"மண்குதிரை".. எடப்பாடிக்கு வந்த கிரீன் சிக்னல்.. இனி இதுதான் நடக்க போகுதா.. "இலை" ஈபிஎஸ்ஸூக்கா?
எடப்பாடியின் வாக்கு வங்கியை சிதறடிக்க ஓபிஸ் டீம் புது முயற்சியை கையில் எடுக்கலாம் என்கிறார்கள்
சென்னை: இரு தரப்பும் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதால், ஓபிஎஸ் வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.. இதனால் எடப்பாடிக்கு பச்சை சிக்னல் கிடைத்து வழிவிடப்பட்டுள்ளது என்பதால், இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் குழப்பம் ஓரளவு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. எனினும், ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் பெற்ற நிலையில், அதிமுக களம் எப்படி இருக்கும்? இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு என்ன செய்ய போகிறது? அதை எடப்பாடி தரப்பு எப்படி எதிர்கொள்ள போகிறது? என்பன போன்ற சில சந்தேகங்கள் வட்டமடித்து வருகின்றன.
விரைவில் இடைத்தேர்தல் நடக்க போகிறது.. இதில் போட்டியிடுவது தொடர்பாக, சின்னம் தொடர்பாகவும் அதிமுகவுக்குள் விவகாரங்கள் வெடித்து கிளம்பின.
சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டது... பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த தகவல்களை இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க டெல்லி சென்றுள்ளார் அவை தலைவர் தமிழ்மகன் உசேன்..

பின்வாங்கல்
இதனிடையே, ஈரோடு கிழக்குத் தொகுதியிலிருந்து ஓபிஎஸ் வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெற்றுள்ளார், அதிமுக சார்பில் இரட்டை இலையில் நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.. ஆனால், இப்படி வாபஸ் பெறுவதால், ஓபிஎஸ் டீம் பயந்து பின்வாங்கிவிட்டார்கள், வேட்பாளரைத் திரும்பப் பெறுவது காலம் கடந்த அறிவிப்பு என்றும் எடப்பாடி தரப்பில் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இது பின்வாங்கல் கிடையாது, நாங்கள் பெருந்தன்மை காரணமாகவும், கட்சியின் நலனுக்காகவுமே இப்படி முடிவை எடுத்துள்ளோம் என்று ஓபிஎஸ் தரப்பு சொல்லி வருகிறது.

சறுக்கலா?
இந்நிலையில், ஓபிஎஸ் வேட்பாளர் வாபஸ் வாங்கிவிட்டது, எடப்பாடிக்கு எந்த வகையில் பலன்தரும்? பாஜகவின் மூவ் எப்படி இருக்கும்? ஓபிஎஸ் அடுத்து என்ன செய்ய வாய்ப்புள்ளது? என்ற பல கேள்விகள் அடுத்தடுத்து எழுந்துள்ளன. இதுகுறித்து, நாம் அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் இதை பற்றி பேசினோம்.. அவர்கள் நம்மிடம் யூகமாக பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் இதுதான்: "ஓபிஎஸ்ஸுக்கு வேறு வழியில்லை.. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லி வரும்நிலையில், தேர்தலில் போட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுவது இயல்புதான்.. போட்டியிடாமல் போய்விட்டால், அதுவே எடப்பாடிக்கு பலம்தானே?

எடப்பாடி டீம்
இந்த விஷயத்தில், தன்னுடைய ஓபிஎஸ் வேட்பாளரை வாபஸ் வாங்கிவிடுவார் என்பது ஏற்கனவே அனைவரும் யூகித்த ஒன்றுதான்.. காரணம், " அதிமுக நான்தான்" என்று சொல்லும் ஒருவர், இரட்டை இலையை எதிர்த்து நிச்சயம் நிற்க முடியாது.. மேலும், பொதுக்குழுவில் ஆதரவும் பெரிதாக இல்லை.. அதனால், வேட்பாளரை வாபஸ் பெற்றுக்கொண்டு, இனி அடுத்தடுத்த சட்டரீதியான விஷயங்களை வேண்டுமானால் இனி தொடர நினைக்கலாம்.. ஆனால், அதேசமயம், ஓபிஎஸ் டீம் பலவீனமானதாக எடப்பாடி தரப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.. அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ் டீமில் இருக்கும் நிர்வாகிகள் சிலர், எடப்பாடி பக்கம் இனி தாவவும் கூடும்.. காரணம், சட்டரீதியான விஷயங்களில் ஓபிஎஸ் வலுவாக இருந்தாலும், களத்தில் சறுக்கலை சந்தித்து விட்டதாக கருதப்பட்டு வருகிறது.

கூடாரம் காலி
பாஜக இந்த விஷயத்தில் இதற்கு மேல் இப்போதைக்கு தலையிடாது.. இலைக்கு வாக்கு வங்கி என்பது இன்னமும் அப்படியே உள்ளதால் அதை தங்களுக்கு பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது.. அதனால், எம்பி தேர்தலின்போது, ஒற்றை தலைமை விவகாரத்தை பார்த்து கொள்ளலாம் என்று நினைக்கலாம்.. மற்றபடி, பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டிவிட எடப்பாடி பழனிசாமி முன்வரமாட்டார். காரணம், எடப்பாடியை நம்பி கூட்டணி வைக்க காங்கிரஸ் முன்வரவில்லை.. பாஜகவையும் எடப்பாடி லேசில் விட்டுவிட மாட்டார் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள்.. இந்த இடைத்தேர்தல் விஷயத்தில், எடப்பாடியின் அரசியல் காய்நகர்த்தல்கள் என்பது தற்காலிகம்தான்..

வோட் ஷேரிங்
ஓபிஎஸ்ஸை ஆஃப் செய்வதற்காக மட்டும்தான்.. "கூட்டணி" என்று பெயரை பேனரில் மாற்றியதுகூட, தன்னிடம்தான் கட்சி உள்ளது என்பதை ஓபிஎஸ் தரப்புக்கு காட்டிக்காள்வதற்காகத்தான்.. இடைத்தேர்தலில் சுயேச்சை சின்னம் அல்லது இலை சின்னம் எதுவாக இருந்தாலும், நிறைய வாக்குகளை எடப்பாடிக்கு பெற்று தரலாம்.. தொகுதியில், மொத்தம் 2 லட்சத்து 24 ஆயிரம் ஓட்டுக்களில் 1 லட்சத்து 60 ஆயிரம் ஓட்டுக்கள் பதிவாகும் என்றே வைத்து கொள்வோம். திமுக எப்படியும் ஒரு லட்சம் ஓட்டுக்களையாவது பெறக்கூடும்.. எடப்பாடி எப்படியும் 30 ஆயிரம் ஓட்டுக்களாவது பெறுவார்..

வோட் ஷேரிங்
ஆனால், எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கையும், அவரது வாக்குகளையும் குறைப்பதற்காக, ஓபிஎஸ் தினகரன் + சசிகலா 3 பேரும் சேர்ந்து எடப்பாடிக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டால், எடப்பாடிக்கு அது சற்று சிக்கல்தான்.. ஆனால் இலை முடங்க கூடாது என்பதற்காகத்தான், வேட்பாளரையே வாபஸ் பெற வைப்பதாக ஓபிஎஸ் காரணம் சொல்லி உள்ளதால், பிரச்சாரத்துக்கு ஓபிஎஸ் செல்வாரா? அப்படியே சென்றாலும், என்ன சொல்லி வாக்கு சேகரிப்பார்? இலைக்கு ஓட்டு போட சொல்வாரா? என்பது இனிதான் பார்க்க வேண்டும்" என்கின்றனர்.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications