. இந்த அதிருப்தியில் இருந்து அவர்களால் 2 வருடங்களாகியும் வெளியே வரமுடியவில்லை.. அதுமட்டுமல்ல, தேவர் ஜெயந்தி விழாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி புறக்கணித்ததையும் அவர்கள் இன்னமும் மறக்கவில்லை..

செல்லூர் ராஜு
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை விட்டு ஓபிஎஸ்ஸை நீக்கிய பிறகு, அந்த சமூகத்தின் வெறுப்பை சம்பாதிக்கும் சூழல் வரும் என்பதை எடப்பாடி உணராமல் இல்லை. அதனால்தான், முக்குலத்தோர் வாக்குவங்கியை கொத்தோடு அள்ளுவதற்காகவே, ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு போன்றோரையும் எடப்பாடி நம்பி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.. இதில் உதயகுமார் மீது மிகுந்த நம்பிக்கையை எடப்பாடி வைத்துள்ளதாக தெரிகிறது..

ராஜன் செல்லப்பா
எடப்பாடிக்கு அடுத்த இடத்தில் உதயகுமார் இருக்கிறார். செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா போன்றோர் அந்த கட்சியின் முக்கிய முகங்களாக இருக்கிறார்கள்.. எனினும் ஒட்டுமொத்த சமுதாய வாக்குகளையும் எடப்பாடி பக்கம் திருப்ப முடியாது என்கிறார்கள்.. இப்படிப்பட்ட சூழலில்தான், ஒரு அதிர்ச்சி தகவல் எடப்பாடி கூடாரத்தை எட்டியுள்ளது.. வரும் தேர்தலில் அதிமுகவை முக்குலத்தோர் சமூகத்தினர் மற்றும் அந்த சமூகம் சார்ந்த அமைப்புகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாம்.. எனவே, உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா போன்றோருக்கெல்லாம், கட்சியையும் தாண்டி மீடியா வெளிச்சம் அதிகம் பாய்ச்சப்பட வேண்டும் என்று ரகசிய உத்தரவை எடப்பாடி பிறப்பித்துள்ளாராம்.

இளங்கோவன்
அதேசமயம், தென்மண்டலங்களில் டிடிவி தினகரனின் செல்வாக்கை தகர்த்து, தன்னுடைய செல்வாக்கை கூட்டும் அளவுக்கு இன்னொரு யுக்தியையும் கையில் எடுத்துள்ளாராம்.. அதன்படி, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனிடம் இருக்கும் நிர்வாகிகளை இழுக்கும் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறாராம்... இதற்கான பொழுப்பை சேலம் இளங்கோவனிடம் தந்துள்ளாராம் எடப்பாடி.. இதன் முதல் முயற்சியாக தென்மாவட்டத்தை சேர்ந்த அமமுக மண்டல பொறுப்பாளரிடம் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை இளங்கோவன் நடத்தி முடித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.. விரைவில் அந்தப் பொறுப்பாளர் தலைமையில், தென் மண்டல அமமுக நிர்வாகிகள் சிலர் எடப்பாடி பக்கம் வரக்கூடும் என்கிறார்கள்.

ஸ்கெட்ச்
இதற்கு பிறகு, திருச்சியை சேர்ந்த மாஜி எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர் போன்றோருக்கும் ஸ்கெட்ச் போட்டுள்ளதாம் இளங்கோவன் தரப்பு.. அந்தவகையில், தென் மண்டலத்தை தொடர்ந்து இவர்களும் கூடிய சீக்கரம் எடப்பாடி பக்கம் அதிமுகவில் இணையலாம் என்கிறார்கள்.. ஏற்கனவே ஓபிஎஸ் கூடாரத்துக்கு வலையை விரித்து, அங்குள்ளவர்களிடம், தூது நடவடிக்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் தினகரன் கூடாரம் பக்கமும் எடப்பாடி கவனத்தை திருப்பி உள்ளது, பரபரப்பை கூட்டி வருகிறது.. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம். !!

சசி சிக்னல்
இது இவ்வாறிருக்க, அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாம் ஓபிஎஸ் கூடாரம்.. இந்த சமயத்தில்தான், ஓபிஎஸ்ஸுக்கு நம்பிக்கையும், தெம்பையும் ஏற்படுத்தும் விதமாக, நேற்று ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் தினகரனும், சசிகலாவும் பேசியிருந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. "தனி நபர் யாருமே முடிவெடுக்க முடியாது. அதிமுகவை பொறுத்தவரை அடிமட்ட தொண்டர்களின் முடிவு தான் இறுதி முடிவு. அதனால் ஓபிஎஸ்-க்கு பின்னடைவு கிடையாது என்று சசிகலா அவரது ஆதரவாளர்களிடம் பேசியிருக்கிறார்..

தாயம் ஒண்ணு
அதேபோல, ஓபிஎஸ் என்னுடைய பழைய நண்பர் என்பதை அழுத்தமாக சொல்லிவரும் தினகரன், "எடப்பாடிக்குப் போட்டி திமுக இல்லை. நானும் ஓ பன்னீர்செல்வமும் தான் போட்டி" என்று பேசியிருக்கிறார்.. அதுவும் தேனிக்கே சென்று அங்கு நடந்த விழாவில் பேசியுள்ளார்.. அந்தவகையில், எடப்பாடிக்கு எதிராக, ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் ஆகியோர் ஒன்றுகூட உள்ள நிலையில், இதற்கான சந்திப்புகள் விரைவில் நடக்கக்கூடும் என்கிறார்கள்.. இவர்கள் ஒன்றிணையும்பட்சத்தில், முக்குலத்தோர் வாக்குகளை அள்ளுவதற்கு, எடப்பாடி பழனிசாமி இன்னும் நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்..!!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications