எடப்பாடிக்கு அப்பாயின்ட்மென்ட்டே கிடைக்கலயாமே.. தனித்து விடப்படுகிறாரா.. பாஜக ப்ளான் இதுதானாம்..!!
எடப்பாடி பழனிசாமியின் மெகா கூட்டணி எது என்பது குறித்து தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி, பாஜகவுடன் கூட்டணி அமைப்பாரா? அல்லது பாஜக, எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு கூட்டணி அமைக்குமா? என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இன்று பிரதமர் மோடியை அதிமுகவின் முக்கிய தலைவர்கள் நேரில் சந்திக்க இருப்பதாக தெரிகிறது. மதுரை வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக ஏற்கனவே பிரதமர் அலுவலகத்திற்கு இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர்... பிரதமர் மோடியும் மதுரை ஏர்போர்ட்டில் இருவரையும் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி மீட்டிங்
இதையடுத்து இன்று மதியம் 2.30 மணி அளவில் திண்டுக்கல்லுக்கு புறப்படும் முன்பு எடப்பாடி பழனிசாமியை மோடி சந்திப்பதாகவும், மாலை 4.30-க்கு திண்டுக்கல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை ஏர்போர்ட் வரும் போது ஓபிஎஸ்ஸை பிரதமர் மோடி சந்திப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.. அதற்கேற்றார்போல், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி பிரதமரை வரவேற்க நேரில் செல்ல இருப்பதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆக மொத்தம், கூட்டணி விஷயமாகவும், உட்கட்சி விஷயமாகவும் பேச வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

தம்பிதுரை
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்திக்க வாய்ப்பு உள்ளதா என்று தம்பிதுரையிடம் கேட்டதற்கு, பிரதமர் மோடியை வரவேற்பதற்காக எடப்பாடி பழனிசாமி மதுரை செல்கிறார். அதிமுக - பாஜக கட்சிகள் கூட்டணியாக இருக்கின்றன. அதனால் கூட்டணி கட்சியின் தர்மம் காரணமாக வரவேற்கிறோம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், தனியார் டிவி ஒன்றிற்கு அரசியல் விமர்சகரும், மூத்த பத்திரிகையாளருமான தராசு ஷ்யாம் ஒரு பேட்டி தந்துள்ளார்.. எடப்பாடி அமைக்கப்போகும் மெகா கூட்டணி குறித்து அதில் கருத்து தெரிவித்துள்ளார்.

சீரியல்
அதன் சுருக்கம்தான் இது: "எனக்கு தெரிந்து 3 வகையான கூட்டணிகள்தான் தமிழகத்தில் உண்டு. ஒன்று இயற்கையான கூட்டணி, அதாவது சில இஸ்லாமிய அமைப்புகள் எப்போதுமே திமுகவுடன் கூட்டணியில் இருப்பார்கள்.. இது இயற்கையாக அமைவது.. அதேபோல, வானவில் கூட்டணி என்று ஒன்று உண்டு.. எல்லா கட்சிகளையும் ஒன்றிணைத்து கூட்டணி வைத்துக் கொள்வது.. அண்ணா காலத்தில் இருந்து இருப்பது, அதேபோல கதம்ப கூட்டணி.. அவசர அவசரமாக சட்டையை தைத்துக் கொள்வது போன்றது.. இந்த 3 ரக கூட்டணி உண்டே தவிர, மெகா கூட்டணி என்று ஒன்று நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை.. மெகா சீரியல்தான் கேள்விப்பட்டுள்ளேன்..

இடியாப்ப சிக்கல்
எல்லா கட்சியும் இருந்தால்தான் அது மெகா கூட்டணி.. அப்படி என்றால் திமுகவும் அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு கூட்டணியே இல்லை என்பதுதான் சாத்தியமாகி உள்ளது.. பாமக இல்லை, பாஜக இல்லை, வாசன் கட்சியும் வளர்ந்து வரும் கட்சி... இதெல்லாம் மெகா கூட்டணி வரிசையில் வராது.. எடப்பாடிக்கு சிக்கல் என்னவென்றால், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பதவியே கிடையாது.. 4 மாத கெடுவும் முடிவுறும் நிலையில், இப்போதுள்ள பதவியும் காணாமல் போய்விடும்.. எந்த அடிப்படையில் மெகா கூட்டணி அமைக்க போகிறார் என்று தெரியவில்லை..

அப்பாயின்ட்மென்ட்
பிரதமர் சந்திப்புக்காக அப்பாயின்ட்மென்ட்டை இரு தரப்பிலுமே கேட்டார்கள்.. ஆனால், பிரதமர் தரப்பில் இருந்து அந்த அப்பாயின்ட்மென்ட் தரப்படவில்லை என்றுதான்.. இதை இன்று சில பத்திரிகையிலும் கோடிட்டு காட்டி உள்ளார்கள்.. இருவரும் சேர்ந்து வந்தால், சந்திப்பதாக சொல்லிவிட்டதாக தெரிகிறது.. அமித்ஷா வந்ததும் மறுபடியும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடக்கலாம்.. அதேபோல தினகரனை பொறுத்தவரை, அதிமுகவுடன் இணைப்பு இல்லை, ஆனால் கூட்டணி சாத்தியம் என்ற நிலைப்பாட்டில்தான் தினகரன் உள்ளார்.. "அதிமுக என் தலைமையில்தான், நான் ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர், ஆகவே பழைய நிலைமையே தொடர வேண்டும்".. இது ஓபிஎஸ்ஸின் நிலைப்பாடு..

மாஸ்டர் ஸ்டிரோக்
"நான் மட்டும்தான்" என்பது எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடு.. ஆக, நிலைப்பாடுகள் என்பது மாறுபட்டுள்ள நிலையில், அனைவரும் ஒன்றுசேர்வார்களா என்பது சந்தேகமாக உள்ளது.. எடப்பாடியை பொறுத்தவரை, போனது போனதாகவே இருக்கட்டும், மற்ற கட்சிகளை இணைத்து கூட்டணி வைக்கலாம் என்று நினைக்கிறார்.. அதனால், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்துவிட்டு, புது கூட்டணியை பாஜக கையில் எடுக்கும் என்றே தெரிகிறது.. காரணம், அதிமுகவின் ஒருபகுதியின் ஓட்டுக்களாவது பாஜகவுக்கு தேவை..

ஓவர் ஸ்பீடு
அண்ணாமலை வந்தபிறகு, செயல்வேகம் கூடியிருக்கிறது.. பூத் கமிட்டி வேகம் கூடியுள்ளது.. கிளைகள் அமைக்கும் வேகம் கூடியுள்ளது.. இதெல்லாம் ஓட்டுக்களாக மாறுமா என்பது தெரியவில்லை.. ஆனால், செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.. அந்தவகையில், எடப்பாடிக்கு பணிந்து தமிழக பாஜக போகாது.. அதனால்தான், மெகா கூட்டணி என்கிறார்.. அவருடன் இருக்கும் வேலுமணி, தங்கமணி போன்றோரை தக்க வைத்துக் கொள்வதற்காக சொல்கிற விஷயம்தான் இந்த மெகா கூட்டணி.

திருமாவளவன்
விசிக, காங்கிரஸ், எடப்பாடி தலைமையில் இணைந்து வருவதாக கூறுகிறார்கள்.. ஆனால், அது சரியானதாக தெரியவில்லை.. ஏனென்றால், எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு என்று தனியாக ஓட்டுக்கணக்கு எதுவும் இல்லை.. இரட்டை இலைக்கு என்று தனி ஓட்டு வங்கி உள்ளது.. அந்த ஓட்டு வங்கியில் சேதாரம் ஏற்பட்டுள்ளது.. கொங்கு மண்டலத்தை மட்டும் வைத்தால் 7 அல்லது 8 சதவீதமாக இருக்கலாம்.. ஏனென்றால் கடந்த முறையாவது பாமக, பாஜகவின் ஓட்டு வங்கி இருந்தது.. ஆனால், இப்போது எடப்பாடி தலைமையில், இரட்டை இலை இல்லாத ஒரு புது சின்னத்தில் கூட்டணி என்றால், அது 7 அல்லது 8 சதவீதம் மட்டுமே வரும்.. தனிப்பெருந்தலைவராகவும் அவர் கிடையாது என்பதே உண்மை.. அதனால், விசிக, காங்கிரஸ் என்ற கூட்டணி கணக்கே சரியாக வராது என்று நினைக்கிறேன்" என்றார்.
-
புதுச்சேரியில் பிரதமர் மோடி ரோடுஷோ.. மலர்தூவி உற்சாக வரவேற்பு கொடுத்த மக்கள்.. -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
ஊருக்கு முன்பே வேட்புமனு தாக்கல் செய்த தஞ்சை பாஜக நிர்வாகி முரளீதரன்! நயினார் எடுத்த ஆக்ஷன்! -
Annamalai: தமிழக சட்டசபை தேர்தல்.. ஒரு வழியாக பாஜகவின் "அந்த" பட்டியலில் இடம்பெற்ற அண்ணாமலை பெயர்! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
அண்ணாமலைக்கு இந்த பவர்ஃபுல் போஸ்ட்டிங் தர்றாரா மோடி.. கோவை பிடிவாதம் உடைந்ததா? லாபமா? நஷ்டமா -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications