Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரெக்ட்டா "லேண்ட்" ஆன எடப்பாடி.. "அண்ணே, விஷயம் மேல போயிடுச்சு..ண்ணே".. பூரிக்கும் அதிமுக.. பார்ர்ரா

Subscribe to Oneindia Tamil

சென்னை: டபுள் குஷியில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. அதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான விஷயம் டெல்லி மேலிடம் வரையும் பறந்திருக்கிறதாம்.. அப்படி என்ன நடந்தது?
ஒருபக்கம் முக்குலத்தோர் ஆதரவை சம்பாதிக்க வேண்டும், மறுபக்கம், ஓபிஎஸ், தினகரன் இல்லாமலேயே அதிமுகவுக்கான செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும், இன்னொருபக்கம், ஒட்டுமொத்த அதிமுகவே தன்னுடைய தலைமையின்கீழ் சிறப்பாக செயல்படுகிறது என்பதையும் பறைசாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் மதுரையில் மாநாட்டை அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

சிறப்பு மாநாடு: ஆனால் மாநாடு நடத்துவதற்கு, நாலாபக்கமிருந்தும் நெருக்கடிகளும், முட்டுக்கட்டைகளும் வந்தாலும், ஒருவழியாக மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்துக்காட்டிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.. எப்படியும் 3 லட்சம் பேர் வருவார்கள் என்று கணக்கு போட்டால், ஒன்றரை லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும் செய்திகள் பரவின.

Can Edappadi Palaniswami prove majority and What was the report to the BJP about the Madurai conference

ஏற்கனவே முக்குலத்தோர்களின் அதிருப்தியை எடப்பாடி பழனிசாமி அதிகமாகவே சம்பாதித்து வைத்துள்ளதால், மதுரை மாநாட்டில் உரையாற்றும்போது, ஓபிஎஸ் பற்றியோ, தினகரன் பற்றியோ, சசிகலா பற்றியோ வாயே திறக்கவில்லை எடப்பாடி பழனிசாமி.. வழக்கமாக எங்கே பேசினாலும், இவர்களை கடுமையாக விமர்சிப்பவர், மதுரை மாநாட்டில் மட்டும் அவ்வளவாக, தாக்கி பேசவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.

புளிசோறு: இறுதியில், "புளிசோறு" பஞ்சாயத்து வந்தாலும்கூட, மதுரை மாநாடு என்னமோ மாபெரும் வெற்றியாகவே கருதப்படுகிறது.. போதாக்குறைக்கு நேற்றைய தினம், பொதுக்குழு தீர்ப்பும் சாதகமாக வந்துள்ளது. இதை தீர்ப்பு என்று சொல்வதைவிட, எடப்பாடிக்கு சாதகமான முடிவு என்று சொல்லலாம்.. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்பதுடன், பொதுக்குழுவின் முடிவே இறுதியானது என்பதையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது

எடப்பாடி பழனிசாமி: இது எடப்பாடிக்கு கிடைத்த அடுத்த அங்கீகாரமாக கருதப்படுவதுடன், ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த பின்னடைவாகவும் இந்த தீர்ப்பு கருதப்படுகிறது. அதேசமயம், பொதுக்குழு தீர்மானங்கள் செல்லுமா, செல்லாதா? என்பதுகுறித்து, வாத பிரதிவாதங்களின் அடிப்படையில் தனி நீதிபதிதான் முடிவு செய்வார்..

ஆனால் அந்த வழக்கு என்பது நீதிபதி குமரேஷ்பாபு முன்னிலையில் நிலுவையில் உள்ளது என்றாலும், நேற்று ஹைகோர்ட் பிறப்பித்த உத்தரவு அதிமுகவுக்கான இன்னொரு பிளஸ் பாயிண்ட்டாக மட்டுமே கருதப்படுகிறது.
எப்படியும், சுப்ரீம் கோர்ட்க்கு அப்பீல் போகப்போவதாக ஓபிஎஸ் சொல்லி உள்ளார்.. சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்றாலும்கூட, சிவில் வழக்குகளை பொறுத்தவரை, யாருக்குமே தீர்ப்புகளும், முடிவுகளும் உடனடியாக கிடைத்துவிடுவதில்லை. அதனால், இரட்டை இலை யாருக்கு? என்ற விவகாரம் நீண்டுகொண்டேதான் போக வாய்ப்புள்ளது.

அதிமுக கூடாரம்: எனினும், அதிமுக கூடாரம் படுதெம்பாக உள்ளது.. இதுகுறித்து சில செய்திகளும் வட்டமடிக்கின்றன.. சந்திரயான் விண்கலம் நிலவில் சரியாக லேன்ட் ஆன நிலையில், பலரும் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.. அந்தவகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் விஞ்ஞானிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்தை சொல்லி இருந்தார்.

அப்போது அதிமுக நிர்வாகி ஒருவர், எடப்பாடி பழனிசாமியிடம் பேசும்போது, "அண்ணே, நாமளும் சரியான நேரத்தில்தான் லேன்ட் ஆகியிருக்கோம்" என்று மதுரை மாநாட்டை சொல்லி பூரித்து சொன்னாராம்..

இருக்கைகள்: அதுமட்டுமல்ல, மதுரை மாநாட்டில் 85 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருந்த நிலையில், திரண்டு வந்தவர்களின் எண்ணிக்கையோ இரண்டரை லட்சத்துக்கு குறையாது என்று மத்திய உளவுத்துறையும் மேலிட டெல்லிக்கு, ரிப்போர்ட்டை அனுப்பி வைத்திருக்கிறதாம். இதையெல்லாம் கேட்டு, எடப்பாடி பழனிசாமி படுகுஷியாகிவிட்டாராம்..

"நம்முடைய பலத்தை காட்டி விட்டோம், இனி கூட்டணி, தொகுதி பங்கீடு எதிலும் பாஜக நெருக்கடி கொடுக்காது" என்று எடப்பாடியிடமும் அவருக்கு நெருக்கமானவர்கள் பூரித்து சொல்கிறார்கள்.

கண்ணாமூச்சி: ஆக, மாநாடு + ஹைகோர்ட் தீர்ப்பு என இரட்டை மகிழ்ச்சியில் அதிமுக திளைக்க துவங்கினாலும், பாஜக இனி முன்னெடுக்க போகும், அரசியல் கண்ணாமூச்சி ஆட்டத்தை, எடப்பாடி டீம் எப்படி எதிர்கொள்ள போகிறது? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+