புரிஞ்சுதா.. "கண்ணாடி வீட்டில்" திமுக.. பதறாத எடப்பாடி பழனிசாமி.. ஒரே புள்ளியில் இணைந்த "திராவிடம்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக கூட்டணியை, நிஜமாகவே அதிமுக கழட்டிவிட்டுள்ளதா? அல்லது தேர்தல் யுக்தியா? என்ற சந்தேகத்தை எதிர்க்கட்சிகள் கிளப்பியவாறே உள்ளன.. மற்றொருபுறம், சிறுபான்மையினர் ஆதரவுகள் அதிமுகவுக்கு கிடைத்தபடியே உள்ளன.. எனினும், "பாஜக எதிர்ப்பு" என்ற விஷயத்தில் இரு திராவிட கட்சிகளும் இணைந்துள்ளதை கவனிக்க வேண்டி உள்ளது.

பாஜக கூட்டணியிலிருந்து இப்போது விலகியிருப்பது, அதிமுகவுக்கு கூடுதல் பலத்தை பெற்று தந்துகொண்டிருப்பதாகவே தெரிகிறது.. அதாவது, திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட கட்சிகள், திமுக கூட்டணியில் இடம்பெற முடியாத நிலைமை கொண்ட கட்சிகள், எல்லாமே அதிமுகவுக்கு ஆதரவாக மாறி உள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், இதுகுறித்து, சில சந்தேகங்கள் சோஷியல் மீடியாவிலும் வலம்வந்தபடியே உள்ளன.

Can Edappadi Palaniswami win DMKs vote bank and What is DMKs strategy to defeat AIADMK in elections

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறாரே தவிர, மேலிட தலைவர்கள் பற்றி இதுவரை விமர்சிக்காமலேயே உள்ளாரா ஏன்? பாஜகவின் கொள்கைகள் பற்றி, அதிமுக தலைவர்கள் யாருமே விமர்சிக்கவில்லையே ஏன்? மேலிட பாஜகவை, அதிமுக விமர்சிக்காத நிலையில், அதிமுகவையும் தமிழக பாஜக இதுவரை விமர்சிக்கவில்லையே ஏன்? திமுக தரப்பில்தான் ரெயிடுகள் நடக்கிறதே தவிர, அதிமுகவிடம் ரெய்டு நடத்தப்படவில்லையே ஏன்? என்ற கேள்விகள் வலம்வந்து கொண்டிருகின்றன.

வாக்குகள்: அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய பேச்சை நம்பி மட்டுமே, சிறுபான்மையினர் ஓட்டுப்போடுவார்களா? திமுகவுக்கு செல்லும் சிறுபான்மையின ஓட்டுக்களை எடப்பாடி பழனிசாமி, பிரிக்கும் முயற்சியில் உள்ளதால், இந்த நடவடிக்கைகள் பாஜகவுக்குதான் சாதகமாகி கொண்டிருக்கின்றன. ஆக, சிறுபான்மையின ஓட்டுக்களை அதிமுகவும், இந்துக்களின் ஓட்டுக்களை பாஜகவும் குறி வைத்தே, காய்களை நகர்த்தி வருகின்றன என்ற விமர்சனங்களும் நிலவுகின்றன.

கலக்கம்: கேள்விகளும், சந்தேகங்களும், யூகங்களும் இப்படி வலம்வந்தாலும், அதிமுகவின் தற்போதைய வியூகங்களை கண்டு, திமுக லேசாக கலக்கமாகி உள்ளதாக சொல்கிறார்கள்... உண்மையிலேயே திமுக கலக்கமாகி உள்ளதா? இதற்கு மூத்த பத்திரிகையாளர் மணி, ஒரு பிரபல சேனலுக்கு அளித்த பேட்டியில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம், பாஜக விவகாரத்தில் அதிமுக என்ன முடிவெடுக்கிறது என்பதைதான் கவனிக்க வேண்டும். மதவாத பாஜகவை எதிர்க்கும் கட்சியை, திமுக ஆதரிக்க வேண்டும்தானே? ஆனால், ஏன் பயப்படுகிறது?

இழிசொற்கள்: இந்த அரசின்மீது அதிருப்தியில் உள்ள வாக்குகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அதிமுகவுக்கு போய்விடுமோ என்று திமுகவுக்கு அச்சம் வந்துள்ளது. அதனால்தான், அதிமுக மீதான விமர்சனங்கள் அதிகமாகின்றன.. அதிமுகவை ஆதரித்து பேசக்கூடியவர்களின் மீதான தாக்குதல்களும் அதிகமாகின்றன.. குறிப்பாக, தமீமுன் அன்சாரி போன்றவர்களை கேவலமாக இழிசொற்களால் விமர்சிக்கக்கூடிய போக்கு, சமூகவலைதளத்தில் திமுகவிடமிருந்தும், திமுக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளவர்களிடமிருந்தும், வந்துகொண்டிருக்கின்றன..

திமுகவுக்கு மெயின் எதிரி பாஜகதானே? அதிமுகவும் இந்த முடிவை தானே எடுத்துள்ளது? அதை ஏன் விமர்சிக்கிறீங்க? குஜராத் இன படுகொலைகளின்போது, அந்த அரசுடன் அங்கம் வகித்தது மட்டுமல்லாமல், அந்த படுகொலை நடந்த 3வதுமாதம், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தீர்மானத்தில், பாஜக அரசை ஆதரித்து பேசி, வாக்களித்து திமுகதான்.

பாஜக எதிர்ப்பு: ஆனால், அந்த விஷயத்தை வைத்து, திமுகவை இன்று எடைபோடவில்லை. பாஜக எதிர்ப்பு என்பதில் இப்போதுவரை உறுதியாக இருப்பதால், திமுகவின் நிலைப்பாட்டை நாம் ஆதரிக்கவே செய்யலாம். அப்படியிருக்கும்போது, அதிமுகவை மட்டும் ஏன் கடந்த காலத்தை வைத்து பேசவேண்டும்?

அண்ணாமலை பாதயாத்திரையின் நிகழ்ச்சி துவக்க நாளில், மேடையில் இருந்தது அதிமுகவின் உதயகுமார்தான்.. ஒரு கட்சி, தான் வளர்வதற்காக பாதயாத்திரை போகும்போது, அதற்கு இன்னொரு கட்சி துணை போகாது. அப்படியிருந்தும், அதிமுக பெருந்தன்மையாக இந்த நிகழ்வில் கலந்துகொண்டது. ஆனால், அதை மறந்து, பாதயாத்திரை 4வது நாளே, அதிமுகவின் உள்விவகாரங்களை பேச துவங்கினார் அண்ணாமலை.

பொய்யான பேச்சு: அடுத்து, மறைந்த முதல்வர் அண்ணாதுரையையும், முத்துராமலிங்க தேவரையும் ஒப்பிட்டு பேசினார்.. வழக்கம்போல இதுவும் அண்ணாமலையின் பொய்யான பேச்சுதான்.. இதற்கு பிறகுதான் கூட்டணியை உடைத்து கொண்டு அதிமுக வெளியே வந்தார்கள்.

"பாஜகவிலும் இல்லை, என்டிஏ கூட்டணியிலும் இல்லை" என்று அறிவித்து, தீர்மானமும் போட்டார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி இதை பற்றி வாய் திறக்கவில்லையே என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. உடனே, எடப்பாடி பழனிசாமியும், பாஜக கூட்டணி முறிவை 2 முறைக்கு மேல் பகிரங்கமாகவே சொல்லிவிட்டார்..

விமர்சனம்: "மதவாத பாஜக" என்று எடப்பாடி பழனிசாமி சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இப்போது கேட்கிறார்கள்.. இதையும் நிச்சயம் சொல்வார்.. பல வருடம் கூட்டணியிலிருந்துவிட்டு, வெளியே வரும்போது, எல்லா அஸ்திரங்களையும் ஒரேநாளில் எய்துவிட முடியாது. மெல்ல மெல்லதான் எய்துவிட முடியும். திமுகவின் கேள்வி நியாயமானது என்றாலும், எம்பி தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக பாஜகவை விமர்சிப்பார்.

அதுக்காக, சிறுபான்மையினர் ஓட்டுக்கள் இப்போதே அதிமுகவுக்கு கிடைத்துவிடாது.. எடப்பாடி பழனிசாமியின் குறி, எம்பி தேர்தல் கிடையாது, சட்டசபை தேர்தல்தான்" என்றார்.

என்னாகும்: எனினும், கருத்துகளும், கணிப்புகளும் இவ்வாறாக இருந்தாலும், ஒரு விஷயத்தில் மட்டும் திமுக தரப்பு படுஸ்ட்ராங்காக இருக்கிறதாம்.. தமிழகத்தில் வலுவான கூட்டணியை வைத்திருப்பது திமுக மட்டுமே.. அதுமட்டுமல்ல, சிஏஏ உட்பட பல விஷயங்களில் அதிமுகவின் நடவடிக்கைகளை மக்கள் நேரடியாக பார்த்துவிட்டார்கள். அதனால், அக்கட்சியை முழுமையாக நம்ப மாட்டார்கள் என்பதால், சிறுபான்மையினர் ஓட்டுக்கள் என்றுமே திமுகவுக்குதான் என்று அடித்துசொல்கிறார்கள். அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+