"பச்சக்கிளி" டெல்லி பக்கம் பறந்துடுச்சோ.. எடப்பாடியிடம் பணிந்த பாஜக?.. "கூல் லீடர்" கடைசிவரை நம்பனாரே
பாஜகவுடன் அமமுக தினகரன் கூட்டணி வைக்க போகிறாரா இல்லையா என்ற ஆர்வம் எழுந்து வருகிறது
சென்னை: இந்த முறை இடைத்தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வேட்புமனுவை வாபஸ் பெற்றது அமமுக.. இதற்கான காரணங்களும், சலசலப்புகளும் இன்னமும் ஓயாமல் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.
நடக்க போகும் இடைத்தேர்தலில், எப்படியும் 6 முனைப்போட்டி ஏற்படும் என்று கணிக்கப்பட்ட சூழலில், 4 முனைப்போட்டியே முடிவாகி உள்ளது.. இதில், ஓபிஎஸ் வேட்புமனுவை வாபஸ் வாங்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், திடீரென ட்விஸ்ட் தந்தது அமமுக..
ஈரோடு கிழக்கில் நானே போட்டியிடலாம் என்று நினைக்கிறேன் என்று டிடிவி தினகரன் வெளிப்படையாகவே அன்று சொல்லியிருந்தார்.. பிறகு வேட்பாளரையும் அறிவித்தார்..

ஹெவி குழப்பம்
ஆனால், தங்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்று சொல்லி, இடைத் தேர்தலில் இருந்து வெளியேறுவதாக அதிரடியாக அறிவித்தார்... பாஜகவும், ஓபிஎஸ்ஸும் அதிமுகவை ஆதரித்துள்ள நிலையில், தினகரனின் இந்த முடிவு பொருத்தி பார்க்கப்பட்டது.. பாஜகவை பொறுத்தவரை, இடைத்தேர்தல் தொடர்பாக, கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேலாக, ஆலோசனை கூட்டங்களை நடத்தியது.. மாநில தலைவர் டெல்லிக்கும் சென்றுவிட்டு வந்தார்.. அங்கிருந்தும் சில தலைவர்கள் சென்னை வந்து போனார்கள்.. அப்போதும் குழப்பத்துக்கு விடைகிடைக்காத நிலையே நிலவியது..

சசிகலா
அதிமுகவை ஒன்றிணைத்து இடைத்தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்ற பாஜகவின் முயற்சி தோல்வியிலும் முடிந்தது.. பாஜகவின் முடிவை நோக்கியே சசிகலா, ஓபிஎஸ் போல, டிடிவி தினகரனும் காத்து கிடந்தார். இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்துக்காகவாவது தங்களை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமியும் சரி, பாஜக தரப்பும்சரி எந்தவித அழைப்பும் விடுக்காதது அவர்களுக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது.. இதன் காரணமாகவே, தினகரன் தன்னுடைய கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்திருப்பதாக காரணம் கூறப்பட்டது.

சிதறும் வாக்குகள்
ஆனால், உண்மையிலேயே இதுவும் காரணம் இல்லையாம்.. இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே தினகரன் விரும்பினாராம்.. காரணம், இரட்டை இலை சின்னத்துக்கு எப்படியும் சிக்கல் வரும், அதை முன்னிறுத்தி 2 அணிகளும் இணையும்.. 2 அணிகள் இணைந்துவிட்டால், தனக்கும் ரூட் கிளியராகி விடும் என்றெல்லாம் கணக்கு போட்டுள்ளார்.. அதனால்தான் வேட்பாளரையும் உடனடியாக அறிவித்து, வேட்பு மனு தாக்கலும் நடந்தது.

கையை பிசைந்து
இதில் இன்னொரு கணக்கையும் தினகரன் போட்டுள்ளதாக தெரிகிறது. ஒருவேளை எடப்பாடி, ஓபிஎஸ், என தனித்தனியே போட்டியிட்டாலும், அதிமுக வாக்குகள் சிதறி, அமமுகவுக்கு சாதகமாகும் என்றே நினைத்தாராம்.. ஆனால், இலையும் எடப்பாடி பக்கம் போய்விட்டது, தினகரனுக்கே கொஞ்சம் ஷாக்தானாம்.. ஓபிஎஸ்ஸும் வேட்புமனுவை வாபஸ் வாங்க, தினகரன் கையை பிசைந்துள்ளதாக தெரிகிறது.. இந்த சூழலில்தான், நிர்வாகிகள் சிலர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஆலோசனை சொன்னார்களாம்..

வழிபிறக்கும்
"கொங்கு வேளாளர் சமூக ஓட்டுக்கள் எடப்பாடி பக்கமே செல்ல வாய்ப்புள்ளது, அதையும் மீறி நின்றால் சாதகமான முடிவு கிடைக்காது, அதனால் ஒதுங்கிவிடுவோம் என்றார்களாம். இதற்கு பிறகுதான், குக்கர் சின்னம் ஒதுக்கப்படாததால் நாங்கள் போட்டியிடவில்லை" என்ற காரணத்தை சொல்லி தினகரன் அறிவித்தாராம். எனினும், சில குழப்பத்தில் அமமுக இப்போதும் உள்ளதாக சொல்கிறார்கள்.. 2 அணிகள் இணைந்தால், அமமுகவுக்கு ஒரு வழிபிறக்கும் என்று நம்பி கொண்டுள்ள நிலையில், எடப்பாடி அதற்கு முட்டுக்கட்டை போட்டு விட்டார். பாஜக கூட்டணிக்குள் நுழைய முயற்சிகளை எடுத்தால், ஓபிஎஸ்ஸும் அதற்கு முட்டுக்கட்டை போடுவதாக தெரிகிறது.. அதனால்தான், இந்த இடைத் தேர்தலை ஒரு சாக்காக வைத்து, காய்களை எளிதாக நகர்த்தலாம் என்றிருந்த நிலையில், அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது..

முட்டுக்கட்டை
இது எல்லாவற்றையும்விட, எடப்பாடி பழனிசாமி மீதான ஆதரவு வலையை, இப்போது பாஜக அதிக வீர்யத்துடன் துவங்கிவிட்டதும் தினகரனுக்கு கொஞ்சம் ஷாக்தான் என்கிறார்கள்.. எப்படியும் பாஜகவை எடப்பாடி கழட்டிவிட்டுவிடுவார் என்று நம்பிக் கொண்டிருந்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்று சொல்லி டெல்லி பக்கம் ஐக்கியமாகி உள்ளது அதைவிட அதிர்ச்சியை தந்து வருகிறதாம்.. எனினும், எம்பி தேர்தலுக்கு நிறைய டைம் இருப்பதால், கூட்டணியில் சாதகமான விஷயங்கள் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் அமமுகவினர்..!!!
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications