பீஸ் பீஸா சிதறுதே.. "குறி" பொன்முடிக்கு இல்லையாமே.. பெருசா மாட்டும் "திமிங்கலம்" யாரு தெரியுமா? ஓஹோ
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் மற்றும் அன்னிய செலாவணி மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை மேற்கொண்ட ரெய்டு நடவடிக்கையில், அமைச்சர் பொன்முடி அடுத்த நபராக சிக்கியுள்ளார்.. எனினும், இது தொடர்பாக சில தகவல்கள் கசிந்துவருகின்றன.
பொன்முடியின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனம், தொழில் நிறுவனம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனையை மேற்கொண்டனர்.
அப்போது, பொன்முடிக்கும், அவரது மகன் கவுதம சிகாமணிக்கும் சொந்தமான வீடுகளில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி, முக்கிய ஆவணங்களையும் அங்கிருந்து கைப்பற்றியிருக்கிறார்கள்.. இதனடிப்படையில், சம்மனும் வழங்கப்பட, பொன்முடியை தங்கள் அலுவலகத்திற்கு நேற்றே அழைத்துச்சென்று, அதிகாரிகள் விசாரணையும் நடத்தினார்கள்..

விடிய விடிய விசாரணை: நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவரிடம், அதிகாலை 3 மணி வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது..
அந்த விசாரணையில், "எனக்கு நினைவில்லை, என் மகனுக்குத்தான் தெரியும், வழக்கறிஞரிடம் தான் கேட்க வேண்டும்" என்கிற பதிலையே பொன்முடி திரும்ப திரும்ப சொன்னாராம். இதையடுத்து, பொன்முடியை தொடர்ந்து, அவரது மகனும் விசாரிக்கப்பட உள்ளாராம்.. எனினும், இதில், பொன்முடி கொடுக்கும் பதிலை வைத்தே அவரது மகனை முதலில் கைது செய்ய வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்..
ஸ்கெட்ச்: ஆனால், அந்த ஸ்கெட்ச், பொன்முடி மகனுக்கு இல்லையாம்.. பொன்முடியின் வாக்குமூலத்தை வைத்து அவரது மகனை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிடுகிறதாம்.. அமலாக்கத்துறையின் அடுத்தக்கட்ட நடவடிக்கை அதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.
எம்பி கார்த்தி சிதம்பரத்தை பொறுத்தவரை, ஏற்கனவே 2017ல் இவர் மீது ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்தது.. பிறகு அமலாக்க இயக்குனரகமும் இதில் தலையிட்டு, பணமோசடி வழக்கை பதிவு செய்தது.. 2018-ல் கைதானார்.. ஆனால், ஒரே மாசத்தில் வெளியே வந்துவிட்டார். இதற்கு பிறகு விசா விவகாரம் கார்த்தி சிதம்பரம் மீது வெடித்து கிளம்பியது.
சிபிஐ வழக்கு: 2010 முதல் 2014 வரை, பஞ்சாபில் மின்சாரத் திட்டத்துக்கான சீனர்கள் இந்தியா வருவதற்கு சட்டவிரோதமாக 250 விசாக்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ரூ.50 லட்சம் பெற்றதாகவும் சிபிஐ மறுபடியும் வழக்கு பதிவு செய்தது.. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனையும் மேற்கொண்டது.. அதில், சூட்டோடு சூடாக, கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கைதானார்..
இந்த இடத்தில்தான் கார்த்திக்கு சிக்கல் அதிகரிக்க துவங்கியது.. தன் மீதான சிபிஐ வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தையுமே கார்த்தி சிதம்பரம் மறுத்திருந்தார் என்றாலும், இது தொடர்பாக சம்மன் விரைவில் கார்த்திக்கு அனுப்பப்படும் என்று சலசலக்கப்பட்டது.
ஆதாரங்கள்: அதுமட்டுமல்ல, விசா வாங்கியவர்கள் கார்த்திக் சிதம்பரத்துடன் பேசியதற்கான ஆதாரங்களெல்லாம் சிக்கியிருப்பதாகவும், எனவே, கார்த்தி சிதம்பரம் தேசவிரோதமாக செயல்பட்டிருக்கிறார் என்று பாஜக அப்போதே ஆவேசமாக கருத்து கூறியிருந்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், பொன்முடி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இந்த ரெய்டு குறித்து, கார்த்தி சிதம்பரம் நேற்றுகூட பாஜகவை சாடி, ஒரு பேட்டி தந்திருந்தார்.
அதில், "அமலாக்கத்துறையை பாஜக அரசு எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. உண்மையான வழக்கு, விசாரணை என்றால் அமலாக்கத்துறை சம்மன் கொடுத்து விசாரிக்க வேண்டும், ரெய்டு என்பது முறையானது கிடையாது.. ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறையின் செயல்பாடுகள் வரும் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு சாதகமாக அமையும்" என்று கார்த்தி கூறியிருந்தது, பாஜகவை மேலும் கடுப்பாக்கி விட்டுள்ளதாம்.
யாருக்கு குறி: அன்று, ஏர்டெல் மேக்சிஸ் தொடர்பான வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் வாக்குமூலத்தை வைத்து ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை. அதேபோல, பொன்முடி மகன் மூலமாக, கார்த்தி சிதம்பரத்துக்கு "செக்" வைக்கும் புதுரூட்டை எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், திமுக உட்பட காங்கிரஸ் கூடாரங்களிலும் புயல் அடித்து கொண்டிருக்கிறது..!!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications