தங்கர் பச்சான் நச்.. "திமுகவுக்கே ஒரு பிரச்சனைன்னா".. கடலூரில் உடையுதா வன்னியர் ஓட்டு? விடாது அதிமுக
சென்னை: தொகுதி வேட்பாளராக தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர் தங்கர்பச்சான்.. சில காலம் அரசியல் பேசாமல் ஒதுங்கிவந்த நிலையில், தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருபவர்.

வாக்குறுதி : கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாக்குறுதிகளை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தபோது, அதை விமர்சித்தவர்களில் முதன்மையானவர் தங்கர்பச்சான்தான்.. திமுக ஆட்சி அமைந்ததுமே, ஒரு சேனலுக்கு தங்கர் பச்சான் பேட்டி தந்திருந்தார்.. அதில் திமுகவின் ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பப்பட்டது..
அதற்கு "முதல்வர் நேர்மையான அதிகாரிகளை நியமித்திருக்கிறார். நல்லாட்சிக்கு நேர்மையான அதிகாரிகள் மட்டும் போதுமா? அரசியல் என்பது முதல்வர் மட்டுமே செய்வதில்லையே. அனைத்து அமைச்சர்களும் மனது வைக்க வேண்டும். இலவச கல்வி, மருத்துவம், தூய்மையான காற்று, நீர், நஞ்சில்லாத உணவு இவை அனைத்தையும் தருவோரின் ஆட்சியே நல்லாட்சி" என்று திமுகவை லேசாக இடித்துரைத்திருந்தார்.
செந்தில் பாலாஜி: அவ்வளவுஏன், அமைச்சராக இருந்தபோது, செந்தில்பாலாஜியிடம் மின்சார கட்டணம் குறித்த புகார்கள் தெரிவித்த நபர்களில் தங்கர் பச்சானும் முதன்மையானவர்..
"மாசா மாசம் கணக்கெடுத்திருந்தால் 16 ஆயிரம் மட்டுமே என் வீட்டிற்கு மின்சாரக் கட்டணமாக செலுத்த வேண்டும்... ஆனால், 36 ஆயிரம் ரூபாய் பில் கட்டியிருக்கேன்.. மாதம் மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வருவோம் என்று முதல்வர் சொல்லியிருந்தாரே, அதை நிறைவேற்ற வேண்டும்" என்று கோரிக்கையும் விடுத்திருந்தார்.
பிரச்சனைகள்: அதுமட்டுமல்ல, தன்னுடைய கடலூர் மாவட்ட பிரச்சனைகள் குறித்தும், அவ்வப்போது தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவு செய்து வருபவர்.. சமீபத்தில், என்எல்சி நிலம் கையப்படுத்தப்பட்ட விவகாரம் கடலூரையே உலுக்கி எடுத்தபோது, தங்கர் பச்சான் ஒரு ட்வீட் பதிவிட்டிருந்தார்.
"தமிழகத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் 68 ஆண்டுகளாக மின்சாரம் தந்து இன்று கதறிக்கொண்டிருக்கின்ற என் மக்கள் தான் தமிழகத்திலேயே அதிகப்படியான நிலத்தை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். உண்மையிலேயே எங்கள் கதறல் உங்கள் காதுகளுக்கு எட்டவில்லையா? எதற்காக போராடுகிறோம் என்பது இன்னும் விளங்கவில்லையா? இது பாமக சிக்கலோ வன்னியர் சமுதாய சிக்கலோ அல்ல. ஐந்து மாவட்டங்களின் வாழ்வாதார சிக்கல்.
ஜல்லிக்கட்டு: ஜல்லிக்கட்டு மாடுகளை காப்பாற்றுவதற்காக போராடிய இளைஞர் சமுதாயம் இன்று இந்த மண்ணையும் மக்களையும் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே நியாயம்தானா?
கல்வி கற்று எத்தனை பட்டங்கள் பெற்றாலும், அரசியல் விழிப்புணர்ச்சி பெறாத போராடத் தெரியாத சமூகம் இறுதிவரை அரசியல் கள்ளர்களின் காலடியில் அடிமைகளாகவே கிடந்து வாக்குகளை மட்டும் செலுத்திவிட்டு புலம்பியே செத்துபோகும்" என்று உருக்கமாக பதிவிட்டிருந்தது, தமிழக இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது.
அரசியல்வாதிகள்: இப்படி அரசியலையும் அரசியல்வாதிகளையும் தாறுமாறாக தொடர்ந்து விமர்சித்தும் கேள்வி எழுப்பியும் வருவதாலேயே தங்கர்பச்சானின் ஒவ்வொரு பேட்டியும், ஒவ்வொரு ட்வீட்களும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இப்போது, இவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறது பாமக.
ஆரம்பத்திலிருந்தே, தங்கர் பச்சான் பாமக ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருப்பதால், தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாமக வேட்பாளராக போட்டியிடுவது ஏன் என்பது குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் செய்தியாளர்களிடம் ஒரு விளக்கம் தந்துள்ளார்.
பாமக: அதில், "தமிழர்களின் இனம், மொழி, பண்பாடு, அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றுக்கும் முதல் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சிதான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. திமுக, அதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகளை விட ஒரு பிரச்சினை என்றால் முதலில் களத்தில் இறங்கி போராடுவது பாமக தான்.. அது மக்களுடைய இயக்கமாக இருப்பதால் நான் பாமகவில் இணைந்து தற்போது கடலூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
வன்னியர் ஓட்டுக்களுக்கு இந்த முறை திமுக வலுவாகவே குறி வைத்துள்ளது.. அதற்கேற்றவாறு காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கியிருக்கிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் இங்கு போட்டியிடுவதாக சொன்னாலும், கடலூரை ஏன் கூட்டணிக்கு ஒதுக்க வேண்டும் என்ற அதிருப்தி திமுகவினருக்கு உள்ளதாம்..
கூட்டணி கட்சி: திருநாவுக்கரசரை போலவே, கே.எஸ்.அழகிரியும், எம்பி தேர்தலில் கடலூர் தொகுதியை வழங்குமாறு காங்கிரஸ் மேலிடத்திடம் கோரிக்கை வைத்திருக்கலாம்.. அதனாலேயே இந்த தொகுதியை திமுக தலைமை விட்டுத்தலைமை விட்டுக்கொடுத்திருக்கலாம் என்று காரணம் சொல்லப்படுகிறது.. எனினும், வன்னியர் ஓட்டுக்களை வெகுவாக அள்ளுவது திமுகவா? பாமகவா? என்ற எதிர்ப்பு எகிறி வருகிறது.
அதைவிட முக்கியமாக, முதன்முறையாக நேரடி அரசியலில் தங்கர் பச்சான் களமிறங்கியுள்ளது, தமிழகத்தை மேலும் உற்றுநோக்க செய்துள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications