அந்த இடம்.. ஸ்டாலினை ஒருமுறை பார்த்தாலே போதும்.. திமுகவில் "காத்திருந்து காத்திருந்து".. அட அதிமுக
சென்னை: ஒரே ஒரு சீட் வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணியில் இழுபறி நீடித்து வருகிறது.. இன்றைய தினம் அநேகமாக திமுக கூட்டணி சுமூக முடிவை எடுக்கும் என்றும் நம்பப்படுகிறது.
தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் ஒரு கூட்டணியாகவும், அதிமுக தனியாகவும், பாஜக தனியாகவும் தேர்தலை சந்திக்க போகின்றன.. அந்தவகையில் மும்முனை போட்டி எழும் என்று தெரிகிறது.. ஆனால் 3 இடங்களிலுமே கூட்டணி முடிவாகவில்லை.. உறுதியாகவும் இல்லை.

கூட்டணி: இதில் திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. வலுவான, பலமான கூட்டணி என்றாலும்கூட, இன்னும் இறுதி முடிவு அறிவிக்கப்படவில்லை. விசிக, மதிமுக கட்சிகளின் பேச்சுவார்த்தைகள் இழுபறியில் உள்ளன. கடந்த எம்பி தேர்தலில் விசிக திமுக கூட்டணியுடன் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருந்த நிலையில், இந்த முறை திருமாவளவன் திமுக கூட்டணியிடம் 4 தொகுதிகள் கேட்டிருந்தார்.. இதில், ஒரு பொதுத்தொகுதியும் அடங்கும்.
ஆனால், விசிகவுக்கு 2 சீட் மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. கடந்த முறை போல அல்லாமல், 2 தனித்தொகுதியில் தனி சின்னத்தில் போயிடவும் வாய்ப்பு தந்துள்ளது.
3 சீட்: எனினும், இன்னொரு சீட் வேண்டும் என்று விசிக கேட்டு வருவதால், உடன்பாடு எதுவும் எட்டப்படாமல் உள்ளது.. தொகுதி பங்கீட்டு குழுவானது, தொகுதி உடன்பாட்டில் கையெழுத்திட திருமாவை அழைத்தும், அவர் செல்லவில்லை.
அதற்கு பதிலாக உயர் மட்டக் குழுவை கூட்டி சில முக்கிய முடிவுகளை எடுத்தார்.. அப்போதுதான் 2 தனி தொகுதி + 1 பொதுத்தொகுதி என்ற முடிவு எடுக்கப்பட்டது. எனவே, முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து இதுகுறித்து விளக்க முடிவு செய்யப்பட்டு, அப்பாயிண்மென்ட்டும் கேட்டு, காத்திருப்பதாக தெரிகிறது.
விசிக - திமுக : கூடுதலாக ஒரே ஒரு தொகுதியை கேட்டாலும், அதுவும் பொதுத்தொகுதியே என்பதால், திமுக தங்கள் கோரிக்கையை நிச்சயம் பரிசீலிக்கும் என்று விசிக தரப்பில் நம்புகிறார்களாம். அந்த பொதுத்தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடவும் தயார் என்று விசிக சொல்வதால், இது திமுகவுக்கும் சிக்கலை தராது என்கிறார்கள்..
இருந்தாலும், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிவிட்டால், அனைத்து சுமூகமாக முடிந்துவிடும் என்கிறார்கள் விசிகவினர்.
இதில், 3 தொகுதிகள் என்பதை முதல்வர் பரிசீலிப்பாரா? வெறும் 2 தொகுதிகள் மட்டுமே விசிகவுக்கு ஒதுக்கப்படுமா? என்பது தெரியவில்லை. இன்றைக்குள் தொகுதி விவகாரத்தை முடிக்குமாறு முதல்வர் ஸ்டாலின், உத்தரவிட்டுள்ளதால், திமுக பேச்சுவார்த்தை குழுவும் மும்முரமாகி உள்ளது.
மதிமுக: இதுபோலவே மதிமுகவும், தங்களது கட்சிகளின் அங்கீகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியில், கூடுதலாக ஒரு தொகுதியை கேட்டு வருகிறது.. அத்துடன், தங்களது பம்பரம் சின்னத்திலேயே போட்டியிடவும் விரும்புகிறது. ஏற்கனவே காங்கிரஸ் இழுபறியில் உள்ளதால், மதிமுக, விசிக பேச்சுவார்த்தைகளும் இழுபறியில் உள்ளன.
அதனால்தான், இன்றைக்குள் விசிக, மதிமுகவிடம் பேசி முடிக்கப்பட்டு, அதற்கு பிறகு காங்கிரஸ் விவகாரத்தை திமுக மேலிடம் கவனிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், விசிக, மதிமுக என 2 கட்சிகளுமே தங்களது 1 சீட்டை விட்டுத்தர முன்வருமா என்று தெரியவில்லை.
கடைசி நேரத்தில், உடன்பாடு ஏற்படாத சூழலில் விசிக, தங்களது கூட்டணிக்கு வந்துவிடுமோ என்ற எதிர்பார்ப்பு அதிமுகவிலும் நீடிப்பதாக தெரிகிறது.
உடன்பாடு: ஆனால், "அதிமுக எத்தனை முறை அழைத்தாலும் இந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. இந்த தேர்தலில் திமுக- பாஜக இடையே தான் போட்டி போல் ஒரு மாயை ஏற்படுத்துகின்றனர்" என்று திருமாவளவன் ஸ்ட்ராங்காக சொல்லிவிட்டார்..
அதுமட்டுமல்ல, "எங்கள் மீதுள்ள கரிசனத்துக்கும், அக்கறைக்கும் ஜெயக்குமாருக்கும், அதிமுகவுக்கும் விசிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் திருமா கறாராக சொல்லிவிட்டார்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
காட்டுமன்னார்கோவிலுக்கு கிளம்பும் திருமாவளவன்.. டெல்லி துறப்பு முடிவின் பின்னணி இதுதானா? விசிக பலே -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காதுன்னு திருமாவே நினைக்கிறாரா? வருத்தப்பட்ட ஸ்டாலின்.. என்னாச்சு? -
அசுர பலம்.. சட்டசபையில் நான் இருக்கணும்! திருமா முடிவு.. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ரியல் காரணம் -
2026 தேர்தலுக்கு பின்.. அரசியலே மாறும்.. புதிர் போட்ட திருமா.. மாநில அரசியலுக்கு திரும்புவது ஏன்? -
திருமாவளவனின் புது கணக்கு.. விசிகவுக்கு பிரச்சனை! அங்கீகாரத்தை இழக்கும் கட்சி? என்ன நடக்குது? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications