"அச்சாரம்".. பெரிய பிளானை கையில் எடுக்கும் ஓபிஎஸ்.. பறந்த உத்தரவு.. தகர்க்க ரெடியாகும் எடப்பாடி
விரைவில் சசிகலாவை ஓபிஎஸ் தரப்பு சந்திக்கும் என்கிறார்கள்
சென்னை: ஓபிஎஸ் தன்னுடைய அடுத்தக்கட்ட அரசியலுக்கு தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.. இதையடுத்து 2 தகவல்கள் அரசியல் களத்தில் வட்டமடித்து வருகின்றன.
அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், அடுத்து என்னாகுமோ என்ற எதிர்பார்ப்பும், கலக்கமும் தொண்டர்களை சூழ்ந்து வருகிறது.
கடந்த மாதம் முழுவதுமே எடப்பாடி பழனிசாமியின் அதிரடிகள் மெல்ல மெல்ல ஆரம்பமாகின.. பதிலுக்கு ஓபிஎஸ்ஸும் அரசியல் செய்தாலும், பெரிதும் நம்பி இருந்தது நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும்தான்.
இப்போது வரை இந்த நம்பிக்கை அவருக்கு குறையவில்லை என்றாலும், பாஜக மேலிடம் தந்த சப்போர்ட் மேலும் பலத்தை தந்துள்ளதாகவே தெரிகிறது.

அஸ்திரங்கள்
இதையடுத்துதான், சுற்றுப்பயணம் & நிர்வாகிகள் நியமனம் என்ற 2 விதமான அஸ்திரங்களை கையில் எடுத்தார். நிர்வாகிகள் நியமனம் என்பது, எடப்பாடியை கடுப்பாக்குவதற்கு என்கிறார்கள்.. சுற்றுப்பயணம் என்பது சசிகலாவுடனான இணைப்பை நோக்கையே என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. தன்னுடைய ஆதரவாளர்களுக்கு அதிமுகவில் புதிய பொறுப்புகளை வழங்கி வருவதுடன், எடப்பாடி டீமில் உள்ளவர்களுக்கும் வலையை பெரிதாகவே விரித்துள்ளார்.. இதில் பெரிய பெரிய நிர்வாகிகள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது..

லிஸ்ட் ரெடி
ஓபிஎஸ் அடுத்து வெளியிடும் லிஸ்ட்டில், எடப்பாடி டீமில் உள்ளவர்கள் பெயர்களும் இடம்பெறலாம் என்றும், இது நிச்சயம் எடப்பாடியை கடுப்பாக்கும் என்றும் ஓபிஎஸ் டீமால் பெரிதும் நம்பப்படுகிறது. அடுத்ததாக, சுற்றுப்பயண விவகாரம் ஓபிஎஸ்ஸின் தற்போதைய அரசியலில், நிறைய ஆதரவாளர்களை பெற்றுத்தரும் என்கிறார்கள்.. முன்னதாக, மதுரையில் இருந்து தேனி செல்லும் வரை கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசியதற்கு காரணமே, தென்மண்டலத்தில் தனக்கான செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை நிரூபிப்பதற்காத்தானாம்..

எந்த புள்ளி?
ஓபிஎஸ் சுற்றுப்பயணம் தொடங்கிய அதேசமயம், சசிகலாவும் சென்னையில் தன்னுடைய சுற்றுப் பயணத்தை தொடங்கியதும் இங்கு கவனத்தை பெற்றுள்ளது.. 2 சுற்றுப் பயணங்களின் பின்னணியில் பல அரசியல் காரணங்கள் இருந்தாலும், ஏதேனும் ஒரு புள்ளியில் இவர்கள் சந்தித்து கைகுலுக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்... யதேச்சையான சந்திப்பு போல காட்டிக் கொள்ள நேரிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லையாம்.

பறந்த உத்தரவு
இனி நடக்க போகும் பொதுக்குழுவில், சசிகலா, தினகரன் ஆதரவாளர்களிடமும் இணைந்து செயல்படும்படி, மாவட்ட செயலாளர்களை, ஓபிஎஸ் அறிவுறுத்தி உள்ளாராம்.. அதுமட்டுமல்ல, சசிகலா, தினகரன் எந்த மாவட்டத்துக்கு சென்றாலும், அங்கேயும் வரவேற்பு அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. ஓபிஎஸ்ஸின் இந்த முக்கிய உத்தரவு எடப்பாடியை தற்போது மேலும் அதிர செய்துள்ளது.. நீதிமன்ற உத்தரவுகள் எப்படி இருக்க போகிறதோ என்ற கவலைகள் சூழ்ந்துள்ள நிலையில், ஓபிஎஸ்ஸின் இதுபோன்ற அதிரடிகள் கூடுதல் தலைவலியை உருவாக்கி வருகிறது.

2 மாங்காய்கள்
அப்படி புதிதாக பொதுக்குழு உறுப்பினர்களை நியமித்துவிட்டால், போட்டி பொதுக்குழுவை நடத்தி முடித்து தேர்தல் ஆணையத்தில், "நாங்கள் தான் உண்மையான அதிமுக" என்று கோரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.. அதேசமயம், ஓபிஎஸ் - சசிகலா சந்திப்புக்களும் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள்.. அதற்கான வேலைகளை இழுத்து போட்டுக் கொண்டு மும்முரமாக செய்து கொண்டிருப்பதே ஓ.ராஜா தானாம். ஆக, நடக்க போகும் பொதுக்குழுவில் ஒரே கல்லில் 2 மாங்காய்களை குறி வைத்து நகர்த்தி கொண்டிருக்கிறார் ஓபிஎஸ்.
Recommended Video

அச்சாணி
இவர்களின் இணைப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், முதல் ஆதரவை தேவர் சமூக அமைப்புகள் கடந்த வாரமே வெளிப்படையாக தந்துவிட்டனர்.. ஓபிஎஸ், சசிகலா ஆகிய இருவரும் கைகோர்க்க வேண்டும் என்று தென் மாவட்டங்களில் பரவி உள்ள 100க்கும் மேற்பட்ட தேவர் சமூக அமைப்புகள், இருதலைவர்களுக்கு பின்னால் அணி திரண்டுள்ளனர். இதில், 50க்கும் மேற்பட்ட தேவர் சமூக தலைவர்கள், ரகசிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதுதான், இவர்கள் இணைப்புக்கான முதல் அச்சாணியாக பார்க்கப்பட்டு வருகிறது கவனிக்கத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications