சிங்கம் "சிங்கிளா" வருது.. "அங்கிட்டு" சாய்கிறாரா சீமான்? பிரியுது முஸ்லிம் ஓட்டு.. மிரண்ட பாஜக..பலே

Subscribe to Oneindia Tamil

சென்னை: மெகா கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சித்து வரும்நிலையில், நாம் தமிழர் கட்சி என்ன முடிவெடுக்க போகிறதென்று தெரியவில்லை.

கடந்த 2019 எம்பி தேர்தலின்போதே, 8 சதவிகிதம் வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற வேண்டும் என்பது நாம் தமிழர் கட்சியின் எண்ணமாக இருந்தது. ஆனால்,.. அவர்களால் வெறும் 4 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

Can Seeman win BJPs disaffected votes and Is Edapadi Palanisamy trying to ally with Naam Tamizhar Party

ஏனென்றால் கமல்ஹாசன், தனியாக மநீம என்ற கட்சி ஆரம்பித்து, உடனடியாக முதல் தேர்தலையும் சந்தித்தார்.. அவரும் 4 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தார்.. அதனால்தான், நாம் தமிழருக்கு வந்திருக்க வேண்டிய ஓட்டுக்கள் கமலுக்கு சென்றது..

அதிருப்தி ஓட்டுக்கள்: கடந்த சட்டமன்ற தேர்தலில், கமலுடன் சீமான் கூட்டணி வைப்பது போல ஒரு பேச்சு எழுந்தது.. அப்படி கூட்டணி வைத்தால், அதிமுக, திமுகவின் அதிருப்தி ஓட்டுக்களுடன், இவர்கள் இருவரின் வாக்குகளும் சேர்ந்து ஓட்டு சதவீதத்தை அதிகரிக்கும் என்றும் நம்பப்பட்டது.. ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை.. சிங்கம் தனியாகத்தான் வேட்டையாடும், நாய், ஓநாய், பன்றிதான் கூட்டமாக வேட்டையாடும் என்று சொல்லியிருந்த சீமான்..

அதன்படியே, தனித்து களமிறங்கினார். நாம் தமிழர் கட்சி 7 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது. எனவே, அக்கட்சிக்கு 3-வது இடம் தமிழகத்தில் கிடைத்திருக்கிறது..

அசரடித்த சீமான்: அதுமட்டுமல்ல, 170-க்கும் அதிகமான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், திமுக, அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு அடுத்த இடத்தை பிடித்து சாதித்திருந்தனர்.. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலிலும் பல இடங்களில் வெற்றி பெற்று, தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்திருந்தது சீமானின் கட்சி.

இப்போதும், இந்த வாக்கு சதவீதம் படிப்படியாக அதிகரித்தபடியே வருவதாக தெரிகிறது. வரப்போகும் தேர்தலில், எப்படியும் 10 சதவீத வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுவிடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகிறார்கள்.. இதையெல்லாம் தமிழக கட்சிகள் கவனித்தபடியே உள்ளன.. அதனால்தான், சீமானை கூட்டணிக்குள் இழுக்க அதிமுக முயற்சிப்பதாகவும் ஒரு பேச்சு உள்ளது.

வாக்கு சதவீதம்: ஆனால், இந்த முறையும், நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் தனித்து போட்டியிடும் முடிவில் உள்ளதாகவே தெரிகிறது.. எனினும் அக்கட்சி தொண்டர்கள் என்ன நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெரியவில்லை.. காரணம், இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலுமே தனித்து போட்டியிட்டாலும்கூட, வாக்கு சதவீதம் உயர்கிறதே தவிர, ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை..

இப்படி 10 வருடமாகவே கட்சி நிர்வாகிகள் சோர்வடைந்துவிட்டதால், கூட்டணி தேவையென்று விரும்புவதாகவும் கடந்த தேர்தலின்போதே தகவல்கள் கசிந்தன. ஆனால், சீமான் இதற்கு பிடிகொடுக்காமல் மறுத்துவிட்டதாக சொன்னார்கள். எனவே, இந்த முறையும் கூட்டணி எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடம் உள்ளதாக தெரிகிறது.

அதிருப்திகள்: இதற்கு இன்னொரு காரணம், திமுக அதிருப்தி ஓட்டுக்கள் ஒருபக்கம் இருந்தாலும், பாஜகவின் எதிர்ப்பு ஓட்டுக்களையே நாம் தமிழர் கட்சி பெற்று வருகிறது. இந்த முறையும் அப்படி நடந்துவிடக்கூடாது என்பதற்காக, நாம் தமிழர் கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக முயற்சிப்பதாக சொல்கிறார்கள்.

கூட்டணியிலிருந்து பாஜகவை கழட்டிவிட்டதுமே, அதிமுகவின் முடிவை சீமான் வரவேற்றிருந்தார்.. அந்தவகையில், அதிமுகவுடன் இணக்கமான போக்கும் சீமானுக்கு இருப்பதாகவே தெரிகிறது.

சீமான் கட்சி: அதுமட்டுமல்லாமல் சிறுபான்மையினர் ஓட்டுக்களையே, எடப்பாடியும், சீமானும் குறி வைத்திருப்பதால், கூட்டணி அமைத்தால் சரியாக இருக்கும் என்று அதிமுக கணக்கு போடுகிறது. இதில், கூட்டணி வேண்டும் சிலரும், கூட்டணி வேண்டாம் என்று சிலரும், நாம் தமிழர் கட்சிக்குள்ளேயே இருவேறு மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளார்களாம். எனவே, சீமான் என்ன செய்ய போகிறார்? சீமானின் தம்பிகள் என்ன முடிவெடுக்க போகிறார்கள்? தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+