வாய் விட்டே அண்ணாமலையிடம் கேட்டுட்டாராமே.. உலகளவில் மோடியால் கிடைக்கும் மரியாதை வேற.. அடடடே ஐஜேகே
சென்னை: பாஜக கூட்டணி ஓரளவு வலுவாகி கொண்டிருக்கிறது.. அக்கூட்டணியிலுள்ள கட்சிகளும் பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தெரிகிறது. இதுகுறித்து சில தகவல்களும் வட்டமடிக்கின்றன.
இப்போதைக்கு திமுக கூட்டணி மட்டுமே வலுவாகி வருகிறது.. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப்பங்கீட்டினை திமுக இறுதி செய்துவிட்டது. அதிமுக கூட்டணி இன்னும் முடிவாகவில்லை.. பாஜகவிலும் கூட்டணி முடிவாகவில்லை. தொடர்ந்து பாஜகவும் தொகுதிப்பங்கீட்டை இறுதிசெய்ய தீவிரம் காட்டி வருகிறது.
கூட்டணி கட்சிகள்: பாஜகவை பொறுத்தவரை, மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி வருகிறது. எனினும், ஓபிஎஸ் + தினகரன் + பாரிவேந்தர் + ஏசி சண்முகம் + ஜி கே வாசன் + சரத்குமார் + ஜான்பாண்டியன் + தேவநாதன் யாதவ், என கிட்டத்தட்ட கூட்டணியை தயார் செய்துவிட்டது. இந்த கூட்டணி விஷயத்தில், அதிமுகவைவிட ஒரு படி, தமிழக பாஜக வேகம் எடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

ஆனால், பாஜகவின் இப்படி ஒரு கூட்டணிக்கு, முதன்முதலில் பிள்ளையார் சுழி போட்டது ஐஜேகே பாரிவேந்தர்தான்.. கடந்த முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட பாரிவேந்தர், வரும் தேர்தலில் பாஜகவுக்கான ஆதரவை கடந்த ஒரு வருடத்துக்கு முன்பேயே தந்துவிட்டடார். உதயசூரியன் சின்னத்தில் இருந்துக்கொண்டே, திமுகவையும் விமர்சித்து வந்ததை இந்த தமிழகமே உற்றுகவனித்ததை மறுக்க முடியாது.
நலத்திட்டங்கள்: அதேபோல, தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை பெரம்பலூரில் செய்து வந்த நிலையில், கடந்த வருடமே, தனக்கு பெரம்பலூர் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று பாஜகவிடம் பாரிவேந்தர் கேட்டுக் கொண்டாராம். இதற்கு பாஜகவும் சம்மதித்து விட்டதாக தகவல்கள் பரபரத்தன.
இப்போது தேர்தல் நெருங்கி வரும்சூழலில், பாஜகவுடனான கூட்டணியை மீண்டும் உறுதி செய்திருக்கிறார் பாரிவேந்தர். மேலும், பெரம்பலூர் அல்லாமல் வேறு 2 தொகுதிகளில் போட்டியிடவும் ஐஜேகே விரும்புகிறதாம். குறிப்பாக, கள்ளக்குறிச்சி, தென்சென்னை தொகுதிகளை பாஜகவிடம் பாரிவேந்தர் கேட்டு வருவதாக தெரிகிறது.
2 தொகுதிகளா?: கள்ளக்குறிச்சியில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயசீலன், தென் சென்னையில் மற்றொருவர் போட்டியிடவும் ஐஜேகே வேட்பாளரையும் தேர்வு செய்து வைத்திருக்கிறதாம். ஆனால், பாஜக இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை.
இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் பாஜக அலுவலகத்தில், கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளன. இதில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேட்டி: பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், "ஐஜேகே கட்சிக்கு 2 தொகுதிகள் கேட்டிருக்கிறோம்.. முதற்கட்டமாக பெரம்பலூர் தொகுதி எங்களுக்கு உறுதியாகியிருக்கிறது.. அதனால், பெரம்பலூர் தொகுதியில் 3வது முறையாக நான் போட்டியிட உள்ளேன். அதுவும் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளேன்...
எனினும், கள்ளக்குறிச்சியும் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என பாஜகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து பரிசீலித்து ஆராய்ந்து வழங்குவதாக சொல்லியிருக்கிறார்கள்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் பாரிவேந்தர்.
ஜான் பாண்டியன்: ஏற்கனவே, ஓபிஎஸ் + தினகரன் இருவரையும் தாமரை சின்னத்தில் போட்டியிடும்படி பாஜக வலியுறுத்தி வருவதாக தகவல்கள் கசிகின்றன.. இந்த கட்சிகளை தவிர, பாரிவேந்தர் + ஏசி சண்முகம் + சரத்குமார் + ஜான்பாண்டியன் + தேவநாதன் யாதவ், இவர்கள் எல்லாம் பாஜக சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், பாரிவேந்தரும் அதே சின்னத்தில் களம் காணுகிறார்..
"உலகளவில் இந்தியர்களுக்கு மரியாதை இருக்கிறது என்றால், அது பிரதமர் மோடியால் தான்" என்று பாரிவேந்தர் சொல்ல துவங்கியிருக்கும் நிலையில், இன்னொரு சீட் ஐஜேகேவுக்கு கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும், இந்த முறையாவது தாமரை மலருமா? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications