Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உலை" வெச்ச விஐபி.. திமுக ஓட்டை பிரிப்பது "அவரா"? அந்த கட்சிதான் ஜெயிக்க போகுதா? பலே மாஸ்டர் ப்ளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? இல்லையா? என்ற குழப்பம் இன்னும் ஓடுகிறது.. மற்றொருபுறம், அதிமுக கூட்டணி விஷயத்தில் திமுக என்ன செய்ய போகிறது? என்ற ஆர்வமும் எகிறி வருகிறது.

பொதுக்குழு தீர்ப்பு சமீபத்தில் வந்துள்ள நிலையில், ஓபிஎஸ் & டீம் பெருத்த அதிர்ச்சியிலும், சோகத்திலும் உள்ளதாக தெரிகிறது. பொதுக்குழு தொடர்பாக அப்பீலுக்கு இனி போனாலும்கூட, சிவில் வழக்குகளில் உடனே தீர்ப்புகள் வரப்போவதுமில்லை. அதனால்தான், தனிக்கட்சி என்ற யோசனைக்கு வந்துள்ளது. இதற்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாகவும் தெரிகிறது.

Can OPS start a new party and What are the advantages of DMK in the Southern Regions

அமித்ஷா: "இப்போதைக்கு தனிக்கட்சி வேண்டாம், டிசம்பர் மாதம் வரை பொறுத்திருங்கள். தேவைப்பட்டால், தாமரை சின்னத்தில் போட்டியிடலாம்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பிலிருந்தே பேச்சு நடத்தப்பட்டதாக சொல்கிறார்கள். ஆனால், ஓபிஎஸ் தரப்பு இதற்கு ஓகே சொல்லவில்லையாம்.

"இனியும் பாஜகவை நம்பி அரசியல் பண்ணுவது வேஸ்ட்.. நம்பி நம்பி மோசம் போகியிருக்கிறோம்... ஏமாந்துவிட வேண்டாம். சட்டரீதியாக அதிமுகவுக்கு உரிமை கோரும் அனைத்து வழிகளும் நமக்கு அடைக்கப்பட்டதற்கு காரணமே பாஜகதான்.

எடப்பாடி பழனிசாமி: எப்படியும் எடப்பாடிக்கு சாதகமாகவே டெல்லி நடந்து கொள்ளும். தேர்தல் வரை நாம் எந்த முடிவையும் எடுக்க விடாமல் தடுத்துக் கொண்டே வந்து, கடைசி நேரத்தில் நம்மை கழட்டிவிட்டுவிட்டு, எடப்பாடியிடம் கைக்கோர்ப்பார்கள் பாஜகவை நம்பி வீணாக வேண்டாம் என்று ஓபிஎஸ்ஸுக்கு, சில சீனியர்கள் சொன்னார்களாம்.

இதே நிலைமைதான், ஈரோடு இடைத்தேர்தலின்போதும் ஓபிஎஸ்ஸூக்கு வந்தது.. கடைசிவரை பாஜகவுக்காக காத்து கிடந்து, வேட்பாளரை வாபஸ் பெற வைத்தார் ஓபிஎஸ்.. அப்போதே கொங்குவின் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுப்பாகிவிட்டார்கள்.. அப்படியே சூட்டோடு சூடாக கிளம்பி, எடப்பாடியை சந்தித்து கட்சியில் இணைந்துவிட்டார்கள்.

பொதுக்குழு தீர்மானம்: இப்போதும் பொதுக்குழு தீர்மான முடிவுகள் வந்துள்ளதால், இத்தனை நாளும் காத்துக்கிடந்த ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் சோர்ந்து விட்டார்களாம். அதனால், இவர்களில் ஒரு தரப்பினர் அதிமுக பக்கம் தாவ முயற்சித்து கொண்டிருக்கிறார்களாம். இவர்களையும் தட்டி தூக்கி கொண்டுவந்துவிட, எடப்பாடி டீமும் களமிறங்கி உள்ளதாம்.

இப்படிப்பட்ட சூழலில், பாஜக Vs ஓபிஎஸ் டீம் அதிருப்திகள் வெடித்து கிளம்பி வருவதாக சொல்கிறார்கள்.. இலை + சின்னம் + கட்சி + மெஜாரிட்டி ஆதரவாளர்கள் என மொத்தமும் எடப்பாடியிடம் உள்ள நிலையில், எப்படியும் அவர்பக்கம்தான், பாஜக சாயும் என்பதால், ஓபிஎஸ் கடும் அதிருப்தியிலும் குழப்பத்திலும் உள்ளதாக தெரிகிறது. தனிக்கட்சியை துவக்கவிடாமல் செய்வது, அதிமுகவின் வெற்றிக்காகத்தான் என்றே ஓபிஎஸ் தரப்பு நினைக்கிறதாம்.

திமுக ஓட்டுக்கள்: ஆனால், பாஜகவோ இந்த விஷயத்தில் எந்த முடிவையும் உடனே எடுக்காது என்கிறார்கள்.. காரணம், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு இருக்கிறது என்பதைவிட, தினகரனுக்கு இருக்கும் ஓட்டு வங்கியை மிஸ் செய்துவிட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறதாம்.

கடந்த முறை தினகரன் பிரித்த ஓட்டுக்கள், பெரும்பாலும், அதிமுக + திமுக எதிர்ப்பு ஓட்டுக்கள் என்பதை மறந்துவிட முடியாது. 160 தொகுதிகளில் போட்டியிட்ட அமமுக, 10,85,985 வாக்குகளை பெற்றிருந்தது.. திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களை பிரித்ததே தினகரன்தான்.. அந்தவகையில் முக்குலத்தோர் ஆதரவு வாக்குகளை அவ்வளவு லேசில் இழந்துவிட பாஜக விரும்பவில்லை.. அதுவும் இந்த முறை, தென் தமிழகத்தில் போட்டியிட முனைப்பு காட்டி வரும்சூழலில், அமமுகவின் ஓட்டுக்களை முழுமையாக ஒதுக்கி தள்ளவும் முடியாது.

ஒருவேளை, ஓபிஎஸ் தனியாக கட்சி துவங்கி, தினகரனுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால், தென்மண்டலங்களில் கிட்டத்தட்ட 15 தொகுதிகளில், அதிமுக சறுக்கலை சந்திக்கும் என்றும், அந்த 15 இடங்களிலும் திமுகவுக்கு களம் சாதகமாகிவிடும் என்றும் பாஜக கணக்கு போடுகிறது. அதுமட்டுமல்ல, பிளவுபட்ட அதிமுகவே ஒன்றிணைந்தாலும்கூட, அதிமுகவின் பழைய வாக்கு வங்கி வருமா? என்பதும் சந்தேகம் தானாம். அதனால், ஓபிஎஸ் விஷயத்தில் எந்த முடிவையும் பாஜக உடனே எடுக்காது என்கிறார்கள்.

இந்த நேரத்தில், நாம் ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டி உள்ளது.. சில நாட்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், நம்முடைய ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்திருந்தார். அந்த பேட்டியில், ஓபிஎஸ் குறித்து சில விஷயங்களை பேசியிருந்தார்.

பாஜக: "பாஜகவே எங்களை வெளியே அனுப்பும்வரை, நாங்கள் வெளியே போக மாட்டோம், பாஜகவுடன்தான் இருப்போம் என்று ஓபிஎஸ் சொல்வதே, ரொம்ப கேவலமா இருக்கு. கழுத்தை புடிச்சு பாஜக வெளியே தள்ளினால்தான் போவீங்களா? அப்படின்னா, பாஜகவை விட்டால் உங்களுக்கு வேற வழி இல்லையா? பாஜகவை நம்பித்தான் பொழப்பு ஓடுது என்று பன்னீர்செல்வம் நினைப்பது தவறு.

தினகரன்தான் உங்களுடன் இருக்கிறாரே, தனித்து போட்டியிடுங்கள்.. ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3பேரும் சேர்ந்து, குறைந்த பட்சம் 10 தொகுதிகளிலாவது, வேட்பாளர்களை நிறுத்தினால், நிச்சயம் பாஜக & எடப்பாடி அணி தோல்வியை தழுவும்.. இது பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.. அதனால்தான், கடைசியாக ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறது.

Can OPS start a new party and What are the advantages of DMK in the Southern Regions

ஓபிஎஸ் + தினகரன்: இந்த விஷயத்தில் ஓபிஎஸ் + தினகரன் + சசிகலா 3 பேருமே ஏமாந்துவிடக்கூடாது. மக்கள் ஆதரவு தனக்கு உள்ளது என்று ஓபிஎஸ் நிரூபிக்க வேண்டும். அதற்கான தளத்தை இப்போதே உருவாக்க வேண்டும்" என்று ப்ரியன் நம்மிடம் கூறியிருந்ததையும், இந்த நேரத்தில் நாம் இங்கே நினைவூட்ட வேண்டி உள்ளது..

ஆக.. ஓபிஎஸ் தனிக்கட்சி துவங்கினால், திமுகவுக்கான களம் சாதகமாகிவிடும் என்று பாஜக நினைக்கிறது.. ஏற்கனவே, திமுகவின் B டீம் என்று ஓபிஎஸ்ஸை, அதிமுக தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் இனி எப்படி நகர போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+