கரும்பு கசக்குதா? அதென்ன கமலுக்கு ஸ்பெஷல்? சின்னமே இல்லாமல் கிளம்பிட்டாங்க சீமானின் தம்பி, தங்கைகள்
சென்னை: சின்னமே இன்னும் கிடைக்காமல், அதுக்குள்ளேயே பிரச்சாரத்துக்கு கிளம்பி விட்டார்கள் சீமானின் தம்பி - தங்கைகள்.. என்ன நடக்குது நாம் தமிழர் கட்சியில்?
இன்னும் தேர்தலே அறிவிக்காமல், அதுக்குள்ள ஏன் சின்னத்தை ஒதுக்கிறீங்க? வரி கட்ட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. நாங்கள் 3 தேர்தலிலும் வரி கணக்குத் தாக்கல் செய்துள்ளோம். விவசாயி சின்னம் தரப்பட்டுள்ள கட்சிக்காரர், வரி கணக்கு தாக்கல் செய்துள்ளாரா? பொதுக்குழு கூட்டி இருக்கிறாரா? இது மிகப்பெரிய அநீதி?

முதல்ல இந்த பாஜகவின், தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய மலரை மாற்ற வேண்டும்.. எந்த சின்னமும் கிடைக்கவில்லை என்றாலும் நான் போட்டியிடுவேன்...
செருப்பு: துடைப்பம் சின்னத்தை வைத்து டெல்லியில் கெஜ்ரிவால் ஜெயிக்கவில்லையா?. செருப்பு சின்னம் கொடுத்தால் கூட வெற்றி பெறுவேன். எனக்கு வாக்கு செலுத்த நினைக்கும் மக்கள், சீமானுக்கு என்ன சின்னம் என்று பார்த்து தான் போடுவார்கள்" என்று செல்லுமிடமெல்லாம் ஆதங்கத்தை கொட்டி வருகிறார் நாம் தமிழர் கட்சி சீமான்.
இந்நிலையில், சின்னமே கிடைக்காமல், தங்கள் பிரச்சாரத்தை துவங்கிவிட்டார்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்.. சிவகங்கை தொகுதி வேட்பாளர் எழிலரசி விசயேந்திரன் சொல்லும்போது, "சிவகங்கையில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவேன். காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைவுபடுத்துவேன். கனிமத்திருட்டை தடுக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சின்னம்: "எங்களுக்கு சின்னம் முக்கியமில்லை, எங்கள் சின்னமே எங்கள் அண்ணன் சீமான் தான் என்று தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியிருக்கிறார் மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர் காளியம்மாள்... சீர்காழியில் செய்தியாளர்களிடம் பேசிய காளியம்மாள் பாஜகவை சரமாரியாக விமர்சித்தார்.
சின்ன வயது முதலே இந்த மண்ணில் பல்வேறு பொதுமக்கள் பிரச்சினைகளை பார்த்து வருகிறேன். ஆனாலும், அதிமுக, காங்கிரஸ், திமுக கட்சியை சேர்ந்தவர்களால் இங்குள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியவில்லை.
திமுக எம்பிக்கள்: காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன் பிரச்சனைகள் இதை பற்றியெல்லாம், இவர்கள் எப்படியும் நாடாளுமன்றத்தில் பேசப்போவதில்லை. நம்ம பிரச்சனைக்கு நாம்தானே குரல் கொடுக்கணும். அதனால்தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். காவிரி விவகாரத்தை திமுக எம்பிக்கள் 39 பேருமே பேசவில்லை.
தேர்தலில் 6.7 சதவீத வாக்கு வாங்கியுள்ள நாம் தமிழர் கட்சி, கூடுதலாக 1.3 சதவீதம் வாங்கி இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறக்கூடிய ஒரு கட்சி.. 5 தேர்தல்களை எதிர் கொண்டுள்ளது. ஆனால், வெறும் 2 தேர்தல்களை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தை தந்த தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு ஏன் பாரபட்சம் காட்டுகிறது?
பாஜக பிளான்: பாஜக திட்டமிட்டு தேர்தல் ஆணையம் மூலம் சின்னத்தை முடக்கி வைத்துள்ளனர். ரெய்டு நடத்தி மிரட்டி பார்த்தார்கள். இப்போது சின்னத்தை முடக்கி வைத்துள்ளனர். வெறும் 2 மணி நேரம் எங்களுக்கு போதும். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை மக்களிடம் நாங்கள் கொண்டு செல்வோம்.. எங்களுடைய சின்னம் எங்களுடைய அடையாளமாக எங்களுடைய தலைவர் இருக்கிறார்" என்று உறுதியுடன் காளியம்மாள் சொல்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications