பிளஸ் 2வில் 120- 170 கட் ஆஃப் மட்டுமே வருமா? இந்த மார்க்கை வைத்தும் டாப் காலேஜில் சேரலாமே!
சென்னை: பிளஸ் 2 தேர்வில் கட் ஆப் 120 முதல் 170 வரை பெறும் மாணவர்களும் டாப் கல்லூரிகளில் சேரலாம். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
பிளஸ் 2 படித்தவுடன் மாணவர்களுக்கு தாங்கள் விரும்பும் படிப்பை விரும்பும் கல்லூரியில் படிக்க நினைப்பார்கள். என்னதான் நன்றாக படித்துக் கொண்டு பிளஸ் 2 தேர்வு எழுத சென்றாலும், அங்கு சில நேரங்களில் கேள்வித்தாள் கடினமாக இருக்கக் கூடும். இதனால் முக்கிய பாடப்பிரிவுகளான கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் கட் ஆஃப் குறையும்.

பிறகு அவர்கள் விரும்பும் top most college-களில் சேர இயலாமல் போகும். இல்லாவிட்டால் அவர்கள் கேட்கும் குரூப்பை தர மறுப்பார்கள். மேனேஜ்மென்ட் கோட்டாவில் குறிப்பிட்ட பணம் செலுத்தி முன்பதிவு செய்து வைக்கலாம். ஆனால் மேனேஜ்மென்ட் கோட்டாவில் புக் செய்ய பணம் பலருக்கு பிரச்சினையாக இருக்கும்.
தமிழக அரசின் கட் ஆஃப்
இதனால் தமிழக அரசின் கட் ஆஃப் மூலம் செல்லவே நிறைய மாணவர்கள் விரும்புகிறார்கள். அந்த கட் ஆஃப்பும் அவரவரின் ஜாதி பிரிவின் கீழ் மாறுபடும். அந்த வகையில் சில பிரிவினருக்கு 195-க்கு இருந்தால் மட்டுமே டாப் கல்லூரிகளில் சீட் கிடைக்கும்.
டாப் கல்லூரிகள்
அடுத்த பிரிவினருக்கு 187 -க்கு மேல் கட் ஆஃப், அதற்கு அடுத்த பிரிவினருக்கு 185 என குறைந்து கொண்டே இருக்கும். ஒரு வேளை எந்த பிரிவாக இருந்தாலும் 120 முதல் 170 வரை கட் ஆப் பெற்றாலும் சீட் கிடைக்கும். ஆனால் டாப் கல்லூரிகளில் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்!
கல்லூரிகளில் படித்தல்
ஆனால் அது போல் கிடைக்கும் என career guidance தினேஷ் பிரபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தலைச்சிறந்த கல்லூரிகளில் படிக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.
சீட் வாங்குவது எப்படி
capitation fees செலுத்தி எந்த கல்லூரிகளில் சேரலாம் என்பது குறித்தும் capitation fees செலுத்தாமல் டாப் கல்லூரிகளில் எப்படி சீட் வாங்குவது என்பதையும் பார்க்கலாம். மேனேஜ்மென்ட் கோட்டா இல்லாமல் 120 - 170 கட் ஆப் பெற்றவர்கள் அரசு கல்லூரிகளில் சேருவதற்கான வழிகள் என்ன?
10 பொறியியல் பல்கலைக்கழகங்கள்
ஐஐடி, என்ஐடி, ஐஐஐடி, சிஎஃப்டிஐ என தமிழகத்தில் 10-க்கும் குறைவான கல்லூரிகள் உள்ளன. இங்கு சேர ஜேஇஇ மெயின்ஸ் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலே போதுமானது. அது போல் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட Deemed university உள்ளன. இங்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு அட்மிஷன் கிடைக்கின்றன.
420 கல்லூரிகள்
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் தனியார் மற்றும் அரசு சார்பில் 420 கல்லூரிகள் உள்ளன. விஐடி, அம்ரிதா, எஸ்ஆர்எம், பிட்ஸ், மணிபால், எல்பியூ, சாஸ்த்ரா, கேஎல் யூனிவர்சிட்டி, பிஇஎஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் வைக்கப்படும் நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் இந்த கல்லூரிகளில் அட்மிஷன் கிடைக்கும்.
எவ்வளவு கட்டணம்
அதாவது 120- 170 கட் ஆஃப் வாங்குவோர் மேனேஜ்மென்ட் கோட்டாவில் பணம் கட்டி செல்லலாம். விஐடியில் நுழைவுத் தேர்வு எழுதி அதில் 1 லட்சம் ரேங்கிற்குள் வந்தால் மெக்கானிக்கல், சிவில் உள்ளிட்ட கோர்ஸ்கள் கிடைக்கும். கட்டணம் ஆண்டுக்கு ரூ 1.25 லட்சம் ஆகும்.
அம்ரிதா
அது போல் அம்ரிதா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வை எழுதி, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் நிச்சயம் சீட் கிடைக்கும்.
என்ஜினியரிங் படிப்பு
எந்த நுழைவுத் தேர்வும் எழுதாமல் Donation னும் கட்டாமல் அரசு கவுன்சலிங்கில் சேர வேண்டும் என்றால், கோர்ஸை மாற்றிக் கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் படிப்பை மட்டுமே யோசிக்காமல் பிடெக் ஐடி, சிஎஸ்பிஎஸ், சிஎஸ்இ (AIML), சிஎஸ்இ சைபர் செக்யூரிட்டி உள்ளிட்டவைகள் 120 -170 கட் ஆஃப் எடுப்போருக்கு கிடைக்கும்.
என்னென்ன படிப்புகள்
அது போல் இசிஇ கேட்காமல் அதில் விஎல்எஸ்ஐ டிசைன், ஏசிடி படிக்கலாம். மெக்கானிக்கல் கேட்காமல் மெக்கட்ரானிக்ஸ், ஏரோநாட்டிகல் படிக்கலாம். சிவில் என்ஜினியரிங்கில் environmental engineering, geo statistics, எடுக்கலாம். பயாலஜி படித்தவர்கள் பயோ டெக், பயோ மெடிக்கல் எடுக்கலாம்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications