Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மிஞ்சிட்டாரே" ஸ்டாலின்.. நாளைக்கு அந்த "மேஜர்" அறிவிப்பு வருகிறதா.. தமிழ்நாடு அரசு சர்ப்ரைஸ் தருமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வருகிற ஜுன் 3ம் தேதி, மறைந்த முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால், திமுக அதற்கு தயாராகி வருகிறது.. இந்நிலையில், அதுகுறித்து, பிரத்யேக தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் கோரிக்கை வலுப்பெற்றது. இதைத் தொடர்ந்து, திமுக, பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும், தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் அழுத்தமாக தெரிவித்திருந்தன.

Can tamilnadu Government implement total alcohol ban and What will DMK do on Karunanidhis birthday

ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலை எடுத்து கொண்டால், திமுகவின் தேர்தல் அறிக்கையில், மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்புமே வெளியாகவில்லை.. மது விலக்கு அறிவிப்பை திமுக தவிர்த்திருந்தது, மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

கனிமொழி: கடந்த வருடம், கன்னியாகுமரி மாவட்டத்தில், தனியார் கலை கல்லூரி மாணவிகளுடன் திமுக எம்பி கனிமொழி உரையாடினார். அப்போது, கனிமொழியிடம் நிறைய கேள்விகளை மாணவிகள் எழுப்பினர். அதில், ஒரு மாணவி, "தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா? மது காரணமாக பல குடும்பங்கள் சீர்குலைந்து உள்ளதே.. போலீஸ்காரர்களே மது பழக்கத்திற்கு ஆளாகி வருவது வேதனையாக இருக்கிறது.. தமிழகத்தில் மது விற்பனை ஒரேடியாக நிறுத்தப்படுமா?" என்று கேட்டார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பாராத கனிமொழி, "திமுக தேர்தல் வாக்குறுதியில் மது ஒழிப்பு என்று எதுவுமே சொல்லவில்லை.. அதனால், மதுக்கடைகளை மூடுவது என்பது இயலாத விஷயம்.. அதற்கு பதிலாக, அந்த கடைகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பதிலளித்தார்..

எதிர்க்கட்சிகள்: இப்போது திமுகவின் 2 ஆண்டு ஆட்சி முடிவுற்றநிலையில், மதுபானம் தொடர்பான விமர்சனங்களை எதிர்க்கட்சிகளும் எழுப்பி வருகின்றன..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுகுறித்து சொல்லும்போது, "மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று சொல்லியே ஆட்சிக்கு வந்த திமுக, வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டியிருந்தார்..

பாமக அதிரடி: "புதுச்சேரி மற்றும் தமிழகம் என 2 மாநில திமுகவினரும் கூட்டு சேர்ந்து போலி மதுபானம் விற்கிறார்கள்" என்று அதிமுக தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.. அதனால்தான், சமீபத்தில், திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் சிறப்பு உரிமம் பெற்று மது விருந்து நடத்தலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதுமே மொத்த கட்சிகளுமே கொந்தளித்துவிட்டன.. அரசுக்கு எதிராக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்போவதாக பாமக பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது.

இதையடுத்து, சிறப்பு உரிமம் பெற்று திருமண மண்டபங்களில் மது விருந்து நடத்தலாம் என்ற அறிவிப்பை அரசு உடனடியாக திரும்ப பெறும் சூழலுக்கு ஆளானது..

மரக்காணம்: இப்படிப்பட்ட சூழலில்தான், மரக்காணம் கள்ளச்சாராய உயிர்பலிகள் ஏற்பட்டு, திமுக அரசின் மீதான விமர்சனத்தை அதிகரிக்க செய்தது.. உயிர்பலிகளுக்கு பிறகு, "பூரண மதுவிலக்கு தேவை" என்று வைகோ, திருமாவளவன் உட்பட கூட்டணி கட்சி தலைவர்களே வலியுறுத்த துவங்கிவிட்டனர்.. இதில், திருமாவளவன் ஒருபடிமேலேபோய், "மதுவிலக்கு வேண்டி எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்தினால், அவருடன் இணைந்து போராட தயார்" என்று அதிரடியாக அறிவித்திருந்தார்.

இப்படி நாலாபக்கமிருந்தும், மதுபான விஷயத்தில் அரசுக்கு நெருக்கடிகளும், அதிருப்திகளும் கூடியிருக்கும் சூழலில்தான், இவைகளை களைவதற்காக, திமுக மேலிடம் சில முயற்சிகளை மேற்கொள்ள போவதாக சொன்னார்கள்.

கருணாநிதி பிறந்தநாள்: இதுகுறித்து கடந்த வாரம், நமக்கு பிரத்யேகமாக ஒரு தகவல் கிடைத்தது.. நாளைய தினம், அதாவது ஜுன்-3ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் ஆகும்.. இந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஏதேனும் புதிய அறிவிப்பை அறிவிக்க விரும்புகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.. இது குறித்து, ஓய்வு பெற்ற திமுக ஆதரவு ஐஏஎஸ் அதிகாரிகளிடமும் ஆலோசனை நடத்தி வருகிறார்... அப்போது, மதுவிலக்கை அமல்படுத்தலாம், வரலாற்றிலும் பெண்களிடமும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் என்று ஒரு அதிகாரி சொல்லியிருக்கிறார்..

நிதி நெருக்கடி: அதற்கு முதல்வர் ஸ்டாலின், "நிதி நெருக்கடியில் அரசு இருக்கிறது. அதனை மது வருவாய்தான் ஈடுகட்டி வருகிறது" என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அந்த அதிகாரி, "அரசு கஜானாவுக்கு வருவாய் வருவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. அதனை முழுமையாக முறைப்படுத்தினால் மது வருவாய் அவசியமற்றதாக இருக்கும்" என்றாராம்..

அதுமட்டுமல்ல, எந்தெந்த வகையில், எந்தெந்த துறையின் மூலம் அரசு வருவாயை பெருக்க முடியும் என்ற புள்ளி விபரங்களையும் அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். இது போன்றே மேலும் பல ஆலோசனைகள் முதல்வருக்கு சொல்லப்பட்டிருக்கிறது. இதில், எதனை முதல்வர் அறிவிக்கப் போகிறார் என்பது ரகசியமாக இருக்கிறதாம்..

சர்ப்ரைஸ்: அந்தவகையில் மதுவிலக்கு அமலாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. அப்படி அமலானால், திமுகவுக்கு கூடுதல் நற்பெயரை அந்த அறிவிப்பு பெற்றுத்தந்து விடும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். நாளை ஜூன் 3 என்பதால், முதல்வர் ஸ்டாலின் சர்ப்ரைஸ் தரப்போகிறாரா என்ற ஆர்வத்தில், தமிழ்நாட்டு மக்கள் காத்திருக்கிறார்கள்.. என்னதான் நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+