ஸ்ஸ்ஸ்..ஜென்மம் ஜென்மமாய் பின்னாலயே வந்து, பாம்பு பழிவாங்குதா? அதென்ன தலையில மாணிக்க கல்? இதை படிங்க
சென்னை: பாம்புகள் ஆபத்தானவையா? பாம்புகள் பழிவாங்க கூடியவையா? அதுவும், எத்தனை வருடங்கள் கழிந்தாலும், ஜென்மம் விட்டு ஜென்மம், குறிப்பிட்ட நபரை அடையாளம் கண்டுபிடித்து, பின்னாடியே வந்து கொலை செய்யக்கூடியவையா?
உலக அளவில் எடுத்துக் கொண்டால், ஊர்வன வகையை சேர்ந்த பாம்பினங்கள் 3000 வகையாக இருக்கின்றனவாம்.. நம் இந்தியாவில் மட்டும் 280 வகையான பாம்பினங்களும் இருப்பதாக கணக்குகள் கூறுகின்றன..
விஷப்பாம்புகள்: இதில், விஷம் உள்ள பாம்புகள், விஷம் இல்லாத பாம்புகள் என 2 வகைகள் உண்டு.. கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, கட்டு விரியன் மற்றும் சுருட்டைவிரியன் போன்றவை விஷமுள்ள பாம்புகள் ஆகும்.. இவைகள் மனித குடியிருப்பு பகுதிகளில் மனிதர்களோடு வாழக்கூடியது..

பச்சை பாம்பு, சாரைபாம்பு, மலைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, ஓநாய்பாம்பு போன்றவை விஷத்தன்மை இல்லாத பாம்புகளாகும்... இதற்கு நடுவில் குறைந்த அளவு விஷத்தன்மை உடைய பாம்புகளான, பச்சை பாம்பு, பூனை பாம்பு போன்றவைகளும் உள்ளன.. ஆனால், பாம்பு என்ற பொதுவான பெயரை கேட்டதுமே மக்கள் அஞ்சி நடுங்குகின்றனர்.. இதற்கு காரணம், பாம்புகளை பற்றி சரியான முறையில் தெரிந்து கொள்ளாததுதான்.
பச்சை பாம்பு - நல்ல பாம்பு இதைதவிர, பாம்புகள் குறித்த தவறான தகவல்களும், பாம்பு தொடர்பான வதந்திகள் அதிகம் உண்டு.. உதாரணமாக, பாம்புகள் பழி வாங்கும் என்று ஆதிகாலம் முதலே சொல்லப்பட்டு வருகிறது.. அதேபோல, மகுடி வாசித்தால் மயங்கும் என்பார்கள்.. அதேபோல, சாரபாம்பும் நல்லபாம்பும் இணை சேரும் என்பார்கள்..
மூடநம்பிக்கைகள் இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையும், தவறான தகவல்களையும் தகர்க்கவே, வருடத்துக்கு ஒருமுறை சர்வதேச உலக பாம்புகள் தினத்தன்று விழிப்புணர்கள் நடத்தப்படுகின்றன.. பாம்பு இனங்களை பாதுகாக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு வருடமும் ஜூலை 16 உலக பாம்புகள் தினம் கொண்டாடப்படுகிறது. நம் தமிழகத்திலும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
குற்றாலம்: இப்போதுகூட, குற்றாலத்தில் உலக பாம்புகள் தின விழா நடத்தப்பட்டுள்ளது.. நெல்லை வன உயிரின சரணாலயம், தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி இணைந்து உலக பாம்புகள் தின விழிப்புணர்வு நிகழ்வை நடத்தியது. மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறுவர் பூங்கா பகுதியில் இருந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் இலஞ்சி இராமசுவாமி பிள்ளை மேல்நிலைப்பள்ளி , செங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி, கடையநல்லூர் விஸ்டம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, உலகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு வனவளம், நீர் வளம், நில வளம் காப்போம், சூழல் காப்போம் சுகம்பெறுவோம், பல்லுயிர் பெருக்குவோம், வன வேட்டையை தடுப்போம்., பாம்புகளை பாதுகாப்போம் என்ற கோஷங்களுடன் நகரின் முக்கிய வீதி வழியாக பராசக்தி மகளிர் கல்லூரி அரங்கை அடைந்தனர்.
விழிப்புணர்வு: அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் புளியங்குடி வனச்சரக அலுவலர் சிக்கந்தர் பாட்ஷா, சிவகிரி வனச்சரக அலுவலர் மௌனிகா ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.
இப்படி வருடா வருடம், பாம்புகள் தினத்தன்று, பாம்பினங்களை பாதுகாக்கும் நோக்குடன், தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ஊர்வன பாதுகாவலர் சேக் உசேன் என்பவர் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தி வருகிறார்.. மேற்குதொடர்ச்சி மலைகள் அதிகம் உள்ள பகுதி இங்கு புலி கரடி யானை மான் பறவைகள் ஊர்வன போன்ற பல உயினங்களும் தாவரங்களும் உள்ள இடம் என்பதால், இங்கு பாம்புகள் நடமாட்டமும் அதிகமாகும்..
பாம்புகள் அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் மனித குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் நுழைந்துவிட்டால், உடனடியாக அம்மாவட்ட மக்கள் போனை போட்டு அழைப்பது, பாம்புகளின் தோழன் சேக் உசேனைதான்.. கடந்த 9 மட்டும் 6000 க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளார் உசேன். ஆசியாவில் அரிதாக காணப்பட கூடிய பாம்பினங்களில் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யகூடிய ராஜநாகங்கள், மேற்குதொடர்ச்சி மலையில் அதிகமாக வாழ்ந்து வரும் நிலையில், 20 க்கும் மேற்பட்ட ராஜநாகங்கள் மீட்டுள்ளாராம் உசேன்..

பாம்புக்கடி: பாம்புக்கடி குறித்து உசேன் சொல்லும்போது, "பாம்புகடி என்பது ஒரு விபத்து தானே தவிர, அது விதி இல்லை. இந்தியாவில் வருடத்திற்கு 20000 க்கும் மேற்பட்டோர் பாம்புகடியினால் இறக்கின்றனர்... அதில் 10000 க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர்.. இதற்கு முக்கிய காரணம் பாம்புகள் பற்றிய சரியான விழிப்புணர்வில்லை என்பதுதான். இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது.. விவசாய பகுதிகளில் முக்கிய பங்களிக்கிறது பாம்பினங்கள்.
எலிகள்: வருடத்திற்கு 3000 க்கும் மேற்பட்ட எலிகளை உட்கொள்கிறது பாம்புகள்.. அதனால் பாம்புகளை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்கிறார் ஷேக் உசேன்... அத்துடன், பாம்புகள் பற்றிய தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாம்புகள் தேவை: வீடுகளிலோ, கட்டிடங்களிலோ பாம்புகள் வந்தால், அதை பிடிப்பதாக கூறி, கூட்டம் கூடி விடும். பாம்புக்கும் தொந்தரவு கொடுக்க தொடங்கி விடுவார்கள். அதனால்தான் தனக்கு ஆபத்து என்று கருதி பாம்பும், எதிர்க்க தொடங்கி விடுகிறது. நம்மால் அதற்கு எதுவும் நேராது என்பதை அது உணர்ந்து கொண்டால், அது நம்மை ஒன்றுமே செய்யாது என்பதே நிஜம்..!!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications