அரண்டு போன "தலைகள்".. அஸ்திவாரமே ஆடுதே.. ஒரே ராத்திரியில் 2 மீட்டிங்கா?.. எடப்பாடியை மிஞ்சும் லீடர்
சென்னை: ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே சட்டசபையில் நேற்றைய தினம் வெடித்த மோதலின் அதிர்ச்சி இன்னமும் விலகாமல் உள்ளது.. இதையடுத்து, மிக முக்கியமான முடிவை ஓபிஎஸ் தரப்பு எடுக்க போவதாக தெரிகிறது..!!
நேற்றைய தினம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் பேசும்போது, ஆன்லைன் சூதாட்டத் தடைச்சட்ட மசோதாவை தாக்கல் செய்து உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றி தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படியே, கம்யூனிஸ்ட்கள், பாமக, விசிக, காங்கிரஸ் உறுப்பினர்கள் மசோதாவை ஆதரித்து பேசினர்... அதிமுக சார்பில் பேசிய தளவாய் சுந்தரமும், இந்த சட்டத்தை முழுமையாக அதிமுக ஆதரிக்கிறது என்றார்.

கோவிந்தசாமி
அவரை தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், முதல்வர் கொண்டு வந்த தடை சட்டத்தை விவாதமின்றி ஒருமனதாக நிறைவேற்றி இருக்கலாம், ஆனாலும் விவாதம் நடைபெறுகிறது என்றார்.. உடனே, ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் கடும் கண்டனக்குரல் எழுப்பவும், மற்றொருபுறம், அதிமுக உறுப்பினர் கோவிந்தசாமிக்கும் மனோஜ் பாண்டியனுக்கும் வாக்குவாதம் மூண்டது.. 2 பேருமே ஒருவரை ஒருவர் அடிக்க பாய்ந்தனர்.. கோவிந்தசாமியை, எஸ்பி வேலுமணி கையை நீட்டி அமைதி காக்க சொன்னார்... மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது...

முஷ்டி வேஷ்டி
எடப்பாடி பழனிசாமி + ஓபிஎஸ் 2 பேருமே அருகருகே அமர்ந்திருந்த நிலையில் முதன்முறையாக நேற்று நேரடியாகவே பேரவையில் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தது பலராலும் உற்றுநோக்கப்பட்டது.. இந்த ரகளையையொட்டி நேற்று எடப்பாடியும் தனது அணியினருடன் ஆலோசித்திருக்கிறார்கள்.. குறிப்பாக, கே.பி.முனுசாமி, வேலுமணி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்களிடம் எடப்பாடி ஆலோசித்துள்ளார்.. ஓபிஎஸ்ஸை பேச அனுமதித்து, அதன்மூலம் மோதலை உண்டுபண்ணி, நம்மை சட்டசபையை விட்டுவெளியேற்ற திமுக நினைக்கிறது.. அதனால், யாருமே உணர்ச்சிவசப்படக்கூடாது என்று தன்னுடைய நிர்வாகிகளுக்கு சைலண்ட் உத்தரவை பிறப்பித்துள்ளாராம்.

மனோஜ் பாண்டியன்
எனினும், நேற்றைய தினம் நடந்த ரகளை, மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. ஒற்றை தலைமை விவகாரம் சட்டசபையிலும் எதிரொலிக்க துவங்கிவிட்டதே என்று மற்ற அரசியல் கட்சியினர் அதிர்ந்து போயுள்ளனர்.. காரணம், எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்களுக்கும் ஓபிஎஸ் தரப்பு எம்எல்ஏக்களுக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், எடப்பாடி அணியை சேர்ந்த மூத்த தலைவர் முனுசாமிதான் அதை தடுத்து நிறுத்தியிருக்கிறார்.. முனுசாமி மட்டும் தடுக்காமல் இருந்திருந்தால், ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியனுக்கும் வைத்தியலிங்கத்துக்கும் அடி விழுந்திருக்குமாம்.. அந்தளவுக்கு ஆக்ரோஷமாக வார்த்தைகளை வீசியிருந்தனர். முனுசாமி அதுபோல் நடக்காமல் தடுத்ததால் அசம்பாவிதம் நடக்கவில்லை.

முஷ்டி - வேஷ்டி
ஆனாலும், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தரப்பில் இதுகுறித்து ஆலோசனை நடத்தியநிலையில், ஓபிஎஸ் தரப்பும் வேறு வகையான ஆலோசனையை இதுசம்பந்தமாக நடத்தியிருக்கிறது. தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் நேற்றிரவு ஆலோசித்தார் ஓபிஎஸ். அப்போது, தங்களை அடிக்கப்பாய்ந்த அவர்கள் மீது (எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்கள் மீது ) சபாநாயகரிடம் புகார் கொடுக்கலாம். அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என புகார் கொடுக்கலாம்" என்று மனோஜ் பாண்டியன் சொன்னாராம்..

விஜயகாந்த்
ஆனால், அதனை ஓபிஎஸ் ஏற்கவில்லையாம்.. "புகார் என்று கொடுக்க போனால், முதலில் அவர்கள் தான் நம் மீது கொடுக்க முடியும். ஏன்னா... நீங்க (மனோஜ்) வேட்டியை மடித்துக் கட்டி ரகளை செய்தது தான் பெரியளவில் இருக்கிறது. நான் தடுக்கா விட்டால் நீங்கள் அவர்கள் மீது கையை வைத்திருப்பீர்கள். அதனால், வேட்டியை மடித்துக் கட்டியது தான் பிரச்சனைக்குறியதாகும். அம்மா ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி, கை நீட்டி பேசியதற்காக என்ன நடந்ததுன்னு எல்லோருக்கும் தெரியும். அதனால புகாரெல்லாம் வேண்டாம்" என்றாராம் ஓபிஎஸ்... அதேசமயம், பேரவை நிகழ்வுகளை கவனித்த பண்ருட்டி ராமச்சந்திரனை ஓபிஎஸ் தொடர்பு கொண்டு, புகார் கொடுக்கலாமா? அதற்கு வழியுள்ளதா? என்பது குறித்து விவாதித்திருக்கிறாராம்..!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications