"மண் குதிரை".. போச்சுடா.. அவருமா.. எடப்பாடி விடமாட்டார் போலயே.. டபுள் அஸ்திரங்கள்.. திகுதிகு திருச்சி
எடப்பாடி பழனிசாமி தரப்பு, மூத்த தலைவர் வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிக்கிறதாம்
சென்னை: ஓபிஎஸ் பழனிசாமி தரப்பு, எடப்பாடிக்கு பதிலடிகளை தருவதற்காக நிறைய பிளான்களை கையில் எடுத்துள்ளது.. அதுபோல, எடப்பாடி டீமும், 2 வியூகங்களை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகிறதாம்.
பாஜக - அதிமுக கூட்டணி விவகாரம் தொடரும் என்று இரு தரப்பு தலைவர்களும் சொல்லி உள்ள நிலையில், பூசல்கள் இன்னும் குறைந்தபாடில்லை.
இரு கட்சிகளின் தொண்டர்களுமே அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தியானது வரப்போகும் எம்பி தேர்தலையும் அசைக்கும் என்றும் சொல்கிறார்கள்.

சாயும் கூடாரம்
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்த 2 அதிரடிகளை தற்சமயம் கையில் எடுத்துள்ளாராம்.. அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் ஓரளவு தெம்பினை தந்த நிலையில், டெபாசிட்டையும் தக்க வைத்துள்ள நிலையில், மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ள போகிறாராம் எடப்பாடி பழனிசாமி.. கடந்த வாரம் இதே போல ஒரு அறிவிப்பைதான், ஓபிஎஸ் தரப்பில் உள்ள மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்திருந்தார். பாஜகவிடம் அளவுக்கு மீறி பணிந்து சென்று, கடைசியில் நிர்க்கதியாய் நிற்க வைத்துவிட்ட அதிர்ச்சியும், அதிருப்தியும் ஓபிஎஸ் கூடாரத்தை கவ்வியுள்ளதாம். அதனால்தான் இனியும் பாஜக பக்கம் சாயாமல், மக்களிடம் நெருங்கியிருக்கவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது..

பண்ருட்டியார்
எனவேதான், பண்ருட்டியார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மக்களிடம் செல்ல போகிறோம். மக்கள் மன்றத்தை நாட போகிறோம்" என்று கூறியிருந்தார். அதன்படியே நேற்றுமுன்தினம் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்தி, எடப்பாடி + திமுக தரப்பை கவனிக்கும்படி செய்திருந்தனர்.. எனவே, எடப்பாடியும் தன்னுடைய சுற்றுப்பயணத்தின்போது தன்னுடைய செல்வாக்கை மேலும் அதிகப்படுத்தவும் திட்டமிட்டு வருகிறாராம். இந்த சுற்றுப்பயணத்தில் திமுக + ஓபிஎஸ் + அமமுக என 3 தரப்பையுமே சரமாரியாக விமர்சிக்கவும் தயாராகிவருகிறாராம்.

அமமுக செக்
இரண்டாவதாக அதிருப்தியாளர்களை அதிமுகவுக்குள் இழுக்கும் பணியை அதிகப்படுத்தும்படி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளராம்.. ஏற்கனவே பாஜக அதிருப்தியாளர்களை அதிமுகவுக்குள் அரவணைத்து கொண்டுள்ள நிலையில், அமமுகவுக்கும் தூண்டிலை போட்டு தன் பக்கம் இழுத்து வருகிறார்.. அதன்படிதான், அமமுகவின் சீனியர்கள் திருப்பத்தூர் உமா தேவன், இளைஞரணிச் செயலாளர் கோமல் அன்பரசன் போன்ற நிர்வாகிகள் தற்சமயம் அதிமுகவுக்குள் அடியெடுத்து வைத்துள்ளனர்.. எடப்பாடி பழனிசாமியையும் நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துவிட்டனர். இதற்கு அடுத்தபடியாக ஓபிஎஸ் டீமில் உள்ளவர்களையும் தன் பக்கம் திருப்ப முயன்றும் வருகிறாராம்.

வைத்திலிங்கம்
அந்தவகையில், ஓபிஎஸ் தரப்பில், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன், பண்ருட்டி ராமச்சந்திரன், மருது அழகுராஜ் உள்ளிட்ட சீனியர்கள் மட்டுமே உள்ளனர்.. இதில், வைத்திலிங்கம் மீதும் சில மாதங்களாகவே கவனம் குவிந்து வருகிறது.. ஆனால், ஓபிஎஸ்ஸிடம் தொடர்ந்து விசுவாசம் காட்டி வரும் வைத்திலிங்கம், எடப்பாடியின் வலையில் சிக்கவில்லை என்கிறார்கள்.. எனினும், எடப்பாடி பழனிசாமிக்கும், வைத்திலிங்கத்துக்கும் எந்தவிதமான நேரடி மோதல் இதுவரை கிடையாது. கொங்கு மண்டல மாஜிக்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்ததால்தான், எடப்பாடி மீது வருத்தமாக இருக்கிறாராம் வைத்திலிங்கம்.. இது ஒரு காரணம்தான், ஓபிஎஸஸிடம் இப்போதுவரை அவரை நெருங்கவும் வைத்து வந்தது.

டபுள் டீம்
ஆனால், சமீபகாலமாகவே, எடப்பாடி மீது கொங்கு மண்டல மாஜிக்கள் முன்புபோல் நெருங்காமல் உள்ளதாக தெரிகிறது. மாறாக, பாஜக பக்கம் சாய்ந்தும் வருவதால், இது எடப்பாடியை கடுப்பாக்கியும் வருகிறதாம்.. எடப்பாடி டீமுக்குள்ளேயே, பாஜக ஆதரவு டீம், பாஜக எதிர்ப்பு டீம் என 2 வகையான டீம்கள் உள்ள நிலையில், கொங்கு மண்டல மாஜிக்கள் பாஜக ஆதரவாளர்களாகவே உள்ளனர். அதனால்தான், வைத்திலிங்கம் பக்கம் எடப்பாடியின் கவனம் திரும்பியுள்ளதாக சொல்கிறார்கள்... ஓபிஎஸ்ஸை இனியும் நம்பி எதிர்காலத்தை தொலைக்க வேண்டாம், அதனால், நல்ல முடிவு எடுங்கள் என்று வைத்திலிங்கத்திடமும் எடப்பாடி டீம் தூபம் போட்டு வருகிறதாம்.

டெல்டா மலை
இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.. கொங்குவில் பலத்தை கூட்டியுள்ள எடப்பாடியால், தென்மண்டலங்களில் இதுவரை தன் செல்வாக்கை நிரூபிக்க முடியவில்லை.. முக்கியமாக முக்குலத்தோர் வாக்குவங்கியை எடப்பாடியால் பெற முடியாத சூழலில், ஆர்பி உதயகுமார், ராஜன் செல்லப்பா, செல்லூர் ராஜு போன்றோரையும் நம்பி உள்ளதால், ஒட்டுமொத்த சமுதாய வாக்குகளையும் எடப்பாடியால் பெற்றுவிட முடியுமா? என்பதும் சவாலாக உள்ளது.. அதனால், டெல்டாவில் அதிமுகவின் வாக்கு வங்கி அதிகரிக்க வேண்டும் என்பதால், வைத்திலிங்கத்தின் ஆதரவும் எடப்பாடிக்கு தேவையானதாக இருக்கிறதாம்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications