₹30 கோடியாமே.. இது எப்போ?.. மேலிடம் அடித்த "சிக்ஸர்".. தீயாக இறங்கிய தமிழக பாஜக.. காரணமே இதான்.. செம
தமிழகத்தில் பாஜக புதிய டிவி சேனல் ஒன்றை விரைவில் துவங்க உள்ளதாக சொல்கிறார்கள்
சென்னை: இடைத்தேர்தலில் தமிழக கட்சிகள் தீவிரமாக இறங்கி வரும்சூழலில், பாஜகவோ, எம்பி தேர்தலுக்கு வேற லெவலில் பிஸியாகி வருகிறது.. இது தொடர்பான செய்திகளும் கசிந்து வருவது, அக்கட்சி தொண்டர்களுக்கு குஷியையும், கனத்த தெம்பையும் ஏற்படுத்தி வருகிறது.. என்ன நடக்கிறது தமிழக பாஜகவில்?
இன்றைய சூழலில் சோஷியல் மீடியா இல்லாமல் அரசியல் கட்சிகளை நடத்துவது கடினமான ஒன்று.. தமிழ்நாட்டில் அனேகமாக அனைத்து பிரதான அரசியல் கட்சிகளுமே தங்களுக்கென்று ஒரு சேனலை, அல்லது ஏதாவது செய்தி நிறுவனத்தை கையில் வைத்துள்ளன..
திமுகவுக்கு கலைஞர் செய்திகள், அஇஅதிமுகவுக்கு ஜெயா டிவி மற்றும் ஜெயா பிளஸ் நியூஸ், காங்கிரசுக்கு வசந்த் டிவி, மெகா டிவி, தேமுதிகவுக்கு கேப்டன் நியூஸ், இந்திய ஜனநாயக கட்சிக்கு வேந்தர் டிவி, நாம் தமிழர் கட்சிக்கு தமிழன் டிவி, விசிகவுக்கு வெளிச்சம் டிவி, மதிமுகவுக்கு மதிமுகம், என சேனல்கள் படர்ந்து உள்ளன.

லோட்டஸ்
அந்தவகையில், பாஜகவுக்கு லோட்டஸ் சேனல் இருப்பதாக தெரிகிறது.. ஆனால், இந்த சேனல் அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.. மற்ற அரசியல் கட்சிகள், தங்கள் சேனலை தேர்தல் சமயங்களில் பயன்படுத்தி கொள்ளும் அளவுக்குகூட, பாஜகவுக்கு அப்படி ஒரு சோர்ஸ் எங்குமே இல்லை.. அதனால்தான், தங்களுக்கும் ஒரு சேனல் வேண்டும் என்று தமிழக பாஜக நீண்ட நாட்களாகவே கோரிக்கை விடுத்து வருகிறது.. மாநில தலைவராக பொன்.ராதா இருந்தபோதே இதற்காக சில முயற்சிகளும் எடுக்கப்பட்டன. ஆனால், அந்த முயற்சிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன..

3 சேனல்கள்
இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு, தமிழக பாஜகவுக்கு சேனல் வர வாய்ப்புள்ளதாக மறுபடியும் தகவல்கள் வட்டமடித்தன.. குறிப்பாக, 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே, தமிழத்தில் பாஜகவுக்கென 3 சேட்டிலைட் சேனல்களை தொடங்க வேண்டும் என்று டெல்லி தலைமை உத்தரவு போட்டதாக சொன்னார்கள்.. அதாவது, பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே கொண்டதாக ஒரு சேனலும், பக்தி நிகழ்வுகளுக்காக ஒரு சேனலும், 24 மணி நேரமும் செய்திகளை வாசிக்கும் ஒரு சேனலும் என 3 சேனல்களை ஆரம்பிக்க போவதாக கூறினார்கள்.

ரெடி ஸ்டார்ட்
இதற்கான வேலைகளும் ஆரம்பமாகிவிட்டதாகவும், இந்த சேனல்களுக்கு ஆசிரியர்களாகவும், முக்கிய பொறுப்பிலும் யாரை நியமிப்பது என்பது குறித்த ஆலோசனைகள் நடப்பதாகவும், இதுகுறித்த விளம்பரங்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் தகவல்கள் வலம்வந்தன. ஆனால், அந்த தகவல் அதற்கு பின்என்ன ஆனது என்றே தெரியவில்லை.. மேலும், பிற மாநில தேர்தல் வேலைகளில், பாஜக மேலிடம் பிஸியாகிவிட்டது.. இப்போது மீண்டும் அதுபோலவே ஒரு தகவல் கசிந்து வருகிறது.

பிசினஸ்மேன்
டிவி சேனல் மற்றும் யூடியூப் சேனல்களை துவங்குவதற்காகவே, அரசியலுக்கு அப்பாற்பட்ட தமிழகத்தின் பிரபல தொழிலதிபர்களிடம் நிதி திரட்டும் பணி மும்முரமாகி வருவதாகவும், நூறு கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அதில் 60 கோடி வரைக்கும் வசூலாகிவிட்டதாக சொல்கிறார்கள். இந்த நிதியைத் திரட்டும் பொறுப்பை முக்கிய சீனியர் தலைவர் ஒருவரிடம் அண்ணாமலை ஒப்படைத்திருப்பதாகவும் தகவல் பரபரக்கிறது.. இதுகுறித்து நாம் தமிழக பாஜக தரப்பிலேயே தொடர்பு கொண்டு விசாரித்தபோது, இது தவறான தகவல் என்கிறார்கள்.

"ஜனம்"
"ஜனம்" என்ற ஒரு டிவி சேனலை ஏப்ரல் மாதத்தில் துவங்க போவது உண்மைதான்.. ஆனால், அதற்கு முதலீடு சுமார் 30 கோடி மட்டுமேயாகும்.. கேரளத்திலும் சரி, தமிழகத்திலும் சரி, அவர்கள் பாஜக வழங்கும் நிதியை நம்பி இந்த டிவி சேனலை துவங்கவில்லை.. பல்லாயிரக்கணக்கான தன்னார்வலர்கள் வழங்கும் நிதியின் அடிப்படையில்தான் டிவி சேனலை தொடங்க உள்ளது பாஜக" என்கிறார்கள்.. எப்படியோ, டிவி சேனல் ஆரம்பிக்க போவதாக தகவல்கள் வலம்வருவதே, அக்கட்சியின் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சியை தந்து வருகிறது..

சேனல்ஸ்
காரணம், பாஜகவை பொறுத்தவரை, இந்த முறை எம்பி தேர்தலை இப்போதே எதிர்நோக்க துவங்கிவிட்டது.. குறைந்தது 10 தாமரைகளையாவது தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு அனுப்ப தமிழக பாஜக மும்முரமாகி உள்ள சூழலில், தங்களுக்கென டிவி சேனல்கள் ஒன்று இருந்தால், அது தேர்தல் சமயத்தில் மிகவும் பயனுள்ளதாகவும், பலமுள்ளதாகவும் இருக்கும் என்பதே அக்கட்சியின் நம்பிக்கையாக உள்ளது.. இதைதான் கடந்த மாதம் ஹைதராபாத்தில் அமித்ஷா பேசிய பேச்சில் இருந்து நம்மால் அறிய முடிந்தது..
"சர்வதேச அளவில் இந்தியா தலைமை வகிக்கும். தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் குடும்ப ஆட்சிக்கு பாஜக விரைவில் முடிவுகட்டும்.

அமித்ஷா
அதுமட்டுமல்லாமல், தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கூடிய விரைவில் பாஜக ஆட்சி அமைக்கும்" என்று அமித்ஷா கூறியிருந்தார். தமிழகத்தில் ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும், காலூன்ற பாஜக இப்படி முயலுவது வழக்கம்தான் என்றாலும், இந்த முறை, அமித்ஷா ஹைதராபாத்தில் பேசிய பேச்சில், புது நம்பிக்கை அக்கட்சிக்கு படர ஆரம்பித்ததுதான், இந்த சேனல் துவக்க முக்கிய காரணம் என்கிறார்கள்.. அதற்கேற்றாற்போல், தமிழக கட்சிகளிடையே நிலவிவரும் சில பலவீனங்களும், பாஜகவுக்கு பலமாகி கொண்டிருப்பதால், விரைவில் மக்கள் முன் "ஜனம்" உதயமாகும் என்றும் அக்கட்சியினர் கனமாக நம்புகிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது












Click it and Unblock the Notifications