"ராஜதந்திரம்".. எடப்பாடி போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்..அதிர்ந்த ஓபிஎஸ் கூடாரம்..எல்லாமே போச்சா..என்னாகும்
திமுகவுடன் எடப்பாடிக்கு ரகசிய உறவு இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள்
சென்னை: ஓபிஎஸ், பொதுக்குழுவை கூட்ட ஆயத்தமாகி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய கடைசி அஸ்திரத்தை கையில் எடுக்க போகிறாராம்.. இதுதான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.
Recommended Video
கோர்ட்டு உத்தரவுப்படி இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியும், புதிதாக நியமிக்கப்பட்ட அவைத்தலைவர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளும் செல்லாததாகி விட்டன.
இந்த தீர்ப்பு வெளியாகிய நிலையில்தான், கூட்டுத்தலைமையோடு மறுபடியும் ஒன்று கூடுவோம், கட்சியை நடத்துவோம் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்தார்.

கறார்தன்மை
ஆனால், அந்த வேண்டுகோளை எடப்பாடி பழனிசாமி நிராகரித்து விட்டார். இருவரும் இணைந்து செயல்பட இனி வாய்ப்பே இல்லை என்பதையும் திட்டவட்டமாகவும் சொல்லிவிட்டார்.. ஓபிஎஸ் தனக்கு, அழைப்பு விடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில், தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்... இந்த வழக்கு வருகிற 22-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கின் முடிவை எடப்பாடி பழனிசாமி பெரிதும் நம்பி உள்ளார்.

வக்கீல் டீம்
அதுமட்டுமல்ல, வேறு சில திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி முன்னெடுக்க போவதாக தகவல்கள் பரபரக்கின்றன.. அந்தவகையில், தலைமை கழகத்துக்கு செல்ல கோர்ட்டு விதித்து இருந்த தடையும் முடிவடைந்துவிட்ட நிலையில், தலைமை கழகத்துக்கு செல்ல அனுமதி கேட்டு அடுத்த வாரம் மனு செய்யவும் எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம். இன்னொரு பக்கம், ஹைகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீலுக்கு சென்றுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் டீமுடன் தொடர்ந்து ஆலோசித்தும் வருகிறார்.. இதையடுத்து, ஓபிஎஸ் பெற்ற தீர்ப்பில் தடை வாங்கலாம் என்றும் கணக்கு போட்டு வருகிறாராம்.

ஈபிஎஸ் அப்செட்
அப்படியும், தன்னுடைய பிளான்கள் எதுவும் ஒர்க்அவுட் ஆகாத பட்சத்தில், மிகப்பெரிய மற்றும் கடைசி அஸ்திரத்தை எடப்பாடி கையில் எடுக்கப்போகிறாராம்.. அதன்படி, தன்னுடைய பலம் வாய்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் மூலமாகவே, பொதுக்குழு நடக்கவேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்க சொல்ல போகிறாராம்.. ஒருவேளை இதற்கு ஓபிஎஸ் சம்மதிக்காவிட்டால், நீதிமன்றம் நியமித்துள்ள, ஆணையர் மூலமாகவே பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் யோசிப்பதாக கூறப்படுகிறது.

புதுசா போட்ட பிளான்
இப்படி ஆணையர் மூலம், அல்லது ஆணையர் முன்பு பொதுக்குழு நடத்துவது ஒருவகையில் தங்களுக்கு, சாதகமான விஷயமாகவே அமையும் என்பதே எடப்பாடியின் இறுதி நம்பிக்கையாக உள்ளதாக தெரிகிறது.. ஆனால், ஓபிஎஸ் தரப்பிலோ, பொதுக்குழுவை அதற்கு முன்கூட்டியே நடத்த வேண்டும் என்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளனர்.. இந்த பொதுக்குழுவில், எடப்பாடியும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவருக்கு, பலவகைகளில் அழைப்பு விடுக்கும் படலம் ஆரம்பமாகி உள்ளது. ஆனால், எதற்கும் இதுவரை எடப்பாடி பழனிசாமி பிடிகொடுக்காத நிலையில், ஓபிஎஸ் இன்னொரு முடிவை எடுக்க போகிறாராம்.

அழைப்பு + நிராகரிப்பு
ஒன்றிணைய அழைப்பு விடுத்தால், அதையும் நிராகரித்துவிட்டு, பொதுக்கூட்டத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தால் அதனையும் நிராகரித்துவிட்டு, தொடர் பிடிவாதத்திலேயே எடப்பாடி இருந்தால், சட்டப்போராட்டத்துக்கும் தயாராக வேண்டியதுதான் என்று ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டாராம்.. இப்படி இரு தரப்பிலும் யாருமே ஒருமுடிவுக்கு வராத நிலையில், ரத்தத்தின் ரத்தங்கள் குழம்பி விழிபிதுங்கி போயுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications