வாய் திறந்த வாசன்.. வந்து விழுந்த "அந்த" வார்த்தை.. அரண்டு போன அதிமுக.. ஆடிப்போன பாஜக.. அவ்ளோதானா?
சென்னை: பாஜகவை மீண்டும் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள அதிமுகவில் வாய்ப்பே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொல்லிவிட்ட நிலையில், மிகப்பெரிய மாறுதல்கள் கூட்டணிக்குள் நடக்க உள்ளதாக தெரிகிறது.
தமிழக பாஜகவை பொறுத்தவரை, இதுவரை அதிமுகவுடன் சமசரம் என்ற பேச்சை எடுக்கவில்லை.. எடப்பாடி பழனிசாமியையும் சமாதானம் செய்யும் முயற்சியிலும் இறங்கவில்லை.. ஆனால், மேலிட பாஜகவை, அதிமுக தரப்பு இதுவரை பகைத்து கொள்ளாமல் இருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டி உள்ளது.

மற்றொருபுறம், முக்கிய பிரமுகர்களை சந்திப்பது, கூட்டணியை வலுப்படுத்துவது போன்ற அஜெண்டாவையும், தமிழக பாஜக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, அமமுக, ஓபிஎஸ், சசிகலா 3 பேருமே பாஜகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில், பாமக, தேமுதிகவை கண்டிப்பாக கூட்டணியில் பாஜக இணைத்து கொள்ளக்கூடும் என்கிறார்கள்..
தமாகா வாசன்: தமாகா வாசன், ஜான்பாண்டியன், ஏசி சண்முகம், பாரிவேந்தர், டாக்டர் கிருஷ்ணசாமி, போன்றோரெல்லாம் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாக தொடர்ந்து தகவல்கள் கசிந்தபடியே உள்ளன.. மற்றொருபக்கம் மேலிட பாஜகவை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இந்த தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்ததுமே, வாசன் ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், "பாஜக - அதிமுக கூட்டணி மக்களின் நம்பிக்கையை பெற்று, வெற்றி பெறக்கூடிய நல்ல வாய்ப்பு தேர்தலிலேயே இருக்கிறது.. கூட்டணியில் கருத்து வேறுபாடு என்பது புதிதல்ல.. "இந்தியா" கூட்டணியை, முழுமையான கூட்டணி என்று சொல்ல முடியுமா? பஞ்சாப், டெல்லியில், காங்கிரஸ் ஒத்த கருத்துடன் இருக்கிறதா?
பெருத்த நம்பிக்கை: சிபிஎம் ஏன் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை? அதுபோலதான் பாஜகவும், அதிமுகவும்.. விரைவில் கருத்து வேறுபாடு களைந்து ஒன்றிணைவார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்ல, சில நாட்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியும், தமாகா தலைவர் ஜிகே வாசனும் கோவை விமான நிலையத்தில், எதிர்பாராமல் சந்தித்து கொண்டார்களாம்.
அமைதி எடப்பாடி: கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் இவர்கள் பேசியதாக தெரிகிறது. ,,இதில் பெருமளவு ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தது வாசன் தானாம்.. கூட்டணி பிரிவு நமக்கு நல்லதல்ல, திமுக எதிர்ப்பு அணிகள் நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும்... அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் இப்படி எல்லாருமே ஒரே அணியாக நின்றால் எளிதில் வெற்றி பெற முடியும். இந்த வெற்றிதான், வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக இருக்கும் என்றெல்லாம் வாசன் சொன்னாராம்.
ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் பெரிய அளவில் எந்த ரியாக்ஷனும் காட்டப்படவில்லையாம்.. அந்த அளவுக்கு அண்ணாமலையின் விமர்சனமும், மேலிடத்தின் பாராமுகமும் அதிமுகவுக்கு மனவருத்தத்தையும் அதிருப்தியையும் தந்ததாக, எடப்பாடியின் பேச்சுக்கள் வாசனிடம் இருந்ததாம்.
தை மாதம்: இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார் ஜிகே வாசன்.. "மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, நிர்வாகிகளை சந்தித்துப் பேசி, கட்சியை பலப்படுத்தி வருகிறேன்... தை மாதம் பிறந்த பிறகு,கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துகளைக் கேட்க உள்ளேன். அவர்கள் வாக்காளர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பார்கள். அதனடிப்படையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்.
இப்போதைக்கு நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக ஜனவரி மாத இறுதியில் அறிவிப்போம். தமிழகத்தில் மரியாதைக்குரிய கட்சியாக தமாகா உள்ளது. வட மாநிலங்களில் தற்போது நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வெற்றிபெறும் என்று தகவல்கள் வருகின்றன. தமிழகத்தில் அதிமுக பெரிய கட்சி. அதேபோல, தேசிய அளவில் பாஜகவும் பெரிய கட்சி.
யாருடன் கூட்டணி: அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கட்சிககளிடம் நாங்கள் நட்பு கட்சியாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதேசமயம், நாங்கள் எந்த கட்சியுடனும் இப்போதைக்கு கூட்டணியில் இல்லை.. யார் யார் எந்தக் கூட்டணிக்கு செல்வார்கள் என்றும் தெரியவில்லை.. தமாகா, தேமுதிக, பாமக கட்சிகளே இதுவரை கூட்டணியை அறிவிக்கவில்லையே.. அதனால், என்னால் யூகமாக இப்போது எதையும் சொல்ல முடியாது. ஆனால், எதிரியை வீழ்த்த சரியான வியூகம் தேவை" என்றார்.
தற்சமயம் யாருடனும் கூட்டணி இல்லை வாசன் கூறியிருப்பது பெருத்த அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. காரணம்,
அமமுக + ஓபிஎஸ் + சசிகலா + தமாகா + பாரிவேந்தர் + ஜான்பாண்டியன் + பாமக + தேமுதிக + டாக்டர் கிருஷ்ணசாமி, இவைகளுடன் பாஜக கூட்டணி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகிறார்கள்.
பாஜக நெருக்கம்: அதேபோல, அதிமுகவைவிட, மேலிட பாஜகவுடன் வாசன் நெருக்கமாகி இருப்பதாகவும், தமாகாவை பாஜகவுடன் இணைக்கவும் முயன்று வருவதாகவும், தொடர்ந்து செய்திகள் கசிந்தபடியே உள்ளன.
பலமுறை எம்பி சீட் தருவதாக சொல்லியும், பாஜகவின் இந்த வேண்டுகோளை பலமுறை அன்புடன் மறுத்து வந்தவர் வாசன்.. இறுதியில் இந்த முறை வேறு வழியில்லாமல், தமாகா நிர்வாகிகளுடன் பரிசீலித்து, பாஜகவின் கோரிக்கையை ஏற்றுள்ளதாக தெரிகிறது. அந்த அளவுக்கு மேலிட தலைவர்களின் நம்பிக்கையையும், நேசத்தையும் பெற்றிருப்பவர் வாசன்.
எனினும், இப்போதைக்கு யாருடனும் தமாகா கூட்டணியில் இல்லை என்று உடைத்து பேசியிருப்பது பெருத்த குழப்பத்தை தந்து வருகிறது.. தனித்து போட்டியா? அல்லது பாஜகவுடன் கூட்டணியா? அல்லது அதிமுகவுடன் கூட்டணியா? என்ன முடிவெடுக்க போகிறார் மூப்பனாரின் மகன் வாசன்??? பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications