மோடி மட்டும் மனசு வச்சா போதும்.. தங்கத்தின் விலை சட்டென சரியும்! இப்படி ஒரு ஐடியா இருக்கா! செய்வாரா?
சென்னை: தங்கத்தின் விலை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் தங்கத்தின் விலை 9500 சவரனுக்கு உயர்ந்து ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு மனது வைத்தால் தங்கத்தின் விலை ஓரளவு குறைய வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர் நகை வியாபாரிகள்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல; அது சேமிப்பின் அடையாளமாகவும், அவசர தேவைகளுக்கான நிதி ஆதாரமாகவும் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
திருமணம், சுபநிகழ்ச்சி, குழந்தைகளின் எதிர்காலம் என குடும்ப வாழ்வின் முக்கிய கட்டங்களில் தங்கமும் வெள்ளியும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளன. ஆனால், சமீபகாலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டிக் கொண்டே இருப்பது, பொதுமக்களை மட்டுமல்லாமல் நகை வியாபாரிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

தங்கம் விலை உயர்வு
ஒரு பவுன் தங்கத்தின் விலை தற்போது ரூ.1.22 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், ஒரு கிராம் தங்கம் ரூ.15,000-ஐ கடந்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் கடும் வேகத்தில் உயர்ந்து, ஒரு கிலோ ரூ.4 லட்சத்தையும், ஒரு கிராம் ரூ.400-ஐயும் தொட்டுள்ளது. இந்த போக்கு தொடர்ந்தால், ஆண்டின் இறுதிக்குள் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.2 லட்சம் வரை உயரலாம் என்றும், வெள்ளி கிலோ ரூ.5 லட்சத்தை நெருங்கலாம் என்றும் நகைத் துறை சார்ந்தவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் ஒரு கனவுப் பொருளாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது.
தங்கம் விலை
விலையேற்றம் காரணமாக தங்க நகை வாங்குவோர் எண்ணிக்கை குறைந்து வருவதுடன், நகை வியாபாரிகளின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தான் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம். உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 5,000 டாலரை நெருங்கி வருகிறது. அதனுடன் இந்தியாவில் தங்க இறக்குமதிக்கு 6 சதவீத சுங்க வரியும், 3 சதவீத ஜிஎஸ்டியும் விதிக்கப்படுவதால், விலை பல மடங்கு உயர்ந்து விடுகிறது என்கின்றனர் நகை வியாபாரிகள்.
தங்கம் விலை குறையுமா?
அப்படியானால் தங்கம் விலை குறைய வாய்ப்பு எப்போது? என்ற கேள்வி எழுகிறதல்லவா? பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைத்தால், அதேபோல் ஜிஎஸ்டியை 3 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக குறைத்தால், ஒரு பவுன் தங்கத்தின் விலை குறைந்தது ரூ.6,000 முதல் ரூ.6,500 வரை குறையும் வாய்ப்பு உள்ளது. இன்றைய சூழலில் தங்கம் மெதுவாக அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கைகளில் இருந்து விலகி வருகிறது. இது சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் கவலைக்குரிய விஷயம். அரசு இதை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர் நகை வியாபாரிகள்
தங்க இறக்குமதி சுங்கவரி
நகை வியாபாரிகள் சந்திக்கும் இன்னொரு பெரிய பிரச்சினை வரி கட்டமைப்பு. விற்பனை செய்யப்படாத நகைகளுக்கே கூட, ஆண்டு முடிவில் மொத்த இருப்பை கணக்கிட்டு 31.5 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு பவுனுக்கு சராசரியாக ரூ.29,000 வரை வரி சுமை இருப்பதாகவும், ஒரு கடையில் 10 கிலோ தங்க நகை இருந்தால், ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி வரை வரி கட்ட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் வரி கொள்கை
இந்த நிலை நீடித்தால், சிறு மற்றும் நடுத்தர நகை வியாபாரிகள் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்றும், இதற்கும் உடனடி தீர்வு தேவை என்றும் நகைத் துறையினர் வலியுறுத்துகின்றனர். மொத்தத்தில், தங்கம் விலை குறைய வேண்டுமானால் சர்வதேச சந்தை நிலவரம், டாலர்-ரூபாய் மாற்று விகிதம், மத்திய அரசின் வரி கொள்கைகள் ஆகியவை ஒன்றாக சாதகமாக மாற வேண்டும். அதுவரை, தங்கம் விலை பொதுமக்களுக்கு சற்று எட்டாக்கனியாகவே தொடரும் என்றும் நகை வியாபாரிகள் சொல்கின்றனர்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள்












Click it and Unblock the Notifications