"விட்ருங்க, கிட்ட போகாதீங்க".. எடப்பாடிக்கு போன மெசேஜ்.. இதுல இவ்ளோ இருக்கா.. "இருதலைக்கொள்ளி" லீடர்
எடப்பாடி பழனிசாமி தரப்பில் நடந்த 2 விதமான விவாதங்கள் தற்போது வெளியே கசிந்து வருகிறது
சென்னை: அதிமுக - பாஜக விவகாரம் ஓரளவு முடிவுக்கு கொண்டுவரப்பட்டாலும், 2 விதமான சிக்கல்கள் எடப்பாடி பழனிசாமியை சூழ்ந்துள்ளதாக தெரிகிறது.. அது தொடர்பான சில தகவல்களும் அரசியல் களத்தில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
அதிமுக 4 ஆக உடைந்துகிடந்தாலும், பெரும்பான்மையான கட்சி, எடப்பாடி பழனிசாமி வசம் "தற்சமயம்" உள்ளது.. இதில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தரப்பிலேயே 2விதமான டீம்கள் உள்ளன.
கடந்த ஒருவருட காலமாகவே, மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், முனுசாமி, சிவி சண்முகம், என பலரும் பாஜகவுக்கு எதிராக திரண்டுள்ள நிலையில், வேலுமணி, தங்கமணி போன்ற சீனியர்கள், பாஜகவுக்கான ஆதரவு அலையை வீசிவருவதாக கூறப்படுகிறது.

டபுள் டீம்
அதற்கேற்றவாறு, இதுவரை பாஜகவை எதிர்த்து கொங்குமண்டல அதிமுக சீனியர்கள் இதுவரை எந்த ஒரு பேட்டியையும் தராமல் உள்ளதையும் நிர்வாகிகள் கவனிக்காமல் இல்லை.. இப்படி தன்னுடைய ஆதரவாளர்களிலேயே 2 விதமான டீம்கள் பிரிந்து செயல்பட்டுவருவதுதான், எடப்பாடி பழனிசாமிக்கு பல தருணங்களில் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடுவதாக சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, கொங்கு மண்டலத்தின் சில சீனியர்கள், பாஜக பக்கம் தாவ இருப்பதாகவும் அடிக்கடி உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் மின்னல்போல வந்து மறைந்து விடுவது சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

செல்லூரார் நறுக்
இந்நிலையில்தான், சமீபகாலமாகவே பாஜக - அதிமுக இரு தரப்பும் மோதல் போக்கை கொண்டுள்ளன.. இவர்களுக்குள் என்ன நடந்தது என்றே இதுவரை தெரியவில்லை.. எதற்காக பாஜக அதிருப்தியாளர்கள், மாநில தலைமை மீது கோபப்பட்டுக் கொண்டு, எடப்பாடி பக்கம் தாவினார்கள் என்றும் தெரியவில்லை.. இதனால், இரு கட்சிகளின் நிர்வாகிகளும் ஒருவரையொருவர் சரமாரியாக விமர்சித்து கொண்டனர்.. செல்லூர்ராஜு ஒருபடி மேலே போய், பாஜகவை கடுமையாக விமர்சித்துவிட்டார்.. இதற்கு முன்பு செல்லூர்ராஜு யார்மீதும் இப்படி கோபத்தையும், அதிருப்தி வார்த்தைகளையும் உதிர்த்ததும் கிடையாது.

அலர்ட் மேட்டர்
ஆனால், நேற்று முன்தினம் இந்த விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிட்டது. அதிமுக மற்றும் பாஜகவின் கொங்கு மண்டல சீனியர்கள்தான் இந்த விஷயத்தில் தலையிட்டு சுமூக பேச்சு நடத்தியதாகவும், அதற்கு பிறகே இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.. இந்நிலையில், இது தொடர்பாக வேறு சில தகவல்களும் கசிந்து வருகின்றன.. அதாவது, டெல்லி மேலிடத்தில் இருந்து, மேற்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுகவின் மாஜிக்களுக்கு அலர்ட் தரப்பட்டதாம்.. ஏற்கனவே ஏகப்பட்ட வழக்கு விசாரணைகள் நடந்து கொண்டுவரும் நிலையில், எந்த விவகாரத்திலும் தலையிடாமல் இவர்கள் சமீபகாலமாகவே ஒதுங்கி உள்ளதாக தெரிகிறது..

சிக்னல்கள்
இப்படிப்பட்ட சூழலில்தான், கடந்த சில தினங்களாக பாஜகவிடம், அதிமுக உரசல் போக்கை தொடரவும், மேலிடத்தில் இருந்து கொங்கு மண்டல சீனியர்களுக்கு "சிக்னல்" தரப்பட்டதாம். அதற்கு பிறகே, எடப்பாடியிடம் இதுதொடர்பாக பேசி பார்க்கலாம் என்று முடிவெடுத்து, கொங்கு மாஜிக்களிடம் எடப்பாடியிடம் பேசினார்களாம்.. "தேவையில்லாமல் பாஜவிடம் மோத வேண்டாம்... நம்மிடம் இப்போது ஆட்சி அதிகாரம் கிடையாது. பாஜக மீதான தாக்குதல்கள் இந்த நேரத்தில் தேவையற்றது" என்று அலர்ட் செய்தார்களாம். அதற்கு பிறகே எடப்பாடி பழனிசாமி, பாஜகவை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று தன்னுடைய நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டாராம்.. மேலும், அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்றும் அறிவித்தும் விட்டாராம்..

சால்ஜாப்புகள்
மாஜிக்கள் சொன்னதுமே இதற்கு எடப்பாடி உடனடியாக ஓகே சொன்னதற்கு காரணம், சம்பந்தப்பட்ட மாஜிக்கள் பாஜக பக்கம் போய்விட்டால் என்னாவது? அல்லது அதிமுகவை உடைத்துவிட்டால் என்னாவது? ஏற்கனவே ஓபிஎஸ் குடைச்சல் தரும்நிலையில், இதெல்லாம் தேவையில்லாத பிரச்சனைகளைஉருவாக்கிவிடக்கூடும் என்பதால்தான், அவர்கள் ஆலோசனை சொன்னதுமே, அதற்கு கட்டுப்பட்டு ஏற்றுக் கொண்டாராம். எப்படி பார்த்தாலும், அதிமுக - பாஜக இடையே, தற்போது சலசலப்புகள் ஓய்ந்துள்ளது ஒருவித நிம்மதி உணர்வை இரு தரப்புக்குமே தந்துவருவதாக தெரிகிறது.

ஸ்ட்ராங் மேட்டர்
ஆனால், நேற்றுமுன்தினம் அதிமுகவின் ஆலோசனை கூட்ட முடிவில், இன்னொரு விஷயமும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.. கொங்கு மற்றும் தென்மண்டல நிர்வாகிகள் சிலர் எடப்பாடியிடம் எம்பி தேர்தல் குறித்து விவாதித்திருக்கிறார்கள்.. அப்போது பாஜகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்களாம்.. காரணம், இதுவரை நடந்த 17 எம்பி தேர்தல்களிலும், வலுவான பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்திய கூட்டணிக்கே, தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர்.. 2014-ல் ஜெயலலிதா தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியதால்தான் வெற்றி கிடைத்தது.

சஸ்பென்ஸ்
கடந்த 2019ல், ராகுலை முன்னிறுத்தி தான் திமுகவும் வெற்றி பெற்றது. அதனால், வரும் எம்பி தேர்தலில், பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதே நல்லது, இல்லாவிட்டால், கோவை, திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்கள், திமுகவுக்கு சாதகமாகி விடும் என்று சொன்னார்களாம்.. அதற்கு எடப்பாடி பழனிசாமி, நம்முடைய குறி, 2026 தேர்தல்தான்.. இப்போதைக்கு 25 சதவீத ஓட்டு வங்கியை இடைத்தேர்தலில் நிரூபித்துள்ளோம்.. கட்சியை வலுப்படுத்தி இன்னும் 35 சதவீத ஓட்டு வங்கியை உறுதிப்படுத்துவோம்.. கூட்டணியை பற்றி பிறகு பார்ப்போம்" என்று கூறியுள்ளாராம். அந்த வகையில், எம்பி தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற போகிறதா? இல்லையா? என்பது சஸ்பென்ஸாகவே தொடர்கிறது போலும்..!!

எடப்பாடி
இது ஒருபுறம் என்றால், ஓபிஎஸ் தரப்பும் எடப்பாடி மீதான காட்டத்தை வெளிப்படுத்த துவங்கிவிட்டது.. இன்றைய சிவகங்கையில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி காட்டி உள்ளது.. அப்போது ஓபிஎஸ் ஆதரவாளரான மருது அழகுராஜ் பேசும்போது, அதில், "எடப்பாடி பழனிசாமி முகத்தை பார்த்தாலே துரோகத்தை நினைத்து கோபம் வரும்.. தமிழ்நாடு முழுவதும் அவருக்கு எதிராக எதிர்ப்பு வரும்.. அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும், பழனிசாமிக்கு எதிராகவே இருக்கிறார்கள்.. அவருக்கு மக்கள் மத்தியில் உள்ள எதிர்ப்பின் வெளிப்பாடுதான், இன்று விமான நிலையத்தில் வெளிப்பட்டுள்ளது.. அதிமுகவை சாதி கட்சியாக பழனிசாமி மாற்றிவிட்டார்.. எடப்பாடி பழனிசாமி செல்லும் இடமெல்லாம் எதிர்ப்பு எழும்" என்றார்..

ஹைஜாக்
இன்னொன்றும் சொல்லப்படுகிறது.. இந்த முறை இடைத்தேர்தல் விவகாரத்தில் தங்களை பாராமுகமாக நடத்திய பாஜக மீது ஓபிஎஸ் தரப்பு அதிருப்தியில் உள்ளது.. அண்ணாமலையை கண்டித்து தீர்மானமும் இயற்றும் அளவுக்கு சென்றுவிட்டது. தங்களை பாஜக கழட்டிவிட்டதே என்ற கோபத்தில்தான், நாங்கள் மக்களிடம் செல்லபோகிறோம், மக்களை சந்திக்க போகிறோம் என்று மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியிருந்தார். அதன்படியே இன்றைய தினம் ஓபிஎஸ் தரப்பு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்துள்ளது.. ஒருபக்கம் பாஜக + மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி என இரு தரப்புக்குமே தங்கள் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஓபிஎஸ் டீமுக்கு ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications