அலறடிக்கும் அரசியல் கணக்கு.. "கிங் மேக்கர்" பாஜக? விஜய் கட்சி வருகையால் யாருக்கு லாபம் தெரியுமா?
சென்னை: "நடிகர் விஜய் கட்சி தொடங்கியதால், திமுகவின் வாக்குகள்தான் சிதறும்.. வரும் தேர்தலில் அதிமுக வெற்றிபெறும்" என்று மூத்த தலைவர் தம்பிதுரை நேற்றைய தினம் கூறியிருக்கும் கருத்துக்களை, எளிதாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. விஜய்யின் அரசியல் தமிழகத்தில் மாற்றத்தை நிச்சயம் என்றாலும், அது எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைதான் இங்கு ஆராய வேண்டியிருக்கிறது.
ஒருவழியாக கட்சி கொடியை அறிமுகப்படுத்திவிட்டார் விஜய்.. எதிர்பார்த்தபடியே முதல்நாளே, சர்ச்சைகளுடனும், சலசலப்புகளுடனும் தமிழக மக்களிடம் அறிமுகமானது த.வவெ. கொடி.

விஜயகாந்த்: 3 மாதங்களுக்கு முன்பு ஒருவிழாவில் விஜய் பேசியபோது, சமூகத்தில் சமநிலை வேண்டும் என்று உரக்க குரலெழுப்பிய அம்பேத்கரும், பெரியாரும், காமராஜரும் மாறி மாறி நினைவுகூரப்பட்டிருந்தனர்.. அத்துடன், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியும் அவரிடம் காண முடிந்தது.
அதேபோல, நேற்றைய தினம் கட்சி கொடியில் அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆரின் போட்டோக்கள் தென்பட்டுள்ளன.. அப்படியானால், எம்ஜிஆர், அண்ணாவை தன்னுடைய அரசியல் வழிகாட்டிகளாக விஜய் கருதுவது போல தெரிகிறது, மேலும், இருவருமே சினிமாவிலும், அரசியலிலும் சாதித்தவர்கள் என்பதால், இவர்களின் வழித்தடத்தை விஜய் பின்பற்றக்கூடும் என்றே கணிக்கப்படுகிறது.
அதிருப்திகள்: ஏற்கனவே, திமுக, அதிமுகவிலுள்ள அதிருப்தியாளர்கள் விஜய் கட்சிக்கு தாவக்கூடும் என்று செய்திகள் கசிந்த நிலையில், இதற்கான சாத்தியக்கூறுகள் இனி அதிகமாகும் என்றே சொல்கிறார்கள்.
அண்ணா, எம்ஜிஆர் என மறைந்த தலைவர்களின் பெயரை நடிகர் விஜய் நினைவூட்டுவதில் தவறில்லை.. ஆனால், திமுகவும், அதிமுகவும் இதனை எப்படி எடுத்து கொள்ள போகின்றன? என்பது தெரியவில்லை.. அதேபோல, விஜய் அரசியல் பேசப்பட்டதிலிருந்து இன்றுவரை, கலைஞர் கருணாநிதியின் பெயர் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டு வருவதாக கருதப்படுவதால், விஜய்யின் முதல் குறியே "திமுகதான்" என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
கணிப்புகள்: அதுமட்டுமல்ல, விஜய் கட்சி துவங்கிவிட்டால், திமுக கூட்டணி கட்சிகளின் பேரமும் அதிகரித்துவிடும் என்றே கணிக்க முடிகிறது.. ஏற்கனவே, தேர்தல் நேரங்களில், அதிமுகவுடன் இணைய போவதாக "போக்கு" காட்டியே, திமுக கூட்டணியில் சில கட்சிகள் சீட்டுகளை பெற்றுக் கொண்டு, இன்றுவரை திமுகவின் தயவிலேயே பலனை பெற்று வருகின்றன..
இனிவரும் தேர்தலில், அதிமுகவுக்கு பதிலாக, அக்கட்சிகள் த.வவெ-வையும் காட்டி திமுகவுக்கு போக்கு காட்டலாம். அல்லது அதிக சீட் எண்ணிக்கைக்காக, விஜய்யுடன் கூட்டணியும் வைக்கலாம். எனவே, விஜய்யையும், தன்னுடைய கூட்டணி கட்சிகளையும், திமுக எப்படி சமாளிக்க போகிறது என்பதுதான் மிகப்பெரிய ஆர்வமாக உள்ளது.
சிறிய கட்சிகள்: பாஜகவை பொறுத்தவரை பாமகவை தன்னுடனேயே கூட்டணியில் வைத்துக் கொள்ளும்.. அதிமுக, தேமுதிக கூட்டணி தொடரலாம் அல்லது, விஜய் கட்சியுடன் தேமுதிக போகலாம்... அப்போது திமுக சிறிய கட்சிகளுடனும், அதிமுக சிறிய கட்சிகளுடனும் எஞ்சி நிற்கும் சூழல் வரலாம்.
தமிழகத்தை பொறுத்தவரை, கூட்டணி அரசியலே பிரதான சக்தியாக விளங்கி வருகிறது.. ஒருவேளை கூட்டணி உடைந்தால், தேர்தலில் யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காமல் போய்விடும்.. இப்படி நடந்தாலும், பெரிய சிக்கல் திமுகவுக்குதான். ஆனால், பாஜகவுக்கு பிளஸ் பாயிண்ட்டாகிவிடும்..
கிங் மேக்கர்: சுருக்கமாக சொல்வதானால், திமுக எங்கெல்லாம் சறுக்குகிறதோ, அங்கெல்லாம் பாஜகவின் எழுச்சியாகவே பார்க்கப்பட்டு விடுகிறது.. குறைந்தபட்சம் 4 தொகுதிகளில் ஜெயித்தாலும்கூட, பாஜக "கிங் மேக்கர்" ரேஞ்சுக்கு தன்னை கருதிக்கொள்ளும்.. அந்தவகையில் விஜய்யுடன் கைகோர்க்கவும் பாஜக துணியலாம்.
இதைத்தான் நேற்றைய தினம் அண்ணாமலையின் பேட்டியும் உறுதிப்படுத்துகிறது.. "அதிமுக, திமுக பாஜக பங்காளிகள் தான். எந்த பங்காளியுடனும் சேரப்போவதில்லை. எங்கள் தலைமையில் மாமன் - மச்சான் கூட்டணி வேற்றுமையில் ஒற்றுமையாகும். நடிகர் விஜயும் மாமன் - மச்சான் தான். அவர் மாமன் - மச்சான் கூட்டணிக்கு வந்தால் ஏற்போம்" என்று அண்ணாமலை சொல்லியிருப்பது, திமுகவை "சாய்க்கவே" என்பதை கணிக்க முடிகிறது.
பாஜக - விஜய்: இன்னும் வெளிப்படையாக சொல்வதானால், விஜய்யை வைத்து, தங்களுடைய வாக்கு வங்கியை உயர்த்தி கொள்வதைவிட, திமுகவை பலவீனப்படுத்தி, அதன்மூலம் ஓட்டுக்களை சிதறடித்து, இறுதியில் தொங்கு சட்டசபை அமைத்துவிடுவதே பாஜகவின் நோக்கமாக உள்ளதாக தெரிகிறது. அப்படி, தொங்கு சட்டசபை அமைந்துவிட்டால், பாஜகவின் ஆகச்சிறந்த சாதனையாக அது பேசப்படலாம்.
எனினும், சாதி, மதம் என மக்களை பிளவுபடுத்தும் கொள்கைகளைக் கொண்ட யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை என்றும், முக்கியமாக, பாஜகவில் இருந்து வரும் யாரையும் சேர்த்துக் கொள்வதில்லை என விஜய் கட்சித்தலைமை முடிவு செய்திருக்கிறதாம்.
சீமான் - விஜய்: இதற்கு நடுவில் சீமான், விஜய் இருவரும் கூட்டணி வைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.. பாஜகவின் நோக்கமும் திமுகவின் ஓட்டுக்களை சிதறடிப்பதாக உள்ளது.. அதிமுகவின் நோக்கமும் திமுகவின் ஓட்டுக்களை பிரிப்பதிலேயே உள்ளது. ஆகமொத்தம் அனைவருமே திமுகவின் ஓட்டுக்களை குறிவைத்தே, விஜய்யின் அரசியல் துவங்கியிருப்பதாக தெரிகிறது.
ஆனால், யாருமே எதிர்பார்க்காதவண்ணம், விஜய்யிடம் நெருக்கமாக இருக்கும், மநீம தலைவர் கமல்ஹாசனை வைத்து, விஜய்யின் ஆதரவை பெற திமுக முயற்சித்தால், அதிமுக, பாஜக, தவெவெகா, சீமான் என ஒட்டுமொத்த பேரின் கனவுகளும் தூள் தூளாக சிதறவும் வாய்ப்புண்டு.
கொடி பறக்குது: இதெல்லாம் ஒருவித யூகங்கள்தான்.. இப்போதுதான் விஜய் கட்சியின் கொடி பறக்கவே ஆரம்பித்திருக்கிறது.. விஜய்யின் கொள்கை, கோட்பாடுகள், கட்சியின் பலம் இதெல்லாம் என்னவென்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள்












Click it and Unblock the Notifications