மதுரையே குலுங்குது.. முதல்முறையா இது நடக்குது.. விஸ்வரூப பாஜக + விசுவாச ஓபிஎஸ்.. தினகரன் குஷியோ குஷி
சென்னை: தமிழக பாஜகவில் கூட்டணி பரபரப்பு காணப்படுகிறது.. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளும், வேகம் எடுத்துள்ளதாக தெரிகிறது.
பாஜக கூட்டணி முறிவுக்கு பிறகு, அதிமுகவில் மிகப்பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.. கூட்டணியும் பெரிதாக அமையவில்லை.. தொடர் தோல்விகள் அடுத்தடுத்து வந்த நிலையில், மெகா கூட்டணியை உருவாக்க வேண்டிய நெருக்கடியும், திமுகவுக்கு எதிரான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு இன்று ஏற்பட்டுள்ளது.

அதேபோல, திமுக, அதிமுகவுக்கு மாற்றான பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கும் ஏற்பட்டுள்ளது. இப்படி இருவித நெருக்கடிகள், இரு கட்சிக்கும் இருந்தாலும், கூட்டணி முடிவு இதுவரை எட்டப்படவில்லை. எனவே பேச்சுவார்த்தைகள் மறைமுகமாக நடப்பதாக தெரிகிறது.
நெருக்கடிகள்: கடந்த 6 மாதத்தில் ஏகப்பட்ட ஆலோசனை கூட்டங்கள் தமிழக பாஜகவில் நடத்தப்பட்டுவிட்டன.. கடந்த 2 வாரத்துக்கு முன்புகூட, தேசிய தலைவர் நட்டா சென்னை வந்திருந்தார்.. அந்த நேரத்திலேயே கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று சொன்னார்கள். ஆனால், சில கட்சிகளில் பேச்சுவார்த்தை இழுபறி, அதிக சீட்டுகள் எதிர்பார்ப்பு, தேர்தல் செலவுக்கு பணம் போன்ற பல்வேறு விஷயங்கள் காரணமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் களப்பணிகளை கடந்த 2வருட காலமாகவே மேற்கொண்டு வந்தபோதும், கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பாஜக நிர்வாகிகளிடம் அதிருப்தியை வெளிப்படுத்திவிட்டு போனாராம் நட்டா.
பல்லடம்: இந்நிலையில்தான், பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக மறுபடியும் தமிழ்நாட்டுக்கு வரப்போகிறார்.. வரும் 27ம் தேதி பல்லடம் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, மாலை 5 மணிக்கு மதுரைக்கு வரப்போகிறார்.. அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, மதுரையில் ஒரு ஸ்டார் ஓட்டலில் இரவு தங்குகிறார்.
அப்போது பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அப்பாயிண்ட்மென்ட கேட்டதற்கு பிரதமர் தரப்பில் ஓகே சொல்லப்பட்டுள்ளதாம்.. இதைக்கேள்விப்பட்டதுமே, டிடிவி தினகரன், தானும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று ஓபிஎஸ்சிடம் சொன்னாராம்.. இந்த விஷயத்தை மேலிடத்துக்கு ஓபிஎஸ் தெரிவிக்க, ஒரே நாளில் இருவரையுமே சந்தித்து பேச பிரதமர் தரப்பு சம்மதித்துள்ளதாக தெரிகிறது.
விரிவான ஆலோசனை: கடந்த 6 மாதமாகவே, இவர்கள் இருவரும் டெல்லி சென்று மேலிட தலைவர்களிடம் ஆலோசனை நடத்தப் போவதாக செய்திகள் கசிந்தவாறே இருந்தது.. ஆனால் அப்படி எதுவுமே நடக்கவ்லலை.
பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதுகூட, ஓபிஎஸ் மட்டுமே சந்தித்து விரிவாக பேசியதாக தெரிகிறது. இப்போது ஓபிஎஸ், தினகரன் இருவருமே ஒன்றாக சேர்ந்து பிரதரை சந்திக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இந்த சந்திப்பின்போது, தேர்தல் குறித்தும், தாங்கள் போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் பிரதமரிடம் இருவருமே எடுத்து சொல்லப்போவதாக தெரிகிறது.
அதுமட்டுமல்ல, கூட்டணி, சீட், தொகுதி விவகாரங்களில் ஓரளவு ஓபிஎஸ்ஸுக்கு ரூட் கிடைத்துள்ளது. அந்தவகையில் தேனியில் தன்னுடைய மகனுக்கு பதிலாக, பாஜக விருப்பப்படி, தானே நேரடியாக களமிறங்க முடிவு செய்துவிட்டார். மற்றொருபுறம் அதிமுகவால் தேனியில் வாக்கு உடைந்துவிடக்கூடாது என்ற கலக்கமும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதனால்தான், எடப்பாடி பழனிசாமி மீது பகீர் குற்றச்சாட்டுகளை பிரதமரிடம் ஓபிஎஸ் சொல்லப்போகிறாராம்.. ஏற்கனவே, அதிமுகவில் தலைக்கு மேல் கத்தி தொங்கி கொண்டிருக்கும்போது, எடப்பாடி பற்றி ஓபிஎஸ் என்னென்ன சொல்ல போறாரா தெரியவில்லை.
முதல் சந்திப்பு: பிரதமருடனான இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம், எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச்செயலாளரான பிறகு, இணைந்து பயணிக்க போவதாக ஓபிஎஸ் - டிடிவி தினகரன் கூட்டாக அறிவித்த பிறகு முதல்முறையாக மோடியை சந்திக்க போகிறார்கள்.
அதுமட்டுமல்ல, தினகரன் தனியாக கட்சி ஆரம்பித்த பிறகு, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது இதுதான் முதல்முறையாகும். அந்தவகையில், இவர்களின் முச்சந்திப்பானது, தமிழக அரசியல் முக்கியத்துவம் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications