"நல்லகண்ணு" சூப்பர்.. அட கமல்ஹாசன் இருக்காரே.. லட்டு போல முஸ்லிம் ஓட்டு வேற.. நொறுங்கும் பாஜக கணக்கு?
நல்லகண்ணு அல்லது கமல் ராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது
சென்னை: ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட போவது யார்? பொதுவேட்பாளர் முறை திமுகவில் சாத்தியமா? என்ற பல்வேறு கேள்விகள் வலம்வர துவங்கி உள்ளன.
விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ளது.. 6 மாதத்துக்கு முன்பேயே பாஜக இதற்கான முனைப்பில் ஈடுபட்டு வருகிறது.. அந்தவகையில் தமிழகத்தை குறி வைத்து, கூடுதலாக காய் நகர்த்தி வருகிறது பாஜக.
பிரதமர் மோடி 2024 மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடக்கூடும் என்கிறார்கள்.
ஒருவேளை ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிட போவது யார்? அதன் களம் எப்படி இருக்கும் என்பது போன்ற அலசல்களும் எழுந்து வருகின்றன..

சூப்பர் அறிவிப்புகள்
பிரதமர் மோடியை பொறுத்தவரை 2 தொகுதிகளில் போட்டியிட்டே ஆக வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது.. வழக்கமாக, காந்தி நகரில் போட்டியிட்டு கொண்டிருந்தவர் திடீரென வாரணாசியில் போட்டியிட நேர்ந்தது, முழுக்க முழுக்க இந்துத்துவா அரசியலை மையப்படுத்தியே என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.. கடந்த முறை வாரணாசியில் மோடி போட்டியிடுவதற்கு முன்பேயே, அங்கு ஏகப்பட்ட களப்பணிகள் நடந்தன. இன்னும் சொல்லப்போனால், கிட்டத்தட்ட ஒன்றரை வருடம், வாரணசாயிலேயே தங்கியிருந்து அதற்கான வேலைகளை பார்த்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. நிறைய அறிவிப்புகளையும், நலத்திட்டங்களையும் வெளியிட்டும் வந்தார்.

ஸ்தலங்கள்
இதற்கு பிறகுதான், பிரதமர் மோடி அங்கு போட்டியிடபோவதாக அறிவிப்பு வெளியானது. அந்தவகையில், இந்த முறையும், ராமநாதபுரத்தை குறி வைப்பதாக தெரிகிறது.. ஆன்மீகத் தலங்களான காசியையும் ராமேஸ்வரத்தையும் இணைத்து வளர்ச்சி அடைய செய்யும் பாஜகவின் நோக்கத்துக்கு ஏற்பவே, வாரணாசியிலும், ராமநாதபுரம் தொகுதியிலும் மோடி போட்டியிட இருப்பதாக தெரிகிறது.. அதற்காகத்தான், கடந்த எம்பி தேர்தலின்போதே, அதிமுக கூட்டணியில் இருந்தபோது, இந்த ராமநாதபுர தொகுதியை பாஜக கேட்டு வாங்கியது.

அச்சாரம் போட்டாச்சு
இந்த முறை சென்ட்டிமென்ட்டாக ஸ்ரீபெரும்புதூரில் ராகுல் போட்டியிட சான்ஸ் இருப்பதாகவும் கூறப்படுகிறது.. ராகுல் தமிழகத்தை குறி வைத்து நகர்வதாலேயே, மேலிட பாஜகவும் தமிழகத்தை குறி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். இதற்கான முதல் அறிவிப்பை 2 மாதத்துக்கு முன்பே வெளியிட்டது அர்ஜுன் சம்பத் என்பதை மறுக்க முடியாது.. தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியை திட்டமிட்டதால்தான், காசியில் தமிழ் சங்கமம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதும், இதற்கான அச்சாரம் போடுவதற்காகதான் என்று பாஜவினர் சொன்னதாக, தி சண்டே கார்டியன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது..

பண்ருட்டியார்
அதுமட்டுமல்ல, இன்றைய தினம் அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில், ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளது, இந்து மதத்தின் வீரியமாக செயல்படுகிறார் பிரதமர் மோடி.. காசியும் ராமேஸ்வரமும் இந்து மதத்தின் முக்கிய இடத்தை வகிக்கிறது.. முத்துராமலிங்க தேவர் பூஜைக்கு பிரதமர் வருவதாக சொன்னார்கள்.. ஆனால், வரவில்லை.. எனினும், அப்போதே ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுவார்கள் என்றார்கள்.. இந்த முறை அதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது" என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

நல்லகண்ணு
ஒருவேளை மோடி போட்டியிட்டால், அவரை எதிர்த்து போட்டியிட போவது யாராக இருக்கும் என்ற அடுத்த கேள்வி எழுந்துள்ளது.. இது தொடர்பாக 2 விதமான அலசல்கள் எழுந்து வருகின்றன.. திமுக கூட்டணி சார்பில் பொதுவேட்பாளர் நிறுத்தப்படலாம் என்கிறார்கள்.. அந்த பொதுவேட்பாளர் மூத்த தலைவர் நல்லகண்ணுவாக இருக்க வாய்ப்பிருக்கும் என்றும் சொல்கிறார்கள்.. நல்லகண்ணுவை முன்னிறுத்தினால், நாம் தமிழர் உட்பட பல்வேறு தரப்பினர் ஆதரவு தருவார்கள் என்றாலும், நல்லகண்ணுவுக்கு வயதாகி விட்டதால், அவர் போட்டியிடுவது சாத்தியமா? என்றும் சந்தேகங்கள் எழுகின்றன.

ஆப்ஷன் கமல்
மற்றொரு ஆப்ஷனாக கமலை சொல்கிறார்கள்.. திமுக கூட்டணியில் கமல் இருக்கிறாரா? இல்லையா? என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், காங்கிரசுடன் நெருங்கி உள்ளார்.. ராமநாதபுரத்தை கமலுக்கு ஒதுக்க போவதாகவும் ஒரு பேச்சு நிலவுகிறது.. இந்துத்துவா ஆதரவு மண் என்று ராமநாதபுரத்தை முழுமையாக சொல்லிவிட முடியாது.. இங்கு பெருவாரியான முஸ்லிம்களின் வாக்குகளும் உள்ளன.. இந்த முஸ்லிம்களின் வாக்குகள், பாஜகவுக்கு எந்த அளவுக்கு வாக்குகளை அள்ளித்தரும் என்ற கேள்வியும் உள்ளது.. அதேசமயம், பாஜக அதிருப்தி ஓட்டுகளை மக்கள் நீதி மய்யம் தன்பக்கம் இழுக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.. ஆக, ராமநாதபுரத்தில் மோடி நிறுத்தப்பட்டால், அவரை எதிர்த்து களமிறங்குவது நல்லகண்ணுவா? கமல்ஹாசனா? தெரியவில்லை.. பார்ப்போம்..!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications