Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயரே எகிறிய "அச்சாணி".. பாஜக நிலைமை மோசமாகுமே.. 31 தொகுதி? கைமாறுதா கணக்கு? எடப்பாடி பழனிசாமி ரெடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனித்து போட்டி என்ற புள்ளியை நோக்கி தமிழக பாஜக நகர்வது போலவும் தெரியவில்லை.. அதேசமயம் அதிமுகவுடன் கூட்டணி என்பது போலவும் தெரியவில்லை. இதனால், பாஜகவுக்குள்ளேயே குழப்பம் நிலவி வருவதாக கூறப்படுகிறது.
"தனித்து போட்டி" என்ற நிலைப்பாட்டை, கடந்த ஒரு வருட காலமாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமல, மேலிட பாஜகவிடம் சொல்லி வருவதாக தெரிகிறது.

தனித்து போட்டி: "தனித்து போட்டியிடுவோம், அப்போதுதான் நமது பலம் தெரியும், ஒருவேளை, அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக இடம்பெறுவது கட்டாயம் என்றால், "ஒருங்கிணைந்த அதிமுக" என்பது கட்டாயம் கூட்டணிக்கு தேவை" என்று அழுத்தம் திருத்தமாக, அண்ணாமலை சொல்லிவிட்டாராம். இதை பாஜக தலைவர்களும் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது.

Can TN BJP alliance with AIADMK and Will Edapadi Palanisamy agree to contest ADMK in 31 constituencies

ஆனால், அண்ணாமலையின் இந்த முடிவை, தமிழக பாஜகவிலேயே சிலர் ஏற்கவில்லை என தெரிகிறது. அதிமுகவுடன் கூட்டணியை தொடர வேண்டும் என்றே பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போன்ற மூத்த தலைவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.

மூத்த தலைவர்கள்: அதற்கேற்றவாறு, சமீபத்தில் சென்னை வந்திருந்த அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷிடமும் சில சீனியர்கள் இந்த கோரிக்கையை வைத்தார்களாம்.. அதிமுக கூட்டணி இருந்தால்தான், தங்களால் ஜெயிக்க முடியும், தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது கஷ்டம், ஒருவேளை, பாஜக தனித்து போட்டியிட்டால், நாங்கள் போட்டியிடாமல் ஒதுங்கிவிடுவோம் என்று சில சீனியர்கள் சொன்னார்களாம்.

எனவே, கூட்டணியா? தனித்து போட்டியா? என்ற முடிவை பாஜக விரைவில் எடுக்கும் என்றும், அதிமுக கூடாரத்துக்குள், வெள்ளைப்புறா விரைவில் பறக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

9 தொகுதிகள்: அதாவது, 9 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளதாம்.. 31 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியதுபோக, மீதமிருக்கும் இடங்களில் அதிமுகவை ஆதரிக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.. அந்தவகையில், பாஜக போட்டியிடும் 9 தொகுதிகளில் அதிமுகவின் ஆதரவை கேட்கவும் திட்டமிட்டுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றபோது, இந்த முடிவைதான் உள்துறை அமைச்சர் அமித்ஷா சொன்னாராம்.. பாஜக 9 தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக்கு 5 தொகுதிகள் வேண்டும். புதுவையில் நாங்கள் போட்டியிடுவோம். மீதியிருக்கும் 24 தொகுதிகளில் அதிமுக போட்டியிடலாம் என்று சொன்னாராம்.. ஆனால், இதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

அதிர்ந்த எடப்பாடி: காரணம், தேர்தல் நேரங்களில் பாஜகவின் 2ம் கட்ட தலைவர்கள் அதாவது மத்திய அமைச்சர்கள்தான் சீட் பேரத்தை பேசுவார்கள். ஆனால் இப்போது நேரடியாகவே அமித்ஷா, உத்தரவிட்டுவிட்டதை எடப்பாடி பழனிசாமி எதிர்பார்க்கவில்லையாம், எனவே, "பிறகு பேசுவோம்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டாராம்.

ஆனால், பாஜக தான் சொன்ன அந்த 9 தொகுதிகளில் மட்டும் உறுதியாக இருக்கிறதாம். தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷூம், இதே 9 தொகுதிகளில் போட்டி என்பது குறித்து, தமிழக நிர்வாகிகளிடம் பேசினாராம்.
பாரிவேந்தர்: அதாவது, "தென்சென்னை, திருச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், சிதம்பரம், நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜகவும், தென்காசியில் கிருஷ்ணசாமி, வேலூரில் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் அல்லது கள்ளக்குறிச்சியில் பாரிவேந்தர், தேனியில் ஓபிஎஸ், சிவகங்கையில் டிடிவி தினகரன் ஆகிய தொகுதிகளில் மட்டுமே தீவிரமாக செயல்பட்டால் போதும். மற்ற 24 தொகுதிகளில் பாஜக கூட்டணி போட்டியிடாது. இந்த தொகுதிகளில் அதிமுக போட்டியிடும்.

ஒருவேளை அதிமுக கூட்டணிக்கு வராவிட்டால், நாம் அவர்களுக்கு ஆதரவு தருவோம்.. மற்ற 14 தொகுதிகளில் அவர்கள் வேட்பாளரை நிறுத்தாமல் இருந்தால் போதும்.. 9 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால் பல தொகுதிகளில் டெபாசிட் காலியாகும். அந்த தொகுதிகளில் நமக்கு தேசிய அளவில் கெட்ட பெயர் வரும். அதனால் தேவையில்லாத விஷப்பரீட்சைக்கு தயாராக வேண்டாம்.. அதிமுக குறித்து எந்த விமர்சனமும் வேண்டாம்" என்று சொல்லிவிட்டாராம்.
பாஜக முடிவு: அதற்கேற்றவாறு, கடந்த சில நாட்களாகவே, அதிமுக குறித்து பாஜக தரப்பில் யாருமே விமர்சிக்கவில்லை.. அதேபோல, அண்ணாமலையும் செய்தியாளர்களையும் சந்திக்காமல் இருப்பதாக தெரிகிறது. இப்படி எந்த முடிவையும் பாஜக எடுக்காமல் உள்ளதால், தொண்டர்கள் குழம்பி போய் உள்ளார்களாம்... அத்துடன் தொண்டர்களும் உற்சாகமின்றி சோர்ந்துவீட்டார்களாம்..

கூட்டணியா, தனித்து போட்டியா என்ற உறுதியான முடிவை, தேசிய தலைமை தெரிவிக்காததால், எல்லா நிலைகளிலும் குழப்பம் காணப்படுவதால், விரைவில் எடப்பாடி பழனிசாமியிடம் சமாதான பேச்சுவார்த்தை தொடங்கலாம் என்கிறார்கள்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+