அண்ணாமலையை தேடிய அந்த "கண்கள்".. திடீர்னு தோளை தொட்ட பிரதமர்.. அண்ணாந்து பார்க்க வைத்த "தளபதி"? ஓஹோ
சென்னை: பிரதமர் மோடியின் தமிழகம் வருகை, மிகப்பெரிய நம்பிக்கையையும், உத்வேகத்தையும் தமிழக பாஜகவுக்கு தந்து வருகிறது.. என்ன காரணம்?
வழக்கமாக வடமாநிலங்களில் வலுவாக உள்ள தேசிய கட்சிதான் பாஜக.. எனினும், கடந்த 2 வருடங்களில் நடந்த சில தேர்தல்களில், முட்டிமோதி "ஜஸ்ட் பாஸ்" ஆனது.. இதற்கு காரணம், காங்கிரசும், ஆம் ஆத்மியும் பாஜகவை முந்திக்கொண்டு வர துவங்கியிருக்கின்றன.

தனித்து போட்டி: எனினும், பாஜகவின் அசுர வளர்ச்சியை இப்போதைக்கு எட்டிப்பிடிக்க முடியாது. அதனால்தான், தென்மாநிலங்களிலும் எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காய்நகர்த்தி வருகிறது. தற்போது, தமிழகத்தில் தனித்து போட்டி என்ற புதிய முயற்சியை முன்னெடுக்க போகிறது. இதற்கு காரணமே அண்ணாமலை என்று நாம் சொல்லலாம்.
கடந்த 2 வருடமாகவே, மேலிட தலைவர்களை சந்தித்து பேசும்போதெல்லாம் அண்ணாமலை சொன்ன யுக்திகள் பெருத்த கவனத்தை பெற்றிருந்தன. இதுகுறித்து நாம் ஏற்கனவே நிறைய செய்திகளை வெளியிட்டிருந்தோம்.
அண்ணாமலை பாஜக தலைவர்களிடம், "அதிமுகவுடன் நமக்கு கூட்டணி வேண்டாம்.. எம்ஜிஆர்- ஜெயலலிதா காலத்து அதிமுக இப்போது இல்லை. அதிமுக என்ற கட்சி உருவானதும் 30 வருடங்கள் தமிழகத்தை ஆட்சி செய்ததற்கும் முக்கிய காரணமே திமுக எதிர்ப்பு தான்.
திமுக அதிமுக: திமுகவை திமுக தீய சக்தி என்றும், திமுகவினரை பகையாளர்களாக கருதியுமே எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மாறி மாறி அரசியல் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அதிமுகவானது, இன்னொரு திமுகவாக மாறிவிட்டது.. இதனால் திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காது..
மேலும், எம்ஜிஆர்- ஜெயலலிதா இருக்கும்போது அதிமுகவுக்கு ஓட்டு போட்ட ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள், முத்தரையர்கள் , பிராமணர்களின் ஓட்டுகள் இனி அதிமுகவுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது... இதைதவிர, ஓபிஎஸ் + சசிகலா + தினகரன் ஆகியோர் பிரிந்து நிற்பதால் வாக்குகளில் பாதிப்பு ஏற்படும்.. இதை கருத்தில் கொண்டு, தனித்து கூட்டணி என்று நாம் முடிவெடுக்க வேண்டும் என்று மேலிட தலைவர்களிடம் சொன்னாராம் அண்ணாமலை...
தனித்து போட்டி: ஒருவேளை தனித்து போட்டி இல்லாவிட்டால், "ஒருங்கிணைந்த அதிமுக" என்பது தவிர்க்க முடியாதது என்றும் சொன்னாராம். ஆக, இந்த 2 முடிவுகளில் மேலிடம் எதை பரிசீலிக்க போகிறது என்ற ஆர்வம் எகிறியபடியே இருந்தது. ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு இத்தனை மாதங்களும் முயற்சித்துவிட்டு, தற்போது, அண்ணாமலையின் வியூகப்படியே, தனித்து போட்டி என்ற ரிஸ்க்கையும் பாஜக துணிச்சலுடன் எடுக்க போகிறது.
ஆக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை, மேலிட பாஜக தலைவர்களின் நேரடி நம்பிக்கையையும், செல்வாக்கையும் முழுமையாகவே பெற்றுவிட்டார் எனலாம்..
டெல்லி மேலிடம்: கடந்த 2 வருட காலமாகவே, அண்ணாமலையை தலைமை பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என்று, பாஜகவில் சில சீனியர்களே, டெல்லிக்கு புகார்களை வாசித்ததாக செய்திகள் கசிந்திருந்தன. ஆனால், அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை...
அதேபோல, அண்ணாமலை தலைவராக இருக்கும்வரை, கூட்டணி பற்றி பேச்சே வேண்டாம் என்று அதிமுக தரப்பிலும் பலமுறை சொல்லப்பட்டதாம். அதிலும் டெல்லிக்கே சென்று அண்ணாமலை மீது புகார் சொன்னதாம் அதிமுக மேலிடம்.. இதற்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
ஓபிஎஸ் டீம்: ஈரோடு இடைத்தேர்தலின்போது, பாராமுகமாக தங்களை நடத்துகிறார் என்று ஓபிஎஸ் தரப்பிலும் டெல்லி வரை புகார் கொண்டுபோகப்பட்டதாம். இதற்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு நன்மதிப்பை மேலிடத்தில் பெற்றுள்ளார் அண்ணாமலை.
அதுமட்டுமல்ல, "தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நம்முடைய பலம் நமக்கு தெரியவரும்" என்று கடந்த 2வருடமாக சொல்லிவந்த அண்ணாமலையின் ஃபார்முலாவை, டெல்லி தலைவர்கள் அவ்வளவு எளிதில் லேசில் தவிர்த்துவிடாமல், கவனத்தில் கொண்டுவந்தனர். இப்போது, 3வது அணியை பாஜக அமைக்க போகிறதென்றால், அண்ணாமலையின் வியூகம் பரிசீலிக்கப்பட்டுவிட்டதாகவே கருதப்படுகிறது.
முக்கியத்துவம்: இறுதியில், "என் மண் என் மக்கள்" நிறைவு விழாவுக்காக, தமிழகம் வந்திருந்தது, அண்ணாமலைக்கான கூடுதல் முக்கியமாக பார்க்கப்பட்டு வருகிறது.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது, அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என அதிமுக தலைவர்கள், பாஜக தலைவர்களிடம் கோரிக்கை விடுத்த நிலையில், அத்தனையும் இப்போது சுக்குநூறாகி போயிருக்கிறது.
துணிச்சல்: காரணம், தமிழகத்தில் பாஜகவை வளர்க்க அண்ணாமலை தேவை என்பதை பிரதமர் மோடி உணர்ந்திருப்பதாக தெரிகிறது.. அதனால்தான், கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறினாலும் பரவாயில்லை என்ற முடிவையும் துணிந்து எடுத்ததாக சொல்கிறார்கள்.. இதனை தமிழகம் கவனிக்காமல் இல்லை.
மாதப்பூரில் நேற்று நடந்த பொதுக்கூட்டம்தான் இதற்கெல்லாம் இன்னமும் சாட்சியாகி கொண்டிருக்கிறது. அண்ணாமலையின் தோளைத்தட்டிக் கொடுத்ததை, இந்த தமிழகமும் கவனிக்காமல் இல்லை.
மேடையில் மோடி: பொதுவாக, எந்த ஒரு நிகழ்ச்சியை முடித்துவைக்கும்போது, மேடையில் அனைத்து தலைவர்களும் ஒன்றிணைந்து கைகளை கோர்த்து, மேலே உயர்த்தி காட்டுவது வழக்கமாகும். அந்தவகையில், நேற்றைய தினம் நிகழ்ச்சி முடிந்ததுமே, மத்திய அமைச்சர் எல்.முருகன் உட்பட அனைத்து தலைவர்களும் எழுந்து நின்று கைகளை உயர்த்த தயாரானார்கள்.
ஆனால், அந்த நேரத்தில் அண்ணாமலையை காணவில்லை. அதனால், சுற்றுமுற்றும் தேடினார் பிரதமர் மோடி.. "அண்ணாமலை ஜி எங்க இருக்கீங்க, முன்னாடி வாங்க" என்று, பின்பக்கமிருந்த அண்ணாமலையை தன் பக்கத்தில் நிற்கவைத்து, அவரது கைகளை இறுக்கமாக பற்றி மேலே உயர்த்தி காட்டி, நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.. இதனையும் தமிழகம் கவனிக்காமல் இல்லை.
கடின உழைப்பு: "நமது கட்சியின் கடின உழைப்பு களத்தில் தெரிகிறது. தமிழ்நாடே மிகுந்த நம்பிக்கையோடு பாஜகவை எதிர்பார்க்கிறது. பாஜகவால் மட்டுமே அவர்களின் கனவுகளை நனவாக்க முடியும் என்று மக்கள் நம்புகிறார்கள்" என்று அண்ணாமலையை டேக் செய்து, பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டிருக்கும் இந்த ட்வீட்டையும், தமிழகம் கவனிக்காமல் இல்லை.
மொத்தத்தில் தமிழகத்தின் தளபதி அண்ணாமலையே என்பதை பிரதமர் மோடி, சொல்லாமல் சொல்லிவிட்டார் என்று பூரிக்கிறார்கள் தாமரை கட்சியினர்.. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அனைத்தையும் தீர்மானிக்கக்கூடியது தேர்தல் முடிவுகள் மட்டுமே என்பதால், பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications