சென்னையில் OTA நிலத்தைக் கைப்பற்றி பாரலல் ரன்வே அமைக்க முடியுமா? உண்மை என்ன?
சென்னை: சென்னை விமான நிலையம் சிறியதாக உள்ளது.இங்கு இரண்டு ரன்வேக்கள் இருந்தபோதிலும், ஒரே நேரத்தில் இரண்டு விமானங்களை இயங்கும் வகையில் இல்லை.. இதனால் தான் பரந்தூர் விமான நிலையத்தை தேர்வு செய்தார்கள். அந்த விமான நிலையத்தை முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு ரத்து செய்துவிட்டது. இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகடாமியான ஆபிசர்ஸ் பயிற்சி அகடாமியில் அதாவது ஓடிஏ நிலத்தில பாரலல் ரன்வே அமைக்கலாமே என்று கேட்கிறார்கள். அப்படி அமைக்கவே முடியாது என நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவினை அப்படியே பார்ப்போம். OTA நிலத்தில் சென்னை விமான நிலையத்தால் ஒரு இணை ஓடுபாதையை அமைக்க முடியுமா?

அதிகாரிகள் பயிற்சி அகாடமி (OTA) நிலத்தைக் கையகப்படுத்துவது, சென்னை விமான நிலையத்தை பெரிய அளவில் மேம்படுத்துவற்கு வழிவகுக்கும் என்று பலர் கருதுகின்றனர், குறிப்பாக, சென்னை விமான நிலையத்திற்கு ஒரு இணை ஓடுபாதை அமைத்துவிடலாம் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் ICAO தரநிலைகளைப் பார்க்கும்போது, தொழில்நுட்ப ரீதியான உண்மை நிலை என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
மற்றொரு ஓடுபாதை ஏன் சாத்தியமே இல்லை
பிரதான ஓடுபாதைக்கு இணையாக (07/25): இணை செயல்பாடுகளுக்கு 760 மீ முதல் 1,035 மீ வரையிலான மையக்கோட்டு இடைவெளி தேவைப்படுகிறது-அந்த நிலப்பரப்பில் தேவையான வடக்கு-தெற்கு ஆழம் கிடையாது.
தடை மேற்பரப்புகள் (Obstacle Surfaces - OLS): கிழக்கிலிருந்து விமானங்கள் இறங்குவதற்கான பாதை நேரடியாக பரங்கிமலை மற்றும் அடர்ந்த நகர்ப்புறக் குடியிருப்புப் பகுதிகளை மோதும் வகையில் அமையும்.
இரண்டாவது ஓடுதளத்திற்கு இணையாக (12/30): இங்குள்ள நிலத்தின் நீளம் மிகவும் குறைவு என்பதால், ஒரு 'Code-C' வகை ஓடுதளம் மற்றும் அதன் பாதுகாப்பு மண்டலங்களை (RESA) அமைப்பது மிகவும் கடினம். இதனால் சிறிய அளவிலான 3-வது ஓடுதளம் அமைப்பது கூட நடைமுறையில் சாத்தியமில்லை.
OTA நிலம் உண்மையில் எதற்கு உதவும்:
ரிமோர்ட் பார்க்கிங் பேய்ஸ்: பிரதான முனைய வாயில்களில் உள்ள கூட்ட நெரிசலைக் குறைக்கவும், ஏப்ரான் நெரிசலைச் சரிசெய்யவும், இரவு நேர விமான நிறுத்தங்களுக்குத் தேவையான இட வசதியை ஏற்படுத்தவும் ரிமோர்ட் பார்க்கிங் பேய்ஸ் அமைக்க உதவும். அதேநேரம் மேற்குப் பகுதியில் இணை ஓடுதளம் அமைப்பதற்குத் தேவையான கூடுதல் நிலத்தைப் பெற, இந்த நிலத்தைப் பரிமாற்றம் செய்யப் பயன்படுத்த முடியும்.
மீனம்பாக்கத்தில் உண்மையான இணை ஓடுதளம் அதாவது பாரலல் ரன்வே அமைப்பது புவியியல் ரீதியாகச் சாத்தியமே கிடையாது. இதனால்தான் பரந்தூரில் புதிய பசுமைச் சாதாரண விமான நிலையத் திட்டம் அவசியமாகிறது. ஆனால், மீனம்பாக்கத்தின் தற்போதைய ஒற்றை ஓடுதளத்தை முழுத்திறனுடன் பயன்படுத்த OTA நிலம் மிகவும் மதிப்புமிக்கது ஆகும்.
Can Chennai Airport Build a Parallel Runway on OTA Land? ✈️
— AayudhamSeivom (@asvom_hub) September 3, 2026
Many assume acquiring the Officers Training Academy (OTA) land would unlock a massive upgrade—specifically, a parallel runway for Chennai Airport (MAA).
Looking at ICAO standards, here is the technical reality:
❌… pic.twitter.com/sm0kDTAu3M
அதேநேரம் OTA என்பது வேறு இடத்திற்கு மாற்றக்கூடாத ஒரு புகழ்பெற்ற ராணுவப் பயிற்சி மையமாகும். அதன் வரலாற்றுப் பெருமையைத் தாண்டி, இந்த சென்னை மாநகரம் முழுவதும் சிமெண்ட் கட்டிடங்களாக மாறியுள்ள சூழலில், இந்த வளாகம் ஒரு முக்கியமான "பசுமைப் நுரையீரல்" போலவும் நகரைக் குளிர்விக்கும் இடமாகவும் திகழ்கிறது. இந்த இடத்தை மாற்ற வேண்டுமா? உங்களின் கருத்துகள் என்ன? கமெண்டில் கூறுங்கள்" இவ்வாறு நெட்டிசன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications
