Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மாஸ்டர்" எடப்பாடி பழனிசாமி.. அந்த "பிரபலத்துக்கு" ஆப்பு ரெடி போல.. லிஸ்ட்டும் ரெடி.. கச்சேரி இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: டபுள் குஷியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. அதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான விஷயம் டெல்லி மேலிடம் வரையும் பறந்திருக்கிறதாம்.. அப்படி என்ன நடந்தது?

மதுரையில் மாநாடு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததுமே, அரசியல் களமே பரபரப்பானது.. இந்த மாநாட்டிற்கு எப்படியும் 3 லட்சம் பேர் வருவார்கள் என்று கணக்கு போட்டால், ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் பரவின.

Can Edappadi Palaniswami prove AIADMK majority soon and What was the report to the BJP

புளிச்சோறு: உண்மையை சொல்லப்போனால், மாநாடு நடத்தப்பட்டதற்கு முன்பைவிட, மாநாட்டுக்கு பிறகுதான் நிறைய சர்ச்சைகள் கிளம்பின.. டன் கணக்கில் அண்டா, அண்டாவாக புளிசோறு சாப்பாடு கொட்டப்பட்டுள்ளது. அதேபோல, மாநாட்டிற்கு சென்ற வாகனங்கள் சுங்க கட்டணத்தை செலுத்தவில்லையாம்.. இதனால், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு, 20 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.

அதாவது, இந்த ஒருநாள் மாநாடு காரணமாக, ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், தினசரி வருவாயில், 5 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய வட்டாரம் கூறியிருக்கின்றன.

விமர்சனங்கள்: இந்த விமர்சனங்களுக்கெல்லாம் அதிமுக தலைவர்கள் மாறி மாறி பதிலடிகளை தந்து கொண்டிருந்தார்கள்.. இதெல்லாம் பார்த்து, ஓபிஎஸ் தரப்பும் குஷியானது.. போதாக்குறைக்கு, "புளிசாதம் எப்படி இருந்தது" என்று ஓபிஎஸ்ஸும் நக்கல் அடித்திருந்தார்.

ஆனால், ஒருபக்கம் முக்குலத்தோர் ஆதரவை சம்பாதிக்க வேண்டும், மறுபக்கம், ஓபிஎஸ், தினகரன் இல்லாமலேயே அதிமுகவுக்கான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும், இன்னொருபக்கம், ஒட்டுமொத்த அதிமுகவே தன்னுடைய தலைமையின்கீழ் சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் பறைசாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் நடத்திக்காட்டிய இந்த மாநாடு, எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது என்றே கருதப்படுகிறது.

குஷியில் அதிமுக: மாநாட்டுக்கு பிறகு, அதிமுக கூடாரமே படுதெம்பாக உள்ளது.. அந்த நேரத்தில்தான், சந்திரயான் விண்கலமும் நிலவில் சரியாக லேன்ட் ஆகியிருந்தது.. அப்போது, பலரும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தபோது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஞ்ஞானிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்தை சொல்லி இருந்தார்.

அப்போது அதிமுக நிர்வாகி ஒருவர், எடப்பாடி பழனிசாமியிடம் பேசும்போது, "அண்ணே, நாமளும் சரியான நேரத்தில்தான் லேன்ட் ஆகியிருக்கோம்" என்று மதுரை மாநாட்டை சொல்லி பூரித்து சொன்னாராம்..

இருக்கைகள்: அதுமட்டுமல்ல, மதுரை மாநாட்டில் 85 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்த நிலையில், திரண்டு வந்தவர்களின் எண்ணிக்கையோ இரண்டரை லட்சத்துக்கு குறையாது என்று மத்திய உளவுத்துறையும் மேலிட டெல்லிக்கு, ரிப்போர்ட்டை அனுப்பி வைத்திருக்கிறதாம். இதையெல்லாம் கேட்டு, எடப்பாடி பழனிசாமி படுகுஷியாகிவிட்டாராம்..

தாக்கம் என்ன: "நம்முடைய பலத்தை காட்டி விட்டோம், இனி கூட்டணி, தொகுதி பங்கீடு எதிலும் பாஜக நெருக்கடி கொடுக்காது" என்று எடப்பாடியிடமும் அவருக்கு நெருக்கமானவர்கள் பூரித்து சொன்னார்களாம்.

இப்படிப்பட்ட சூழலில், இந்த மதுரை மாநாடு குறித்து, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் தொகுதிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்தெல்லாம் சர்வே ஒன்று எடுத்து, அந்த ரிப்போர்ட்டை தன்னிடம் தரும்படி, உளவுத் துறையினரிடம் எடப்பாடி பழனிசாமி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தாராம்.. ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி தலைமையிலான குழுவினரிடம், இந்த பொறுப்பையும் எடப்பாடி ஒப்படைத்ததாக தெரிகிறது.

உளவுத்துறை: அதன்படியே உளவுத்துறை டீமும் களமிறங்கி, முதற்கட்ட ரிப்போர்ட்டை தந்துள்ளது.. அதில், மாநாட்டு பணி குழுக்களில் இடம் பெற்றிருந்தும், சரியாக செயல்படாத மாநில, மாவட்ட நிர்வாகிகள் யார், யார் என்ற லிஸ்ட் பதிவாகி உள்ளதாம்.. அதுமட்டுமல்ல, எம்பி தொகுதிகளில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் காணும் பணியிலும் அந்த குழு அடுத்தக்கட்டமாக இறங்கி உள்ளதாம்.

இதில், எம்எல்ஏக்களாக பதவி வகிக்காதபோதும், தொகுதி மக்களிடமும், தொண்டர்களிடமும், ஜாதி செல்வாக்கு பெற்றவர்கள் யார் யார்? பசையுள்ள விஐபிக்கள் யார் யார்? என்ற லிஸ்ட்டையும் தயார் செய்து, எடப்பாடியிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க போகிறதாம்.

ரிசல்ட்: இந்த, அறிக்கையின் ரிசல்ட் எப்படி வருகிறதோ தெரியவில்லை.. ஆனால், மதுரை மாநாட்டு பணிக்குழுவில் இடம்பெற்றும், சரியாக செயல்படாதவர்கள் லிஸ்ட் இப்போது எடப்பாடி டேபிளில் உள்ளது.. அப்ப இனிமேல்தான் கச்சேரி இருக்கு போல..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+