"பணிந்த" எடப்பாடி?.. சிக்கலா போயிடுச்சோ.. திமிறி எழும் பாஜக.. விட்டால் திமுகவுக்கே லாபம்.. கிளைமாக்ஸ்
எடப்பாடி பழனிசாமி பாஜகவை தவிர்த்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாராகிறாரா
சென்னை: வரும் எம்பி தேர்தலில், பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைப்பாரா? ஒருவேளை பாஜகவை கழட்டிவிட்டு, தேர்தலை சந்திக்க தயாராகிறாரா? அப்படி தனித்து போட்டியிட்டால் அது அதிமுகவுக்கு நல்லதா? என்பன போன்ற சந்தேகங்களும், அக்கறை நிறைந்த கவலையும் வட்டமடிக்க துவங்கி உள்ளது.
கடந்த எம்பி தேர்தலின் சமயம், அதாவது குடியுரிமை சட்டம் எதிரொலித்தபோது, தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்து கொண்டிருந்தன.. அப்போது, அதிமுகவின் மூத்த தலைவர் அன்வர்ராஜா, எடப்பாடி பழனிசாமியிடம் ஒரு விஷயத்தை சொல்லி வருத்தப்பட்டாராம்.
நிலைமை இங்கே ரொம்ப மோசமாயிருச்சு.. தமிழக இஸ்லாமியர்கள் எல்லாம் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.. அதிமுகவுக்கு பாரம்பரியமாக வாக்களிக்க கூடியவர்களே, இந்த முறை வாக்களிக்கவில்லை என்றெல்லாம் சொல்லி கவலைப்பட்டாராம்..

அன்வர்ராஜா
அதற்கு எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியே அடுத்த முறையும் தொடருமா என்பது நிச்சயமில்லை, எல்லாம் சரியாயிரும், சிறுபான்மையினர் நம்மை விட்டு போக மாட்டார்கள் என்று நம்பிக்கையாக கூறியிருந்தாராம்... ஆனால், எம்பி தேர்தலிலும் சரி, சட்டசபை தேர்தலிலும் சரி, அதிமுக தோல்வியை சந்தித்தது.. சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே, அதாவது எம்பி தேர்தலின்போதே, பாஜகவை கழட்டிவிட்டு தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டதாக சொன்னார்கள்.

அன்வர் ராஜா
குடியுரிமை சட்டம், சிஏஏ போன்ற விவகாரங்கள் தலைதூக்கி மக்கள் மனதில் குறிப்பாக சிறுபான்மையினர் மத்தியில் அதிருப்தி அலை படர்ந்திருந்தது தெரிந்தும்கூட, பாஜகவுடன் அதிமுக வேறு வழியில்லாமல் கூட்டணி வைக்க வேண்டி வந்தது என்றார்கள்..பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் அதிமுக, தோல்வியை சந்திக்க நேர்ந்தது என்று சிவி சண்முகம் அப்போதே ஆவேசமாக ஒரு பேட்டி தந்திருந்தார்.. சிவி சண்முகம் இப்படி பேசியது, மிகுந்த பரபரப்பாக அப்போது பார்க்கப்பட்டாலும், அது அவரது சொந்த கருத்து என்று ஓபிஎஸ் முந்திக் கொண்டுவந்து, இந்த விஷயத்தை ஆஃப் செய்திருந்தார் என்றாலும், பாஜக எதிர்ப்பு அலை என்பது 3 வருடங்களுக்கு முன்பேயே எடப்பாடி தரப்பில் அடிக்க துவங்கிவிட்டதாக சொல்கிறார்கள்.

சறுக்கி சறுக்கி
கடந்த 2019 மற்றும் 2021ம் தேர்தல்களில் கிட்டத்தட்ட 13 சதவீத சிறுபான்மையினர் அதிமுகவை விட்டு வெளியேறியது மிகப்பெரிய அதிமுகவின் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது. வரும் 2024 தேர்தலில் மறுபடியும் கூட்டணி வைத்தால், அதிமுகவின் வாக்கு வங்கி மேலும் சரிவை நோக்கி சென்றுவிடும் என்பதாலேயே, பாஜகவை கழட்டிவிட எடப்பாடி தரப்பு துணிவதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.. பாஜக எதிர்ப்பு மனநிலை என்பது தமிழக மக்களிடம் அழுத்தமாக பதிந்துவிட்டதால்தான், அந்த பல்ஸை உணர்ந்து எடப்பாடி பழனிசாமி காய்நகர்த்தலை துவங்கி உள்ளதாக சொல்கிறார்கள்.

முதுகில் ஏறி
அதிமுகவின் முதுகில் ஏறித்தான் தமிழக பாஜக தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதேசமயம் பாஜகவை தவிர்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமி தேர்தலை சந்திக்க துணிவது சரியா? பாஜகவின் தேவையும், தயவும் அதிமுகவுக்கு கிடையவே கிடையாதா? என்ற சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றன... பாஜகவை கழட்டிவிட்டு அதிமுக தேர்தலை சந்தித்தால் அது சறுக்கலுக்கே வழிவகுக்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் அறுதியிட்டு சொல்கிறார்கள்.. இதற்கு ஒருசில காரணங்களையும் சுட்டிக்காட்டுகிறார்கள். சிவி சண்முகம், முனுசாமி, ஜெயக்குமார் போன்றோர்கள் பாஜகவுக்கு எதிரான பேட்டிகளையே தந்து கொண்டிருக்கிறார்கள்.. இதில், சிவி சண்முகத்தின் பேச்சுக்கள், பாஜகவுக்கு கவலையை தந்து வருகிறதாம்..

பாஜக மண்
கொங்கு மண்டலத்தை சேர்ந்த குறிப்பாக, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த முக்கிய புள்ளிகளே, சிவி சண்முகம் பேச்சுக்கு தங்கள் அதிர்ச்சியையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகிறார்களாம்.. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலம்தான் அதிமுகவை காப்பாற்றியது, அதற்கு காரணம் பாஜகதானே? இது ஏன் சிவி சண்முகம் போன்றோருக்கு புரிவதில்லை என்றும் ஆதங்கத்துடன் கேள்வியை கேட்கிறார்களாம். அதுமட்டுமல்ல, கன்னியாகுமரியில் உள்ளது பாஜக மண் என்றாலும், காங்கிரஸ் அங்கு திணறியதை பார்க்கத்தான் முடிகிறது.. அதேபோல, நீலகிரி, கோவை, திருப்பூரில், பாஜகவுக்கு இரட்டை இலக்கத்தில் வாக்கு சதவீதம் உள்ளது...

தென்கோடி
நெல்லை உட்பட கொங்கு மண்டலத்தின் மற்ற பகுதிகளிலும் பாஜகவுக்கு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது... ராமநாதபுரம், ராமேசுவரம் என தென்கோடியிலும் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு உள்ளது.. கடந்த முறை, எடப்பாடி பழனிசாமியை கொங்குவில் இருந்து மீட்டது அவர் சமூக வாக்குகள் மட்டுமே கிடையாது.. இதில் பாமகவின் பங்கும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது. இந்த முறை பாமக திமுக பக்கம் கூட்டணிக்கு முயற்சி செய்வதாக தெரிகிறது.. எனவே கொங்குவில் அதிமுகவுக்கு கைகொடுக்க போவது பாஜகதான் என்பதையும் எடப்பாடி தரப்பு யோசித்து பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

பெரிய்ய போஸ்டிங்
இன்னொன்றையும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.. இதுநாள்வரை தென்மண்டலத்தில் எத்தனையோ காய்களை நகர்த்தியும் எடப்பாடி பழனிசாமியால் காலூன்ற முடியவில்லை.. உதயகுமாருக்கு அவ்வளவு பெரிய போஸ்டிங் தந்தும்கூட, அதனால் பெரும்பலன் கிட்டவில்லை.. எனவே, தஞ்சை உட்பட தென்மண்டலங்களை வாக்குகளால் அள்ள வேண்டுமானால் தினகரன், ஓபிஎஸ்ஸை தவிர்க்க முடியாது.. இவர்களின் தயவும் தேவையாக இருக்கிறது.. ஒருவேளை வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றால், அதிமுக ஒன்றிய, கிளை நிர்வாகிகளில் பலர் பாஜகவுக்கு தாவிவிடக்கூடிய சூழலும் உள்ளது..

வெளுக்குதா சாயம்
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் + டிடிவி தினகரன் + பாஜக போன்றோரை எடப்பாடி பழனிசாமி தவிர்க்க நேர்ந்தால், அதனால் ஆதாயம் ஆக போவது திமுகதான் என்றும் பாஜக, ஓபிஎஸ், டிடிவி கூட்டணியை எடப்பாடி தவிர்க்க கூடாது, அது அதிமுகவுக்கு நல்லதல்ல என்றும் கருத்து கூறுகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை, எம்பி தேர்தலைவிட சட்டசபை தேர்தலுக்குதான் குறி வைத்து வருவதாக தெரிகிறது.. எம்பி தேர்தலை சீரியஸாக எடுத்து போட்டியிட நேர்ந்தால், பாஜகவை தவிர்க்க முடியாது.. சட்டசபை தேர்தல் மட்டுமே முக்கியம் என்று நினைத்தால், பாஜகவை எடப்பாடி பழனிசாமி கழட்டிவிடவும் தயாராகிவிடுவார்கள் என்கிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications