Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முடிஞ்சதாமே".. டெல்லிக்கு எடப்பாடி தந்த "மெசேஜ்".. மெகா கூட்டணியில் பாமக வருமா.. கிளம்பியது விவாதம்

மெகா கூட்டணியில் பாமக, பாஜக இணையுமா என்று அரசியல் பார்வையாளர்கள் கேட்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெகா கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் கூறியுள்ள நிலையில், அதுகுறித்த பார்வைகளும், கருத்துக்களும் வெடித்துக் கிளம்பி உள்ளன.. மற்றொருபுறம் மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தி உள்ளதை பாஜக தரப்பு கூர்மையாக கவனித்து வருகிறது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

அதில், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

 நத்தம் காட்டம்

நத்தம் காட்டம்

முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.. பொருட்களில் போலி இருப்பது அரசியலில் போலி ஓபிஎஸ் என்றும் நத்தம் விசுவநாதன் விமர்சித்தாராம்.. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்றும் சட்டமன்ற தேர்தலை போல நாடாளுமன்ற தேர்தலையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எதிர்கொள்ள தயார் என்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்..

 சட்டப்போராட்டம்

சட்டப்போராட்டம்

அதுபோலவே, ஓபிஎஸ்ஸை அதிமுகவில் இணைக்கக்கூடாது என்று எடப்பாடி தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் வலியுறுத்தியுள்ளனர். பிறகு, எடப்பாடி பழனிசாமி, பேசும்போது, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.. சட்டப்போராட்டங்கள் குறித்து கவலைப்பட வேண்டாம்.. கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக்கொள்ளும். கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.. அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

 தகரும் கணக்கு

தகரும் கணக்கு

இன்றைய தினம் அதிமுக கூட்டத்தினை, பாஜக, ஓபிஎஸ் தரப்பு உட்பட பல்வேறு கட்சிகளும் உற்றுநோக்கி உள்ளன.. பாஜக இல்லாத கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தயாராகி வருகிறாரா? என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது.. ஏற்கனவே ஒருமுறை இதுகுறித்து நாமக்கல்லில் மெகா கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார்.. அதுகுறித்து அப்போதே அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, "விரைவில் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்.. அதை நோக்கி நாங்கள் நகர்கிறோம்'" என்று கூறியிருந்தார். இப்போது மீண்டும் மெகா கூட்டணி என்பதை வலியுறுத்தி உள்ளதை, டெல்லி மேலிடமும் கவனித்து வருகிறது.

மேஜிக்

மேஜிக்

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இன்றைய தின நிகழ்வை அரசியல் பார்வையாளர்களும் கணித்து வருகிறார்கள்.. ஒரு பிரபல சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேட்டி அளித்துள்ளார்.. அதில் அவர் சொன்னதாவது: "அதெப்படி மெகா கூட்டணி அதிமுகவில் சாத்தியமாகும்? தற்போதுள்ள பிளவுகள் ஒன்றுபட்டால் மட்டுமே மெகா கூட்டணி சாத்தியமாகும்.. எடப்பாடி பழனிசாமியை மட்டுமே நம்பி பாஜகவோ அல்லது பாமகவோ யாருமே கூட்டணிக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.. முதலில், தன்னை பலப்படுத்தி கொள்ள வேண்டும்.. கட்சியை பலப்படுத்த வேண்டும்.. அதற்கான வேலைகளை துவங்க வேண்டும்.. அப்போதுதான் மெகா கூட்டணி என்ற தகுதியை எடப்பாடி தரப்பு பெற முடியும்..

 நீளும் மேட்டர்

நீளும் மேட்டர்

பாராளுமன்ற தேர்தல் பணி துவங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார்களே? எப்படி இது சாத்தியம்? எப்படி பணியை நிர்வாகிகள் துவங்குவார்கள்? தொண்டர்கள் எப்படி நம்புவார்கள்? யாரிடம் கட்சி உள்ளது என்றே தெரியாமல், எந்த நம்பிக்கையில் பணியை துவங்குவார்கள்?ஒன்றுபட்டால்தான் நம்பிக்கை என்பது பிறக்கும்.. ஒன்றுபட்டால்தான், மக்களுக்கு நம்பிக்கை வந்து ஓட்டு போடுவார்கள்.. நோட்டீஸ் அனுப்பியதற்கு "நான் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் பதில் சொல்கிறார்.. இப்படியேதான் இரு தரப்பினரின் விவகாரமும் போய்க்கொண்டே இருக்கும்.. மக்களிடையே அங்கீகாரத்தையும் நம்பிக்கையையும் பெற வேண்டும்.. எடப்பாடி பழனிசாமி மட்டுமே கட்சி கிடையாது என்பதை அவர் உணர வேண்டும்..

 மவுசு தினகரன்

மவுசு தினகரன்

அன்று டிடிவி தினகரன் கைதானபோது, எடப்பாடி பழனிசாமிக்கான மவுசு என்பதே குறைவு.. ஓபிஎஸ் கைதான் அன்று ஓங்கியிருந்தது.. கட்சியை கைகொடுத்து தூக்கி விட்டவர் ஓபிஎஸ்தான்.. இந்த நாலரை வருட காலத்தில், தன் செல்வாக்கை எடப்பாடி பெருக்கி கொண்டாலும், ஓபிஎஸ்ஸுக்கு செல்வாக்கு இல்லை என்று ஒரேடியாக சொல்லிவிட முடியாது.. இரட்டை தலைமை சரிவராது என்றாலும்கூட, இப்போதைக்கு இவர்கள் 2 பேரும் இணைந்தால்தான் தொண்டர்களிடம் நம்பிக்கை பிறக்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+