"டேஞ்சர்" பழனிசாமி.. ஸ்பாட்டுக்கே போயிட்டாரே.. டச் பண்ணாதீங்க.. எடப்பாடியின் ஆவேசம்.. அரண்ட தலைவர்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தை பார்த்து அவரது ஆதரவாளர்கள் புல்லரித்து போயுள்ளார்களாம்.. ஆனால், ஓபிஎஸ்ஸின் விஸ்வரூபத்தை பார்த்து, எடப்பாடியோ எரிச்சலடைந்து வருகிறாராம்.. இதுதான் தஞ்சையில் எதிரொலிக்க செய்துள்ளது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்..!!
சமீபகாலமாகவே, ஓபிஎஸ்ஸின் அரசியல் வேகம் எடுத்து வருகிறது.. மூத்த தலைவர் பண்ருட்டியார் சொல்லியிருந்ததுபோலவே, மக்களை நேரடியாகவே சந்திக்க கிளம்பி விட்டார்கள்.
மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அத்துடன், திருச்சியில் நடக்க போகும் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த தயாராகி வருகிறார்கள்.

மாநாடு
இந்த மாநாடுதான், தங்களின் ஒட்டுமொத்த பலத்தை நிரூபிக்கும் என்றும் கனத்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் ஓபிஎஸ் தரப்பினர்.. எடப்பாடி பழனிசாமியிடம், 90 சதவீத நிர்வாகிகள் ஆதரவாக இருப்பதாக சொன்னாலும், கட்சி பெரும்பாலும் அவரிடமே இருப்பதாக சொன்னாலும்கூட, இதுவரை ஓபிஎஸ் தரப்பில் இருந்து ஒருத்தரையும் தன்பக்கம் சாய்க்க முடியவில்லை என்பதை நாம் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.. அமமுக, பாஜக தரப்பில் இருந்து மட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியில் இருந்தும்கூட, நிர்வாகிகளுக்கு வலையை வீசி அதிமுக பக்கம் கொண்டுவரும் நிலையில், எடப்பாடியால் மிகவும் பலவீனமாக கருதப்படும் ஓபிஎஸ் டீமில் இருந்து, ஒரு நிர்வாகிக்கும் தூண்டிலை போடமுடியவில்லை.. நூலும் விடமுடியவில்லை.

பண்ருட்டியார்
ஓபிஎஸ் தரப்பில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ் உள்ளிட்ட சீனியர்கள் மட்டுமே உள்ள நிலையில், மெல்ல மெல்ல ஓபிஎஸ்ஸின் கூடாரமும் கலைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரபரத்தும், அப்படி எதுவுமே நடக்கவில்லை. சில நாட்களுக்கு முன்புவரை, வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் கொண்டுவர, திமுக முயற்சிப்பதாக சொல்கிறார்கள்.. காரணம், முக்குலத்தோர் வாக்குகளை, டெல்டா பகுதிகளில் இன்னும் பலப்படுத்தவே இப்படி ஒரு முயற்சியை திமுக எடுக்க நினைக்கிறதாம்.. சசிகலா சிறைக்கு சென்றபோதும், எடப்பாடி பழனிசாமி முதல்வரானதற்கு பிறகும், அதிமுகவில் முக்குலத்தோருக்கு முக்கியத்துவம் அவ்வளவாக என்ற பேச்சு உள்ளது..

பலே தந்திரம்
ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்தபோதும்கூட, அவரால் எடப்பாடியை மீறி பெரிதாக செய்ய முடியவில்லை.. தவிர, கவுண்டர் சமூகத்துக்கான முக்கியத்துவமே அதிகமாகி கொண்டு வந்தது. இதனால், முக்குலத்தோர் வாக்குகள் அதிமுகவுக்கு வெகுவாக குறையவும், இந்த நேரத்தில்தான், திமுக பலே தந்திரத்தை கையில் எடுத்தது.. டெல்டாவில் உள்ள அச்சமூக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அள்ள முயன்றது.. இப்போதைக்கு தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் போன்றோர்களுக்கு அமைச்சர் பதவி தந்து முன்னுரிமை தரப்பட்டாலும், டெல்டா புள்ளி வைத்திலிங்கமும் திமுக பக்கம் வந்தால் அதிமுக இன்னும் பலவீனமடையும், தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியையும் பலப்படுத்தலாம் என்று திட்டமிடுகிறதாம் திமுக..

செயல்புயல்
எனவே, வைத்திலிங்கத்தை திமுகவுக்கு கொண்டு வருவதற்கான அசைண்ட்மெண்ட், வழககம்போல் "செயல்புயல்" செந்தில் பாலாஜியிடம் தரப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன... ஏற்கனவே அதிமுகவில் இருந்தவர் என்பதால், அனைவரிடமும் அரசிலையும் தாண்டி நல்ல நட்பில் இருந்து வருகிறார் செந்தில்பாலாஜி.. மாற்று கட்சியினரை திமுகவுக்கு அள்ளி கொண்டுவருவதில் கைதேர்ந்தவரான செந்தில்பாலாஜி, வைத்திலிங்கத்தையும் கொண்டுவருவாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.. ஆனால், இதே வைத்திலிங்கத்தை, தங்கள் கூடாரத்துக்கு கொண்டுவர கடந்த சில மாதங்களாகவே எடப்பாடி டீம் முயன்றது.. ஆனால், ஓபிஎஸ், மற்றும் சசிகலாவின் நம்பிக்கைக்குரியவராக அவர் இருப்பதை பார்த்து, வைத்திலிங்கத்தை இழுக்கும் முயற்சியை கைவிட்டுவிட சொன்னாராம் எடப்பாடி பழனிசாமி..

தொட முடியாது
வைத்திலிங்கத்தை தவிர அவரின் அணியிலிருந்து யாரை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் என்ற உத்தரவும் பறந்திருக்கிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், முன்னாள் அமைச்சர் காமராஜ் மகன் டாக்டர் இன்பன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சையில் நடந்து முடிந்துள்ளது.. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியது, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. "என்னைப்போல் ஒரு லட்சம் பழனிச்சாமிகள் அதிமுகவில் இருக்கிறார்கள். எவனாலும் அதிமுகவை அழிக்க முடியாது. இந்த பழனிச்சாமி இல்லை என்றால், வேறு ஒரு பழனிச்சாமி வந்து கட்சியை காப்பாற்றுவார். இந்த இயக்கத்தில் ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். ஒன்றரைக் கோடி தொண்டர்கள் இருக்கும் வரை இந்த கட்சியை எவனாலும் தொட்டுப் பார்க்க முடியாது" என்று காட்டமாக கூறியிருந்தார்.

வைத்தி கோட்டை
வைத்திலிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே சென்று, எடப்பாடி இவ்வாறு பேசியதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. இந்த கல்யாணத்துக்கு வரும் வழியில், ஓபிஎஸ்ஸின் ஆதரவாளர்கள், தனக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றதை பார்த்ததுமே எடப்பாடி பழனிசாமி டென்ஷன் ஆகிவிட்டாராம்.. அதுமட்டுமல்ல, இன்றுவரை, தனியாக இயக்கம் நடத்தி தாக்குப்பிடிக்கும் அளவுக்கு ஓபிஎஸ் அந்த அளவுக்கு பலம்வாய்ந்தவர் கிடையாது என்று கருதும் எடப்பாடி பழனிசாமி, அப்படிப்பட்டவரை இன்னமும் விடாப்பிடியாக இயங்க வைப்பது வைத்திலிங்கம் தான் என்றும் உறுதியாக நம்புகிறாராம்.. வைத்திலிங்கம் இருக்கும் தைரியத்தில்தான், ஓபிஎஸ் இன்னமும் அரசியல் செய்கிறார் என்ற காட்டம் எடப்பாடிக்கு நிறையவே உள்ளதாம். அதனால்தான், வைத்திலிங்கத்தை அவரது சொந்த ஊரிலேயே வைத்து, அதிரவிட வேண்டும் என்று நேரம் பார்த்து காத்திருந்தாராம்.

மிஞ்சிட்டாரே
இந்த சூழலில்தான், காமராஜ் தன்னுடைய மகன் கல்யாணத்துக்கு எடப்பாடி பழனிசாமியிடம் தேதி கேட்டிருக்கிறார்.. காமராஜ் திருவாரூரை சேர்ந்தவராக இருந்தாலும், தஞ்சையில் விழாவை வைக்க வேண்டும் என்று எடப்பாடியிடம் பேசி முடிவெடுத்தாராம்.. தஞ்சையில் அதிமுக சார்பாக அதாவது வைத்திலிங்கத்தை மிஞ்சும் அளவுக்கு பெரிய புள்ளிகள் யாரும் இல்லாததால், அந்த இடத்தைப் பிடிக்க காமராஜூம் முயற்சிப்பதாக தெரிகிறது.. அதனால்தான், தஞ்சைக்கு இந்த கல்யாணத்தை மாற்றி வைத்ததுடன், "அதிமுகவை எவனாலும் தொட்டுக்கூடப் பார்க்கமுடியாது" என்று கர்ஜித்தாராம் எடப்பாடி பழனிசாமி..!!!
-
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
விஜய்க்கு ஷாக்.. தமிழக வெற்றி கழகத்துக்கு செக்! 10 சதவீதத்துக்கும் கீழே ‘தவெக’ - சறுக்கிய வியூகம்? -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications