குடும்ப அட்டைதாரர்களுக்கு குழப்பம்.. ரேஷனில் மளிகையும் வாங்கணுமா? ரேஷன் கடைகளில் இதென்ன திடீர்னு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ரேஷன் கடையில் விரைவில் தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்கள் கிடைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும்நிலையில், ரேஷன் ஊழியர்கள் மீது புகார் கிளம்பி வருகிறது.

தமிழக ரேஷன் கடைகளில், பொது வினியோக திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், கோதுமை போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.. கார்டுதாரர்களுக்கு குறிப்பிட்ட எடையில் மாதந்தோறும் வழங்கப்படுகின்றன. இதனால், கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பலன்பெற்று வருகிறார்கள்.

Can Ration card holders buy ration only if they buy groceries and What are the Major instructions by Tamil Nadu Gov

அந்தவகையில், தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இந்த அட்டைகளுக்கு உணவு பொருட்கள் நியாய நிலையில் வழங்க 34 ஆயிரத்து 793 ரேஷன் கடைகள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

மலைகிராமம்: பஸ்கள் போக முடியாத மலை கிராமங்களில் கூட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இதன்மூலம், 7 கோடியே 52 ஆயிரத்து 847 பேர் உணவு பொருட்கள் பெற்று பயன்பெற்று வருகிறார்கள்.

ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுப்பதற்காகவே, கைரேகை முறையில் பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், பிற பொருட்களை வாங்கினால் தான் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் தருவோம் என்று சில ஊழியர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. 100 ரூபாய் அல்லது குறைந்தது 50 ரூபாய்க்கு மேல் ஏதாவது ஒரு பொருள் வாங்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார்களாம்..

உணவுத்துறை: எனவே, கடைக்கு வரும் ரேஷன்தாரர்களை பொருட்களை வாங்க சொல்லும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்று பலமுறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு, தமிழக உணவுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. இதையும் மீறி யாராவது ஊழியர்கள் கட்டாயப்படுத்தினால், சம்பந்தப்பட்ட ரேஷன் கடை எண், ரேஷன் கடை ஊழியர் பெயர் போன்றவற்றை குறிப்பிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம்.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வாங்குமாறு கார்டுதாரர்களை, ரேஷன் ஊழியர்கள் கட்டாயப்படுத்தி வருவதாகவும், இதற்காக மாதம், 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதாகவும் மற்றொரு குபீர் புகார்கள் எழுந்துள்ளன.

ரேஷன் கடைகள்: அதாவது, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு சங்கங்கள் நஷ்டத்தில் இயங்குவதால், கடை வாடகை உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க, ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பிரிவில் மளிகை, எண்ணெய், மசாலா மற்றும் மாவு வகைகள் போன்றவை விற்கப்படுகின்றன. இவைகளை அட்டைதாரர்கள் மட்டுமின்றி, வேறு யார் வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்ப வாங்கலாம். ஆனால், கட்டுப்பாடற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

200 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கினால் தான் அரிசி, சர்க்கரை வழங்கப்படும் என்று ரேஷன் ஊழியர்கள் சொல்கிறார்களாம்.. அப்படியே அவர்கள் தரும் பொருட்களும் தரமானதாக இல்லை, விலையும் அதிகம் என்கிறார்கள்..

கட்டுப்பாடற்ற தேவை: இது குறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் சொல்லும்போது, "ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடை ஊழியர்களிடம், கட்டுப்பாடற்ற பொருட்களின் தேவை பட்டியலை பெற்று, அதற்கேற்பவே விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.. ஆனால், இதை யாரும் பின்பற்றுவதில்லை. அதேபோல, வெளிச்சந்தையை விட குறைந்த விலைக்கு தான் மளிகை பொருட்களை அனுப்ப வேண்டும்... ஆனால், இதனையும் யாரும் பின்பற்றுவதில்லை..

விலை அதிகம் இருப்பதால் நிறைய பேர் வாங்குவதில்லை. அந்த மளிகை பொருட்கள் விற்கவில்லையானால், அதற்குரிய பணம் சம்பளத்தில் பிடிக்கப்படும் என்று அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதால், ஊழியர்களும், கார்டுதாரர்களிடம் கட்டாயப்படுத்தும் நிலை ஏற்படுகிறது..

வேண்டுகோள்: எனவே, கட்டுப்பாடற்ற பொருட்களை அனுப்பும்போது, ரேஷன் கடையில் உள்ள விற்பனை முனைய கருவியில் பதிவு செய்து, விற்க அனுமதிக்க வேண்டும். அப்போதுதான், பொருட்களின் விற்பனையில் வெளிப்படை தன்மை இருக்கும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+